தமிழக பஞ்சாயத்து துறை வேலைவாய்ப்பு !!

0
தமிழக பஞ்சாயத்து துறை வேலைவாய்ப்பு !!
தமிழக பஞ்சாயத்து துறை வேலைவாய்ப்பு !!

தமிழக பஞ்சாயத்து துறை வேலைவாய்ப்பு !!

தமிழக ஊரக வளர்ச்சி இயக்குநரகம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் (TNRD) அலுவலகத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரபூர்வ தளத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. SQM எனப்படும் State Quality Monitors (Roads) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதால் அதற்காக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான மற்றும் திறமையும் கொண்ட விண்ணப்பத்தாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

எனவே கீழே எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பத்தாரர்கள் இறுதி தேதி வருவதற்கு முன்னரே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

நிறுவனம் TNRD
பணியின் பெயர் State Quality Monitors (Roads)
பணியிடங்கள் 13
கடைசி தேதி 25.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
TNRD காலியிடங்கள் :

தமிழக ஊரக வளர்ச்சி இயக்குநரகம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் (TNRD) அலுவலகத்தில் இருந்து State Quality Monitors (Roads) பணிகளுக்கு 13 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

TNRD வயது வரம்பு :

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோரின் அதிகபட்ச வயது வரம்பு 65 ஆகும். வயது தளர்வு குறித்த தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

கல்வித்தகுதி :

தமிழக அரசின் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பதிவுதாரர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.E/ B.Tech போன்ற பொறியியல் அல்லது தொழில்நுட்பம் சார்ந்த பட்டங்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TNRD ஊதிய விவரம் :

இந்த அரசு பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு ஊதியமாக அதிகபட்சமாக நாள் ஒன்றிற்கு ரூ.1000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

TNRD தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் personal interview மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 25.11.2020 அன்றுக்குள் பூர்த்தி செய்த தங்களின் விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

Official Notification PDF – NOTICE 1 | NOTICE 2

Application Form – Download

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!