TNRD தமிழக ஊரக வளர்ச்சி துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.50,400/-
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த அலுவலக உதவியாளர் பணிக்கு என 1 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | தமிழக ஊரக வளர்ச்சி துறை |
பணியின் பெயர் | அலுவலக உதவியாளர் |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10.08.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள்:
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் அலுவலக உதவியாளர் பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
Exams Daily Mobile App Download
TNRD அலுவலக உதவியாளர் கல்வி தகுதி:
விண்ணப்பதார்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
TNRD வயதுவரம்பு:
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை கன்னியாகுமரி ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 01-07-2022 தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
TNRD தேர்வு செயல் முறை:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
Join Our TNPSC Coaching Center
TNRD கன்னியாகுமரி ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள படி 10-ஆகஸ்ட்-2022 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.