TNRD தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 31-01-2023 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | TNRD |
பணியின் பெயர் | ஈப்பு ஓட்டுநர் |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31-01-2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
TNRD நாமக்கல் காலிப்பணியிடங்கள்:
ஈப்பு ஓட்டுநர் – 1 பணியிடம்
ஓட்டுநர் கல்வித் தகுதி:
TNRD நாமக்கல் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் 8வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வாகனம் ஓட்டுவதில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Follow our Twitter Page for More Latest News Updates
TNRD ஈப்பு ஓட்டுநர் வயது வரம்பு:
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் நாமக்கல் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 01-07-2023 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 42 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சம்பள விவரம்:
ஈப்பு ஓட்டுநர் – ரூ.19,500 – ரூ. 62,000/-
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் 31-01-2023 அன்று அல்லது அதற்கு முன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.