TNPSC VAO பணியிடங்களுக்கான கட் ஆப் மதிப்பெண்கள் – முழு விவரம் இதோ !

1
TNPSC VAO பணியிடங்களுக்கான கட் ஆப் மதிப்பெண்கள் - முழு விவரம் இதோ !
TNPSC VAO பணியிடங்களுக்கான கட் ஆப் மதிப்பெண்கள் - முழு விவரம் இதோ !
TNPSC VAO பணியிடங்களுக்கான கட் ஆப் மதிப்பெண்கள் – முழு விவரம் இதோ !

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குரூப் 4 மற்றும் VAO பணியிடங்களுக்கான தேர்வுகள் ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 689 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கு தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 22 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 12.67 லட்சம் பேர் பெண்கள், 9.35 லட்சம் பேர் ஆண்கள், 131 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது. இந்த தேர்வுக்கு 22 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், கிட்டத்தட்ட 18.5 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். அதற்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாகும் என்றும் தெரிவித்தது. இந்நிலையில் கட் ஆஃப் மதிப்பெண்கள் பற்றிய விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன. அதன் மூலம் தேர்வர்கள் எதிர்பார்க்கப்படும் கட் ஆஃப் மதிப்பெண்கள் பற்றி தெரிந்து கொள்ள முடியும்.

Exams Daily Mobile App Download
TNPSC குரூப் 4 கட் ஆஃப் மதிப்பெண்கள்:

தேர்வர்களின் கருத்துக்களை ஆராயும் போது, பொது பிரிவினருக்கு 165 – 175 வரையிலும், BC/MBC/BCM உள்ளிட்ட பிரிவினருக்கு 155-165 வரையிலும், SC பிரிவினருக்கு 150-160 வரையிலும், ST பிரிவினருக்கு 145-155 வரையிலும் கட் ஆஃப் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதில் உள்ள உட்பிரிவுகளுக்கு கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைவாக வர வாய்ப்பு உள்ளது. இந்த கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைவாக வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதில் 5 மதிப்பெண்கள் வரை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மாற்று திறனாளிகளுக்கு 140 – 145 என்ற அளவிலும், முன்னாள் ராணுவத்தினருக்கு 130-140 என்ற அளவிலும் கட் ஆஃப் வரலாம். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அனைத்து பிரிவுகளிலும் 5 வினாக்கள் வரை குறைய வாய்ப்பு உள்ளது. மேலும், பெண்களுக்கு 3 முதல் 4 மதிப்பெண்கள் வரை குறைய வாய்ப்பு உள்ளது. இதேபோல், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு ஒவ்வொரு பிரிவுக்கும் 5 மதிப்பெண்கள் வரை குறைய வாய்ப்புள்ளது.

Check Your TNPSC Group 4 Answer Key 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!