TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – தேர்வு முறை, பாடத்திட்டம்!

0
TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - தேர்வு முறை, பாடத்திட்டம்!
TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - தேர்வு முறை, பாடத்திட்டம்!
TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – தேர்வு முறை, பாடத்திட்டம்!

TNPSC குரூப் 4 தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் அதற்கான முக்கிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்புகளை தேர்வர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்து உள்ளது.

TNPSC குரூப் 4:

தமிழ்நாட்டில் நிலவி வந்த கொரோனா ஊரடங்கின் காரணமாக தமிழக அரசு பல வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிடாமல் வைத்து இருந்தது. இந்நிலையில் தற்போது ஊரடங்கின் நிறைய தளர்வுகளை விடுத்துள்ளது அரசு. அதன் காரணமாக சமீபத்தில் tnpsc குரூப் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் அறிவித்து இருந்தது. அதன் மூலம் நிறைய பட்டதாரிகள் பயன் பெற்று கொள்ளலாம் என்பதால் இந்த அறிவிப்பை அரசு தெரிவித்து உள்ளது. இதனை தொடர்ந்து அடுத்ததாக TNPSC குரூப் 4 தேர்வுகள் குறித்தும் அறிவித்து உள்ளது. குரூப் 2 தேர்வுக்கு Syllabus தயாரிப்பு பணி ஓரிரு தினங்களில் முடிவு பெறும் என்றும், மார்ச் மாதத்தின் மத்தியில் குரூப் 4 தேர்வுக்கான அட்டவணையை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் முன்னரே தெரிவித்து இருந்தனர்.

Post Office இன் சூப்பர் சேமிப்பு திட்டம் – மாதம் ரூ.10 ஆயிரம் முதலீட்டில் 16 லட்ச ரூபாய் ரிட்டன்ஸ்!

இந்நிலையில் சமீபத்தில் TNPSC குரூப் 4 தேர்வுக்கான தேர்வு முறை குறித்த விளக்கத்தை தேர்வர்களுக்கு அளித்து உள்ளது. அது என்னவென்றால், தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் ஓஎம்ஆர் வகையில் இருக்கும். மேலும் Syllabus, பொது அறிவில் 75 வினாக்கள், திறனறிவு மற்றும் புத்திகூர்மை 25 வினாக்கள், பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் நூறு வினாக்கள் இருக்கும். இந்த தேர்வில் மொத்தம் 200 மதிப்பெண்கள் வழங்கப்படும். இது தவிர இந்த தேர்வுக்கு 3 மணி நேரம் கால அவகாசம் தரப்படும் என்று அறிவித்து உள்ளனர்.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் சரியான பதில்களுக்கு தலா 1.5 மதிப்பெண் வழங்கப்படும் தவறான பதில்களுக்கு எந்த மதிப்பெண் குறைப்பும் செய்யப்படாது. அடுத்தாக, பொது அறிவியல், நாட்டு நடப்புகள், புவியியல், இந்தியா மற்றும் தமிழகத்தின் வரலாறு மற்றும் கலாசாரம் இந்திய அரசியல், இந்தியப் பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம் ஆகியவற்றை பொது அறிவு பிரிவில் இருந்து வினாக்கள் கேட்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!