TNPSC காலிப்பணியிடங்கள், மாதம் ரூ.1,19,500 சம்பளம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
TNPSC காலிப்பணியிடங்கள், மாதம் ரூ.1,19,500 சம்பளம் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
TNPSC காலிப்பணியிடங்கள், மாதம் ரூ.1,19,500 சம்பளம் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
TNPSC காலிப்பணியிடங்கள், மாதம் ரூ.1,19,500 சம்பளம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தொழில்கள் மற்றும் வணிகத் துறையில் மொத்தம் 3 வேதியியலாளர் பணியிடங்களுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், பதவிக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC பணிவாய்ப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு தொழில்துறை மற்றும் வணிகத் துறையில் மொத்தம் 3 வேதியியலாளர் பணியிடங்களுக்கு மாதம் ரூ. 37,700- 1,19,500 (நிலை-20) ஊதியத்தில் வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

TN’s Best Coaching Center

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஜனவரி 23, 2022 வரை விண்ணப்பிக்கலாம். பணிக்கான ஆட்சேர்ப்புத் தேர்வு மார்ச் 19, 2022 அன்று இரண்டு அமர்வுகளாக நடைபெறும். முதல் அமர்வு காலை 9.30 முதல் மதியம் 12.30 வரை மற்றும் இரண்டாம் அமர்வு 2.00 முதல் மாலை 5.00 வரை நடைபெறும்.

தகுதிகள்:

விண்ணப்பதாரர்களுக்கு ஜூலை 1, 2021 அன்று 18-32க்குள் வயது இருக்க வேண்டும். ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு அதிக வயது வரம்பு இல்லை. M.Sc இல் முதல் அல்லது இரண்டாம் வகுப்பு பட்டம். வேதியியல் அல்லது வேதியியல் தொழில்நுட்பம் அல்லது தொழில்துறை வேதியியல் அல்லது வேதியியலாளர்கள் நிறுவனத்தின் (இந்தியா) அசோசியேட்ஷிப் டிப்ளோமா ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று பெற்றிருக்க வேண்டும். தூய அல்லது பயன்பாட்டு வேதியியல் அல்லது பகுப்பாய்வு வேதியியலில் இரண்டு ஆண்டுகளுக்கு குறையாமல் ஆராய்ச்சியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுகள் முறை:

பணிக்கான தேர்வுகள் எழுத்து வடிவில் முதன் நிலையிலும், நேர்காணல் வடிவில் இரண்டாம் நிலையிலும் இருக்கும். எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு ஆகியவற்றில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதித் தேர்வு நடத்தப்படும்.

TN TRB 2207 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – தேர்வர்கள் சங்கம் கோரிக்கை!

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் பதிவுக் கட்டணமாக ரூ. 150 மற்றும் பூர்வாங்க தேர்வு கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும். ஒதுக்கப்பட்ட வகை விண்ணப்பதாரர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

  • TNPSC இணையதளத்தின் tnpsc.gov.in  க்கு செல்ல வேண்டும்.
  • அதில்,உங்களை பதிவு செய்து கொள்ள ‘புதிய பயனர்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்பொழுது மெயின் பக்கத்தில் உள்ள ‘ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • அதில், தேவையான விவரங்களை உள்ளிட்டு பதவிக்கான விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும்.
  • ஆவணங்களை பதிவேற்றம் செய்த பின்னர் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
  • விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பித்த பின்னர் அதன் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
  • TNPSC விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ள வேண்டும்

    Velaivaippu Seithigal 2021

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!