சித்தாந்தங்கள்

0
சித்தாந்தங்கள்
 • வட இந்தியாவில் பக்தி இயக்கம் தீவிரமாகக் காரணம் – இஸ்லாமியர் படையெடுப்பு
 • பக்தி என்பதன் பொருள் – வழிபாடு
 • பஞ்சாபில் சீக்கிய சமயம் தோன்றக்காரணம் – பக்தி இயக்கம்
 • தமிழகத்தில் வைதீக ஒழுக்க நெறி,சமயம், கலை இலக்கியம் பண்பாடு ஆகியவற்றில் மறுமலர்ச்சி ஏற்பட்ட காலம்  – கி.பி. 7 -ம் நூற்றாண்டு பிற்பகுதி.
 • 8 – ம் நூற்றாண்டில் தோன்றிய ஆழ்வார்கள் -ஆண்டாள், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார்

அத்வைதம்:

 • தோற்றுவித்தவர் – சங்கரர்
 • கி.பி. 788ல் கேரளாவில் காலடியில் (வடதிருவாங்கூர்) பிறந்தவர்.
 • புத்த, சமணக்கொள்கைகளை எதிர்த்தார்.
 • இதற்கு வேதாந்த மதம் என்று பெயர்
 • இதனை பின்பற்றுவோர் – வேதாந்திகள்.
 • வேதவியாசர் இயற்றிய பிரம்மசூத்தித்திற்கும், பகவத்கீதைக்கும், தசோபநிஷத்துகளுக்கும் அத்வைத சித்தாந்தப்படி பாஷ்யம் செய்துள்ளார்.
 • இம்மூன்றையும் ‘ பிரஸ்தானதிரயம்’ எனக் கூறுவர்.
 • சைவ, வைணவ பேதமற்றவர். விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் இயற்றியுள்ளார்.
 • தமது 32-வது வயதில் முக்தி பெற்றார். கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிஷ்டை, கூடல் முதலியவற்றால் நிலைபெற்ற பேரின்பத்தை அடைந்து பிரம்ம மயமாவதே முக்தி.
 • அ + த்வைதம். அ – இல்லை. த்வைதம் – இரண்டு. அத்வைதம் – இரண்டற்ற ஒன்று.
 • அகம்பிர்மாஸ்மி – நான் பிரம்மமாயிருக்கின்றேன்.
 • அத்வைதம் (அ) அத்விதீயம் – இதன் வேறுபெயர் – கேவலாத்து விதம்.
 • முக்கிய உபநிஷத்துகளின் முடிவு பிரம்மம் ஒன்றே, உள்பொருள் உலகம் பிரம்மத்தின் தோற்றமே” என்பது இவரின் கொள்கையாகும்.

விசிஷ்டாத்வைதம்:

 • தோற்றுவித்தவர் – இராமானுஜர். ஸ்ரீபெரும்புதூரில் 1017-ல் பிறப்பு.
 • 18-வயதில் ஸ்ரீரங்கம் சென்று பெரியநம்பியை சந்தித்து கொள்கை கற்று துறவு பூண்டார்.
 • பிரமசூத்திரம், பகவத்கீதைக்கு பாஷ்யம் இயற்றியுள்ளார்.
 • சங்கரர் கொள்கையினை மறுத்தார்.
 • சித்து, அசித்து, பரமபிரமம் ஆகியவை ஒன்றாகவே உள்ளன.
 • பக்தி இயக்கத்தின் முன்னோடி.வைணவ முனி என அழைக்கப்பட்டார்
 • திருக்கோட்டியூர் என்ற இடத்தில் நமொ நாராயணா என்ற மந்திரத்தை போதித்தார்.
 • கடவுளை அன்புக்கடல், அழகின் இருப்பிடம் எனக் கருதினார்.
 • இவரின் போதனைகள் கீதை, உபநிடதத்தை அடிப்படையாக கொண்டவை.
 • ஆலய நுழைவு இயக்கத்துக்கு முன்னாடி என அழைக்கப்பட்டது.
 • பேரின்பத்தை அடைய பக்தியே சிறந்த நெறி என்றார்.
 • நீலகண்டசிவாச்சாரியார் – கோகர்ணத்தில் பிறந்த தெலுங்கர்.
 • பிரமசூத்திரத்திலுள்ள பாஷ்யத்திற்கு சைவ விசிஷ்டாத்வைத முறைப்படி பாஷ்யம்.
 • எழுதியவர் – நீலகண்டசிவாச்சாரியார். இதற்கு ‘நீலகண்டபாஷ்யம்” எனப்பெயர்.

துவைதம்(பேதாவாதம்):

 • தோற்றுவித்தவர் – மத்துவர் எனும் ஆனந்ததீர்த்தர்.
 • இயற்பெயர் – வாசுதேவன்.
 • இவர் துளுவநாட்டில் உடுப்பிக்கருகில் அநந்தேசுவர கிராமத்தில் பிறந்தார்.
 • காலம் 1238 – 1318. 9 வயதில் அச்சுதபிரகாசரின் சீடராகி துறவியானார்.
 • பிரமசூத்திரம், கீதை, தசோபநிஷத் போன்றவற்றிற்கு துவைத முறைப்படி
  பாஷ்யம் இயற்றியுள்ளார்.
 • 37 பெரிய கிரந்தங்களை இயற்றியுள்ளார்.
 • துவி என்றால் இரண்டு எனப்பொருள். ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறுவேறு.
 • பிரம்மா முதலிய தேவர்கள் ஜீவர்களே. பிறப்பு, இறப்பு உண்டு. ஸ்தூலதேகம் உண்டு.
 • கர்மம் தீர்ந்தால் மோட்சம் உண்டாகும்.
 • திருமாலே உயர்ந்த தெய்வம், அவருக்கு செய்யும் பக்தியே முக்திக்கு சாதனம் என்றார்.
 • மத்துவர் கொள்கைகளின் சுருக்கம் – உயிர்களின் அடிப்படைக் குணங்களாகிய சத்துவம், ராசசம், தாமசம் என்ற வகையிலே அவை பெறும் முக்திநிலைகள்.
  1) இன்பமே உள்ள முக்தி 2)இன்பம் மற்றும் துன்பம் கலந்த முக்தி 3)துன்பமே உள்ள
  முக்தி
 • துறவு, பக்தி, தியானத்தின் மூலம் வீடு பேறு அடையலாம் என்பது இவர் கோட்பாடு

இராமானந்தர்:

 • இராமனுஜரின் சீடர்.
 • இந்தியில் இராமனுஜரின் போதனைகளை வட இந்தியபகுதிகளில் பரப்பியவர்.
 • இந்தியில் கருத்துக்களை போதித்த முதல் சீர்திருத்தவாதி.
 • கடவுள் பார்வையில் அனைவரும் சமம். உயர்வு, தாழ்வு என்ற பேதம் கிடையாது
 • இராமானந்தரின் கூற்று.
 • சீடர்கள் – 12 பேர் (முக்கியமானோர் -கபீர்தாசர், பத்மாவதி

வல்லபாச்சாரியார்:

 • பிறப்பு – கி.பி.1479 – ல் வாரணாசி
 • இறுதியாக தங்கிய இடம் – பனாரஸ் (வாரணாசி)
 • இவர் போதித்த தத்துவம் – சுத்த அத்வைதக்  கோட்பாடு ( தூய ஒரு பொருள் கோட்பாடு)
 • இவர் போதித்த கோட்பாடு – புஷ்டி மார்க்கம்
 • இவரின் சீடர்களில் அஷ்டசாப் என்ற எட்டு கவிஞர்கள் இருந்தன
 • கிருஷ்ணனே பிரம்மம் பக்தியுடன் முக்தியடைந்து பரமாத்மாவுடன் ஆத்மா கலந்து கொள்ளலாம் என்பது இவரின் கொள்கையாகும்

நாமதேவர்: 

 • பிறப்பு மஹாராட்டிராவில் உள்ள பண்டரிபுரம்
 • இவரின் கொள்கை உண்மை உண்மை பக்தி, கடவுள் வழிபாடு
 • சலவைத் தொழிலாளியின் மகன்.
 • விஷ்ணுவை “வித்தோபா” என அழைத்தவர்.
 • உருவ வழிபாடு புரோகித சடங்குகளை எதிர்த்தார்
 • உன்னையே உற்றுப்பார்த்து ஹரியின் பெயர் நாடு என்றார்
 • இவரின் பாடல்கள் சீக்கியரின் குருகிரந்தசாஹிப் என்ற புனித நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.

சைதன்யர்:

 • பிறப்பு-  வங்காளத்தில் உள்ள நாடியா என்ற இடம் கி.பி.1485
 • வங்காளத்தைச் சேர்ந்த இவர் தீவிர கிருஷ்ண பக்தர்.
 • 24 – ம் வயதில் துறவு பூண்டார்.
 • இவரின் சீடர்கள் இவரை விஷ்ணுவின் அவதாரமாக கருதினர். மகாபிரபு என
  அழைத்தனர்.
 • கடவுளின் புகழை பொது இடங்களில் பாடும் சங்கீர்த்தனம் என்ற முறையை கொண்டு வந்தார்.

துளசிதாசர்:

 • “கோசாமி” என்று அழைக்கப்பட்ட இவர் இராமபக்தர்.
 • இராமாயணத்தை இந்தியில் மொழிபெயர்த்தார். இந்நூலின் பெயர் -இராமசரிதமனஸ்.
 • ஹிந்தி மொழியில் ஜானகிமங்கள், பார்வதி மங்கள் என்ற நூல்களை எழுதினார்.
 • இவர் எழுதிய மற்றொரு நூல் – அனுமன் சாலீஸா (40 பாடல்கள்)

மீராபாய்:

 • இராஜபுத்திர இளவரசி
 • தீவிர கிருஷ்ணபக்தரான இவர் இராஜஸ்தானி மொழியில் பக்தி பாடல்கள் பாடினார்.
 • வாழ்நாளின் பெரும்பகுதியை கிருஷ்ணன் பிறந்த இடமான மதுராவிலும்,
  வளர்ந்த இடமான பிருந்தாவனத்திலும் கழித்தார்.
 • மேவார் தலைநகர் சித்தூரில் இவருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது.
 • பிறப்பு – இறப்பு சுழற்சியில் இருந்து விடுபட்டு பேரின்ப நிலையை அடைய கிருஷ்ண பக்தி அவசியம் என்பது இவர் கருத்து
 • எளிய பக்தியும் நம்பிக்கையுமே வீடு பேறு அடைய வழி என்றார்

குரு இராமதாசர்: 

 • சத்ரபதி சிவாஜியின் குரு.
 • கடவுள் முன் அனைவரும் சமம் என்பது இவர் கருத்து.
 • சமயக் கொள்கை உபதேசித்ததுடன், சிவாஜி மூலம் ஒரு தேசம் உருவாக
  காரணமாகயிருந்தவர்

துர்க்காராம்:

 • மகாராஷ்டிர துறவி.
 • கிருஷ்ணனை பாண்டுரங்கன் என அழைத்தார்.
 • இவரின் பக்தி பாடல்கள் – அபங்கங்கள அபங்கங்கள அபங்கங்கள் எனப்படும்.

ஞானேஸ்வரர்:

 • மகராஷ்டிராவில் பிறந்த இவர் விஷ்ணுவை கிருஷ்ணன் வடிவிலும், லித்தோபா
  வடிவிலும் வணங்கியவர்.
 • பகவத் கீதையை மராட்டிய மொழியில் மொழி பெயர்த்தார். இதன் பெயர் ஞானேஸ்வரி.

நிம்பர்கர்:

 • கோதாவரி நதிக்கரையில் பிறந்து மதுராவிற்கருகே பிரிஜா என்ற இடத்தில் வாழ்ந்தார்
 • ராதா – கிருஷ்ண வழிபாடு  செய்தார் இவரின் கொள்கை பேதா பேதம்
 • தத்துவம் – துவைதாத்வைதம்: இராமனுஜரின் சமகாலத்தவர்.
 • சத்-வைணவம் என அழைக்கப்படுவது – நிம்பர்கரின் வைணவம்.

ஏகநாதர்:

 • பிறப்பு –  மஹாராட்டிராவில் பைத்தா என்ற ஊரு
 • கண்ணனின் தீவிர பக்தர் பெரிய பாகவத புருஷர்

சூர்தாசர்:

 • இவர் எழுதிய சூர்சகார் என்ற நூல் கண்ணனை குழந்தையாக கருதுகிறது
 • “வாழ்வு ஒரு விளையாட்டு” , வீர தீர செயல், ஆனால் போராட்டம் அன்று என கூறினார்.

பசவர்:

 • கன்னடத்தில் வசித்த “லிங்காயத்” என்ற வீர சைவ வகுப்பை சேர்ந்தவர்.
 • சிவனே உயர்ந்த கடவுள் என்றார்.
 • இவரை பின்பற்றுவோர் லிங்காயத்துக்கள் எனப்படுகின்றார்

Pdf Download

TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download

TNPSC Current Affairs in Tamil 2018

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!