ஆழ்வார்கள்

0

ஆழ்வார்கள்

ஆழ்வார்கள் அம்சம் பாசுரங்கள் இயற்றிய நூல்கள் 
பொய்கையாழ்வார் பஞ்சசன்யம் 100 முதல் திருவந்தாதி
பூதத்தாழ்வார் கதை 100    2-ம் திருவந்தாதி
பேயாழ்வார் நந்தகம் (வாள்) 100 3-ம் திருவந்தாதி
திருமழிசையாழ்வார் சக்கரம் 216  திருச்சந்தவிருத்தம் 120
நான்முகன்திருவந்தாதி 96
மதுரகவியாழ்வார் வைநதேயர் 216 கண்ணின் நுண் சிறுத்தாம்பு
நம்மாழ்வார் நாம்சம் 1296 திருவாய்மொழி
குலசேகரர் கௌஸ்துபம் 105  பெருமாள்திருவாய்மொழி
பெரியாழ்வார் கருடன் 473 திருப்பல்லாண்டு, பெரியாழ்வார்திருமொழி.
ஆண்டாள்  பூமி 173 திருப்பாவை 30, திருமொழி 140
தொண்டரடி பொடியாழ்வார் வைஜயந்தி (எ) வனமாலை 55 திருமாலை, திருப்பள்ளியெழுச்சி, திருமறை திருமலை திருப்புகழ்ச்சி
திருப்பாணர் வத்சம் 10 அமலான் ஆதிபிரான்
திருமங்கை சாரங்கம் (வில்) 1361 ஆறு அங்கங்கள்
  • திவ்விய பிரபயதத்தை அருளியதால் – திராவிடாச்சாரியர்கள் எனப்படுவர்.
  • இருயதமிழ் புலவர்கள் , ஆதிபக்தர்கள் என்ற பெயராலும் அழைக்கப்படுவர்.
  • முற்காலத்து ஆழ்வார்கள் – பொய்கையாழ்வார் , பேய் ஆழ்வார் , திருமழிசை ஆழ்வார்.
  • இடைக்காலத்து ஆழ்வார்கள் – நம்மாழ்வார் , மதுரகவியாழ்வார் , குலசேகர ஆழ்வார், பட்டர்பிரான் என்ற பெரியாழ்வார் , கோதை நாச்சியார் என்ற ஆண்டாள்
  • பிற்காலத்து ஆழ்வார்கள் – தொண்டரடிப் பொடியாழ்வார் , திருப்பாணாழ்வார், கலியன் என்ற திருமங்கை ஆழ்வார்.
  • முதலாழ்வார்கள் எனப்படுவோர் – பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்.

பொய்கையாழ்வார் 

  • பிறப்பிடம் – கச்சி (காஞ்சி) நகரிலுள்ள திருவெ:.கா
  • அவதரித்த மலர் – தாமரை
  • நட்சத்திரம் – ஐப்பசி திருவோணம்.
  • அம்சம் – பஞ்சசன்யம் (சங்கு)
  • இஷ்டதெய்வம் – திருப்பதி ஏழுமலையான்
  • அருளிய திருநாமம் – ‘வேங்கடவர் திருமலையை விரும்புமவன் வாழியே”
  • அருளியது – முதல் திருவயதாதி
  • “நயவேன் பிறர்பொருளை, நன்னேன் கீழாரோடு” எனத் தொடங்கும் பாடலைப் பாடியுள்ளார்.

பூதத்தாழ்வார் 

  • பிறப்பு – தொண்டைநாட்டிலுள்ள திருக்கடல்மல்லை(மாமல்லபுரம்)
  • அவதரித்த மலர் – குருக்கத்தி மலர்
  • நட்சத்திரம் – ஐப்பசி அவிட்டம்.
  • அம்சம் – கௌமோதகி எனும் கதாயுதம்.
  • இஷ்டதெய்வம் – ஸ்ரீரங்கம் திருவரங்கர்.
  • அருளிய திருநாமம் – ‘பொன்புரையும் திருவரங்கப் புகழுரைத்தான் வாழியே”
  • அருளியது – 2 -ம் திருவயதாதி
  • “ அன்பே தகழியா , ஆர்வமே நெய்யாக” எனத் தொடங்கும் பாடலைப் பாடியுள்ளார்.

பேயாழ்வார்

  • பிறப்பு – மயிலாப்பூர்
  • அவதரித்த மலர் – செவ்வல்லிப்பூ
  • நட்சத்திரம் – ஐப்பசி சதயம்.
  • அம்சம் – நந்தகம் (வாள்)
  • இவரின் வேறுபெயர் – மஹதாஹ்வயர் (திருமழிசையாழ்வாரை திருத்தியதால்)
  • இஷ்டதெய்வம் – திருக்கோவிலூர் இடைகழியில் உள்ள திருமால்
  • அருளிய திருநாமம் – ‘நேமிசங்கண் வடிவழகை நெஞ்சில் வைப்போன் வாழியே”
  • ‘திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்” – பேயாழ்வார்.
  • அருளியது – 3 -ம் திருவயதாதி
  • “அது நன்று இது தீது என்று ஐயப்படாதே“ எனத் தொடங்கும் பாடலைப் பாடியுள்ளார்.
  • முதல் மூன்று ஆழ்வார்கள் சந்தித்த இடம் – திருக்கோவிலூர் இடைகழி.

திருமழிசையாழ்வார்(புகழ்மழிசை ஐயன்)

  • பிறப்பு -திருமழிசை
  • அம்சம் – தயீருவாடியீ (சக்கர அம்சம் )
  • சிவவாக்கியர் என்ற பெயருடன் சைவ சமயத்தில் இருயதார். பேயாழ்வார் மூலம் வைணவத்திற்கு மாறினார்.
  • அருளியது – நான்முகன் திருவயதாதி , திருச்சயத விருத்தம்
  • எல்லாம் திருமால் என எண்ணுகிறார்
  •  “தன்னுள்ளே திரைத்தெழும் தரங்கவென் தடம்போல்“ எனத் தொடங்கும் பாடலைப் பாடியுள்ளார்.

நம்மாழ்வார்(அருள்மாறன்)

  • பிறப்பு -18 திருப்பதிகளையுடைய பாண்டிநாட்டில் தாமிரபரணி கரையில் ஆழ்வார்திருநகரியில் (திருக்குருகூர்)
  • நட்சத்திரம் – வைகாசி விசாகம்
  • அம்சம் – திருக்குறுங்குடி நம்பியின் அம்சமும், ஸ்ரீகௌஸ்துபம் எனும் இரத்தினாம்சமும், ஸேனை முதலியோரது அம்சம்
  • சிறப்புப் பெயர்கள் – மாறன் , சடகோபன் , பராங்குசன் , வகுளபூஷணன்
  • இவர் பாடிய பாசுரங்களை நான்காவது ஆயிரம் என்பர்
  • இவர் பாடிய மொத்த பாசுரங்கள் – 1296
  • உலகப் பற்றினை விட்டு இறைவனை சரண் அடையதால் அனைத்தும் பெறுவது எளியது என்றார்
  • “வீடுமின் முற்றவும் , வீடு செய்து உம்முயிர் என்ற பாடலைப் பாடியுள்ளார்
  • சடம் எனும் வாயுவை ஓட்டி ஒழித்ததினால் ‘சடகோபன்” என பெயர் பெற்றார்.
  • இவர் 16 வயது வரை மௌனமாய் இருந்தார். ஸேனை முதலியார் இவருக்கு திருவிலச்சினை செய்து, உபதேசம் செய்து வைஷ்ணவராக்கினார்.
  • இவர் எழுதிய நூல்கள் – திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி. இந்நான்கும் ‘நான்கு வேதங்கள்” எனப்படுகின்றன.
  • ‘பொய்யில்பாடல்” என அழைக்கப்படுவது – திருவாய்மொழி.
  • ‘மாறி மாறி பல பிறப்பும் பிறந்து” – திருவாய்மொழி
  • இவர் அவதரிக்கும்போதே இறைவனிடம் பேரன்பு கொண்டதால் இவர் இறைவன் மீது கொண்டுள்ள பக்தியை ‘ஸஹஜபக்தி” எனக் கூறுவர்.
  • இஷ்டதெய்வம் – கிருஷ்ணன்.
  • இவர் ‘கிருஷ்ணத்ருஷ்ணாதத்வம்” என்று கொண்டாடப்பட்டவர்.
  • ‘ஆழ்வார்களுக்கெல்லாம் தலைவர்” எனப் போற்றப்படுபவர் – நம்மாழ்வார்.

குலசேகராழ்வார்(சேரலர்கோன்)

  • தந்தையார் – சேரநாட்டில் கோழிக்கோடு(திருவஞ்சிக்களம்) எனும் இராஜதானியில் அரசுபுரிந்த திரடவிருதன்.
  • பிறப்பு – மாசி புனர்பூச நட்சத்திரம்
  • அம்சம் – ஸ்ரீகௌஸ்துப மணி
  • இயற்பெயர் – கௌஸ்துபாமசரர், சேரலர்கோன்.
  • சிறப்பு பெயர்கள் – கொல்லிகாவலன், கூடல்நாயகன், கூடலர்கோன், கோழிக்கோன்குலசேகரன்.
  • இவர் வடமொழியில் பாடியது – முகுந்தமாலை.
  • இவர் இராமபிரானை வழிபட்டவர்.
  • இவர் பாடிய பிரபந்தம் – பெருமாள்திருமொழி.

பெருமாள் திருமொழியில் கூறப்படும் பொருள்கள் :

முதல் மூன்று திருமொழிகள்  ஸ்ரீரங்கம் கோயிலைப் பற்றியது
4-ம் திருமொழி திருவேங்கடத்தைப் பற்றியது
5-ம் திருமொழி  விற்றுவக்கோட்டையைப் பற்றியது
6-ம் திருமொழி ஆய்ச்சியர் ஊடலைப் பற்றியது
7-ம் திருமொழி தேவகியின் புலம்பலைப் பற்றியது
8-ம் திருமொழி  நாமரின் தாலாட்டைப் பற்றியது
9-ம் திருமொழி தசரதன் புலம்பலைப் பற்றியது
10-ம் திருமொழி இராமாயணக் கதைச் சுருக்கம்

பெரியாழ்வார் (துய்யபட்டநாதன் (அ) பட்டர்பிரான்)

  • பிறப்பிடம் – ஸ்ரீவில்லிபுத்தூர்
  • குலம் – வேயர்குலம்
  • நட்சத்திரம் – ஆனி சுவாதி
  • அம்சம் – கருடாம்சம்
  • இயற்பெயர் – விஷ்ணுசித்தர்.
  • வடபெருங்கோயிலுடையானுக்கு திருமாலை கட்டி சமர்பித்து வந்தார்.
  • இவர் அருளியது – திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி.
  • நாராயணர் இவர் கனவில் கூறியபடி, மதுரை பாண்டியன் அவைக்களம் சார்ந்து திருமாலே பரம்பொருள் என நிறுவிக் கிழியை இறுத்தார்.
  • நாலாயிர திவ்விய பிரபயதத்தில் முதல் பாடல் இவருடையது
  • வரலாற்று குறிப்புகள் உள்ளடங்கிய பாடல்களை பாடியவர் – பெரியாழ்வார்

தொண்டரடிபொடியாழ்வார் (அன்பர்தாளிதூளி)

  • பிறப்பு – சோழநாட்டில் கும்பகோணம் திருமண்டங்குடி
  • நட்சத்திரம் – மார்கழி கேட்டை
  • அம்சம் – திருமாலது வைஜயந்தி எனும் வனமாலை
  • குலம் – பிராமணர்
  • ஸ்ரீரங்கம் பெருமாளை வழிபட்டார்.
  • இயற்பெயர் – விப்ரநாராயணர்.
  • இயற்றிய நூல்கள் – திருமாலை, திருப்பள்ளியெழுச்சி, திருமறைதிருமலை திருப்புகழ்ச்சி
  • “ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை வலியுறுத்தினார்.

திருப்பாணாழ்வார் (நற்பாணன்)

  • பிறப்பு – சோழநாட்டு உறையூர்
  • நட்சத்திரம் – கார்த்திகை மாத ரோகிணி
  • அம்சம் – ஸ்ரீவத்ஸத்தின்(திருமறு) அம்சம்
  • அந்தணனது நெற்பயிர்கதிரில் பிறந்ததால் முதலாழ்வார்களை போல ‘அயோனிஜர்”
    எனப்பட்டார்.
  • இவர் ஒரு கானஞானி. இவரை ஸோகஸாரங்கமாமுனிகள் தோளில் ஏற்றி ஸ்ரீரங்கம்
    பெருமாள் முன்விட்டார்.
  • இவர் ‘அமலான் ஆதிப்பிரான்” எனும் பாசுரம் பாடி இறைவனோடு ஐக்கியமானார்.
  • இவர் பாடல் பெரும்பாலும் அரங்கநாதனைப் பற்றியதாகும்
  • இறைவன் முன் ஏற்றத்தாழ்வு இல்லை என்பது இவரின் கோட்பாடு.

திருமங்கையாழ்வார்(நற்கலியன்)

  • பிறந்த இடம் – சோழநாட்டு திருவாழிதிருநகரி எனும் திவ்விய தேசத்துக்கு
    அருகேயுள்ள திருக்குறையலூர்
  • பிறபெயர்கள் – நீலன், பரகாலன், கலியன், மங்கைவேந்தன், ஆலிநாடான்,
    நாலுகவிபெருமாள்.
  • பிறப்பு – சேனைத்தலைவன் மகனாய் கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரம்
  • அம்சம் -திருச்சாரங்கத்தின்(வில்) அம்சம்.
  • மனைவி – குமுதவல்லி
  • வயலாலி மணவாளனிடம் மந்திர உபதேசம் பெற்றவர்.
  • பெரியபெருமாள்(ஸ்ரீரங்கம்) சந்நிதியில் திருப்பணி செய்தவர்.
  • இவர் எழுதியவை – பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம்
    திருவெழுக்கூற்றிருக்கை, சிறிய, பெரிய திருமடல், என்ற ஆறு பிரபந்தங்கள்(இவை
    ‘மாறன் பணித்த தமிழ் மறைக்கு அங்கங்கள்” என கூறப்படுகின்றன)
  • • திருவரங்க கோவிலின் சுற்றுசுவர் கட்டியவர் . சைவ நெறியிலும் ஈடுபாடு கொண்டவர்
  • மன்னுமலை அரையன் பொற்பாவை என்ற சிவன் பாடலைப் பாடியுள்ளார்

ஆண்டாள்

  • இயற்பெயர் – சுரும்பார் குழல் கோதை.
  • சிறப்புப் பெயர்கள் – கோதை , சூடிக்கொடுத்த நாச்சியார். பிறப்பு – திருவில்லிப்புத்துர்
  • பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள்
  • பாடியது – நாச்சியார் திருமொழி , திருப்பாவை
  • “அஞ்சுகுடிக்கு ஒரு சந்ததி” எனக் கொண்டாடப்படுபவர் – ஆண்டாள்.

மதுரகவியாழ்வார்

  • பிறப்பு – பாண்டிய நாடு திருநெல்வேலி, ஆழ்வார்திருநகரருகே திருக்கோளுர்
  • நட்சத்திரம் – சித்திரை மாத சித்திரை
  • அம்சம் – கணநாதரான குமுதரது அம்சம்
  • சூரியோதத்திற்கு அருணோதயம் போன்று நம்மாழ்வார் அவதாரத்திற்கு முன் மதுரகவியாழ்வார் பிறந்தார்.
  • பாடிய பிரபந்தம் – ‘கண்ணின் நுண் சிறுத்தாம்பு” (நம்மாழ்வார் பற்றி பாடியது)

நாதமுனிகள்

  • நம்மாழ்வாரால் அருளப்பட்டவர்.
  • விசிஷ்டாத்வைதம் அழியும்போது அதனை நன்கு பரப்பினார்.
  • நாலாயிர திவ்விய பிரபந்தப் பாடல்களை தொகுத்தவர்.
  • இவரின் பேரனான ஆளவந்தார் பரப்பிய சித்தாந்தத்தின் பெயர் – எம்பெருமானார் தர்சனம்.

எம்பெருமானார்

  • இயற்பெயர் – திருவனந்தாழ்வான்.
  • பிறப்பு – ஸ்ரீபெரும்புதூரில் சித்திரை மாத திருவாதிரையில் பிறந்தார்.
  • பெற்றோர் – ஆஸரிகேசவபெருமாள் – பூமிபிராட்டி
  •  ‘பஞ்சாயுதங்களின் அவதாரம்” என திருவரங்கத்தமுதனாரால் அழைக்கப்பட்டவர்-
    எம்பெருமானார்
  • பஞ்சாயுதங்களாவன : சுதர்சனம், நந்தகம், கதை, சாரங்கம், பாஞ்சசன்யம்.
  • விஷ்வக்சேனருடைய அவதாரம், திரி தண்டம் செங்கோலின் அவதாரம் என வேதாந்ததேசிகனாரால் அழைக்கப்பட்டவர் – எம்பெருமானார்.
  • தொண்டனூரில் ஜைனர்களுடன் வாதம் செய்தார் எனக் கூறும் நூல் – குருபரம்பராப்பிரபாவம்.
  • பன்னிரு ஆழ்வார்களின் வைபவங்களை விரிவாக ‘குருபரம்பராப்பிரபாவம்” முதலிய நூல்களில் காணலாம்.
  • பெருமாளை எப்போதும் நினைந்து வாழும் 12 ஆழ்வார்களும் ‘நித்தியஸரிகள்”
    என்று திவ்வியஸரிய சரிதம், குருபரம்பராப்பிரபாவம் முதலிய நூல்கள் கூறுகின்றன.
  • புராணங்களைத் தழுவி நிற்கும் நூல்கள் – திவ்வியஸரிய சரிதம்,  குருபரம்பராப்பிரபாவம்
  • எம்பெருமானாரை திருவனந்தாழ்வான் அவதாரம் என உரைக்கும் சான்றுகள் – குருபரம்பராப்பிரபாவம், திவ்வியசூரியசரிதம்.
  • நாலாயிர திவ்வியபிரபந்த நூலின் அனைத்து பாசுரங்களுக்கும் உரை எழுதியவர் – பெரியவாச்சான்பிள்ளை.
  • நம்மாழ்வார் பாசுரங்களுக்குமட்டும் உரை எழுதியவர் – வடக்குதிருவீதிபிள்ளை
  • மணவாளமாமுனிகளாக அவதாரம் செய்தவர் – எம்பெருமானார்
  • திருவனந்தாழ்வான், முதலில் எம்பெருமானாராய் அவதரித்து பின்பு மணவாளமாமுனிகளாய் அவதாரம் செய்தார் என ‘வரவரமுனிசதகம்” எனும் நூலில் குறிப்பிட்டுள்ளவர் – எரும்பியப்பர்.
  • நம்மாழ்வார் அருளியவை “நான்கு வேதங்கள்” என்றும், திருமங்கையாழ்வார் அருளியவை ‘ஆறு அங்கங்கள்” என்றும், பிற ஆழ்வார்கள் அருளியவை ‘உபாங்கங்கள்” (உதவிபுரியும் நூல்கள்) என்றும் அழைக்கப்படுகின்றன.
  • தேசிகன் எழுதியது ‘ஸ்ரீமத்ரஹஸ்யத்ரஸாரம்”. இதன் வியாக்யானம்(விளக்கம்) ‘ஸாராஸ்வாதிநீ”
  • இராமாயணம், மகாபாரதம், புராணங்கள் போன்றவை வேதக் கருத்துக்களை தெளிவாக தெரிவிக்க வந்தமையால் அவை ‘ வேதோப ப்ரும்மஹணங்கள்” எனப்படும்.
  • நாதமுனிகள் முதல் எம்பெருமானார் நடுவாய், மணவாளமாமுனிகள் ஈறாக உள்ள குருபரம்பரையை சேர்ந்த மஹான்கள் – பூர்வாச்சாரியார்கள் எனப்படுவர்.

வைணவத் தலங்கள்

  • வடநாடு – நேபாளம் , துவாரகை
  • மலைநாடு – திருவனயதபுரம்
  • நடுநாடு – திருக்கோவிலுhர் , திருவேங்கடம்
  • தொண்டைநாடு – காஞ்சிபுரம்

PDF Download

TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download

TNPSC Current Affairs in Tamil 2018

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!