மந்திரங்கள்

0

மந்திரங்கள்

 • மனனம் செய்பவனை திராணனம் (ரட்சிப்பது) செய்வது – மந்திரம்.
 • ‘நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப” தொல்காப்பியம்.
 • நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் – திருக்குறள்.
 • மந்திரம், 1)சித்தம் 2)ஸாத்யம் 3)ஸ்வசிதம் 4)ரிபு என நால்வகைப்படும். மந்திர ஜப முறை – மானஸம், மந்தம், வாசகம் என மூவகைப்படும்.
 • சில மூலமந்திரங்கள்:

  சிவன் மூல மந்திரம் ஓம் நமசிவாய:
  விஷ்ணு மூலமந்திரம் விஷ்ணு மூலமந்திரம்:
  தேவி மூல மந்திரம் ஓம் உமாதேவ்யை நம:
  கணபதி மூலமந்திரம் ஓம் கணபதயே நம:
  சுப்பிரமணியர் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம:
  சாஸ்தா மூலமந்திரம் ஓம் சாஸ்த்ரு மூர்த்தயே நம:
 • மனதுக்குள் ஜபிப்பது மானஸமாகும் (உத்தமம்).
 • தனக்கு மட்டும் கேட்கும் வண்ணம் மெல்ல உச்சரிப்பது – மந்தம் (மத்திமம்)
 • பிறர் அறிய உச்சரிப்பது – வாசகம் ஆகும் (அதமம்).
 • காலை, மாலைகளில் சந்தியாவந்தனம் முடிந்ததும் ஜபிக்கப்படும் மந்திரம் – காயத்ரி மந்திரம்.
 • காயத்ரி என்பதன் பொருள் – ஜபிப்பவனை இரட்சிப்பது
 • காயத்ரி மந்திரத்தில் உள்ள மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை – 24
 • காயத்ரி மந்திரம் உள்ள இடம் – ரிக் வேதத்தின் 3-வது மண்டலம்
 • அட்டகாம வித்தைகள்- ஸ்தம்பனம், மோகனம், வசியம், ஆகர்ஷணம், உச்சாடனம்,வித்வேடணம், பேதனம், மாரணம்.
  முகங்கள் எழுத்துக்கள் சித்திகள்

  உச்சரிக்க  வேண்டிய   எண்ணிக்கை

  ஈசான முகம் நகரம் உச்சாடனம் 25 முறைகள்
  தத்புருஷம் மகரம் வித்வேடணம் 25 முறைகள்
  அகோரம் சிகரம் ஸ்தம்பனம் 25 முறைகள்
  வாமம் வகரம் பேதனம் 25 முறைகள்
  சத்யோஜாதம் யகரம் மாரணம் 25 முறைகள்
 • பஞ்சாக்கரம் பிரணவத்தின் உள்ளுறுப்பாகும்.

  பஞ்சாக்கரம்

  அட்சரங்கள்

  பயன்கள்

  ஸ்தூல பஞ்சாக்கரம் நமசிவாய இம்மை, மறுமை பயன் அளிக்கும்
  சூட்சம பஞ்சாக்கரம் சிவாய நம மலத்தை நாசம் பண்ணும்
  காரண பஞ்சாக்கரம் சிவாய சிவ பாசத்தைக் கெடுக்கும்
  மகாகாரண பஞ்சாக்கரம் சிவ அருள், சிவத்தோடு இன்பமளிக்கும்
  மகாமநு சி சிவமேயாக்கும்
 • ஸ்தூல பஞ்சாக்கரம் – இது நகாரம் முதலாகவும், யகரம் இறுதியாகவும் உள்ளது.
 • அப்பர், சுந்தரர், சம்பந்தர் ‘நமசிவாய பதிகம்” பாடியுள்ளனர்.
 • திருவைந்தெழுத்து என அழைக்கப்படும் மந்திரம் – நமச்சிவாய நம
 • பிரணவத்தின் வடிவம் என அழைக்கப்படும் மந்திரம் – நமச்சிவாய நம
 • அனைத்து மந்திரங்களுக்கும் மூலமாவது – நமச்சிவாய நம
 • நான்கு வேதங்களுக்கும் முடிபுணர்த்தும் மகாவாக்கியமாக அமைவது – நமசிவாய நம
 • பெரும்பெயர், சிவமூலமந்திரம், திருநாமம் என அழைக்கப்படுவது – நமசிவாய நம
 • பஞ்சாக்கரம் எனப்படும் மந்திரம் – ஓம் நமசிவாய
 • பஞ்சாக்கரம் எனப்படும் மந்திரம் – யஜூர் வேதத்தில் உள்ள ஏழு காண்டங்களில் நடுக் காண்டத்தில் நடு சம்ஹிதையில், ருத்ராத்யாயத்தில் நடுநாயகமாக கூறப்படுகிறது.
  எழுத்துக்கள் பஞ்சபூதங்கள் அதிதேவதை கூறப்படும் பொருள்
  நகாரம் பிருதிவி (பூமி) இராமன் பாசத்தை தொழிற்படுத்துதல் (அ) மறைத்தல்
  மகாரம் அப்பு (நீர்) விஷ்ணு மும்மலத்தைக் குறிக்கும்
  சிகாரம் தேயு (தீ) சிவன் சிவனைக் குறிக்கும்
  வகாரம் வாயு மகேசுவரன் (அ)சக்தி திருவருள் ஒலி
  யகாரம் ஆகாயம் சதாசிவம் உயிரை இறைவன் அருட்கொள்ளும் விதம்
 • ‘நானேயோ தவம் செய்தேன், சிவாய நம எனப் பெற்றேன்” – திருவாசகம்.
 • ‘ஊனநடனம் ஒருபால் ஒருபாலா ஞானநடனம் தான் நடுவே நாடு” – திருவருட்பயன்

குருலிங்க வழிபாடு:

 • சைவத்தில் (அ) சிவநெறியில் சைவ சமயக்குரவர்கள் நால்வராலும் சிவநெறியின் உயிர்க் கொள்கை எனக் கருதப்படுவது – திருக்கோயில் வழிபாடு
 • ‘கீர்த்தி திருவகவல்” என்ற நூலின் மூலம் திருக்கோயில் வழிபாட்டை விளக்கியவர் – மாணிக்கவாசகர்
 • ‘சேஷாத்ரகோவை” என்ற நூலின் மூலம் திருக்கோயில் வழிபாட்டை விளக்கியவர்கள்
  – முதல் மூவர் (அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர்).
 • திருக்கோயிலின் சிவலிங்கத்தின் முன்புறமாக அமர்ந்துள்ள இடப வாகனம் குறிக்கும்
  பொருள் – தர்மம் (அறநெறியின் பயனாக மெய்யுணர்வு எய்திய சுத்த ஆன்மாவைக் குறிக்கும்)
 • திருக்கோயிலில் உள்ள பலிபீடம் குறிப்பது – பாசத்தைக் குறிக்கும்.

PDF Download

TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download

TNPSC Current Affairs in Tamil 2018

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!