ஆலயம்

0

ஆலயம்

 • கடவுள் திருவடியில் ஆன்மா இலயிக்கும். கோவில் கடவுள் தங்குமிடம்.
 • ஆலயம் மூலமே இறைவன் அருளை பொழிகின்றான்.
 • கோவில் மனித வடிவம் (ஷேத்திரம் சரீர பிரஸ்தானம்)
பாதம்கோபுரம்முழங்கால்ஆஸ்தான மண்டபம்
கொப்பூள்பலிபீடம்தொடைநிருத்த மண்டபம்
மார்புமகாமண்டபம்கழுத்துஅர்த்த மண்டபம்
சிரம்கர்ப்பகிரகம்மார்பில்நடராஜர்
வலது செவிதட்சிணாமூர்த்திஇடது செவிசண்டிகேஸ்வரர்
கழுத்தில்நந்திவாய்ஸ்நபன மண்டபவாசல்
மூக்குஸ்நபன மண்டபம்புருவமத்திஇலிங்கம்
தலையுச்சிவிமானம்

கோபுரம்
• இது ஸ்தூல லிங்கமாகும். இறைவனது விராடஸ்வரூபமே கோபுரம்.
• கும்பம் ஷோடசாந்தமாகும்.
• கோபுர தரிசனம் இறைவனது பாத தரிசனமாகும்.

பிரகாரங்கள்

 • 3 பிரகாரம் – அன்ன, பிராண, மனோமய கோசங்களை உணர்த்தும்.
 • 5 பிரகாரம் – மேலும் விஞ்ஞான, ஆனந்த மய கோசங்களை உணர்த்தும்.
 • 7 பிரகாரம் – மேலும் ஸ்தூல, சூட்சுமங்களை விளக்கும்.
 • பல முறை பிரகாரத்தை சுற்றி வலம் வருதல் கோசங்களை கடந்து இறைவன் விளங்குதலைக் குறிக்கும்.

விமானம்

 • விமானம் 3 வகைப்படும்.
 • பீடம் முதல் அனைத்தும் சதுரம் – நாகரம் (ஆண் விமானம்)
 • கண்டம் முதல் வட்ட வடிவம் – வேசரம் (அலி விமானம்)
 • கண்டம் முதல் எண்கோண வடிவம் – திராவிடம் (பெண் விமானம்)
 • விமானமும் ஸ்தூல லிங்கமாகும். இதன் கீழ்ப்புறம் – முருகன், மேற்புறம் – விஷ்ணு, தென்புறம் – தெட்சிணாமூர்த்தி , வடபுறம் – பிரமன் உருவமும் இருக்கும்.

கொடிமரம்

 • இது சூட்சும லிங்கமாகும். சதுர அடிப்பாகம் – பிரமனைக்(படைத்தல்) குறிக்கும்.
 • அதன்மேல் எண்கோணம் – விஷ்ணுவைக்(காத்தல்) குறிக்கும்.
 • மேல் உருண்டு நீண்ட பாகம் – உருத்திரனைக் (அழித்தல்) குறிக்கும்.
 • அசுரரை அகற்றவும், தேவரை வரவழைக்கவும், ஆலயத்தை இரட்சிக்கவும், பக்தர்களை
 • காக்கவுமே – கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
 • கொடி மரத்தின் மேல்பாகத்தில் அமைக்கப்பட்டிருப்பது – அந்தந்த மூர்த்தியின்
 • வாகனம். எ.கா. விநாயகர் – மூஷிகம், சாஸ்தா – குதிரை.
 • மூலலிங்கத்துக்கு செய்யும் அனைத்து மரியாதைகளும் – கொடிமரத்திற்கு உண்டு.
 • கொடிமரத்திற்கு உகந்த மரங்கள் – முகில், சந்தனம், தேவதரு, செண்பகம், வில்வம்.
 • கொடிமரத்திற்கு மத்திமமான மரங்கள் – மா, பலா.
 • கொடிமரத்திற்கு அதமமான மரங்கள் – கமுகு, தென்னை, பனை.
 • கொடிமரத்தில் 36 கணுக்கள் இருப்பின் சிறப்பு. நீளம் ஆலய அளவிற்கு
 • ஏற்றவாறு இருத்தல் நலம்.
 • கொடிமரமீன் தத்துவம் – யோகநிலைக்கு ஒப்பிடப்படுகிறது.
 • கொடிமரத்தை யோகியின் முதுகெலும்பு (அ) மேருதண்டத்திற்கு ஒப்பிடுவர்.

கர்ப்பகிரகம் (மூலஸ்தானம்)

 • இது எல்லா உலகங்களையும் படைத்தற்கு காரணமான மூலப்பிரகிருதியின் இடமாகும்.
 • மூர்த்திக்கெதிரே மூர்த்தியின் வாகனமும், பின் ஒரு பலிபீடமும் அமைப்பர்.
 • இது (பதி – இறை – மூர்த்தி), (பசு – உயிர் – வாகனம்), (பாசம் – தளை – பலிபீடம்) ஆகியவற்றை உணர்த்தும்.

சிவலிங்கம்

 • லிங்கம் – குறி என்று பெயர்.
 • எல்லாம் ஒடுங்கி மீண்டும் வெளிப்படுவதெனப் பொருள்.
 • சிவலிங்கத்தின் அடிப்பாகம் நாற்கரம் – பிரம்மா. நடுப்பாகம் எண்கோணம் – விஷ்ணு, மேல் – நீண்ட வட்டவடிவம் – சிவன்.
 • மும்மூர்த்திகளின் அடக்கமே சிவலிங்கம்.
 • லிங்கம் 3 வகைப்படும். 1)நிஷ்களம் (அ) அவ்யக்தம் (அ) அரூபம் 2)சகலநிஷ்களம்
 • (அ) வயக்தம் (அ) ரூபாரூபம் 3)சகளம் (அ) வயக்தம் (அ) ரூபம் (64 உருவம்)
 • 64 ரூபத்தில் 24 ரூபம் முக்கியமானது என காரணகாமம் கூறுகிறது.
 • சைலஜம் — கல்லால் செய்யப்படும் லிங்கம்.
 • ரத்னஜம் — மாணிக்கம், மரகதத்தாலான லிங்கம்
 • லோகஜம் — பொன், வெள்ளியாலான லிங்கம்
 • க்ஷ ணிகம் – அரிசி, மணல், கோமியம், விபூதி, சந்தனத்தாலான லிங்கம். சிறிது நேரத்திற்கு பின் அழிந்துவிடும் எனப்பொருள்.
 • லிங்கம் அது உண்டான காரணத்தை வைத்து ஆறு வகையாக பிரிக்கலாம். அவை 1)தேவிகம், 2)திவ்யம் 3)ஆர்ஷம் 4)மானுஷம் 5)இராட்சஷம் 6)பாணம்.

திருநந்திதேவர்

 • நந்தி – எப்போதும் ஆனந்தத்திலிருப்பவர்.
 • சைவ சமயத்தின் முதல் குரு – நந்தி
 • உயிர்களை மஹாசம்ஹாரம் செய்யும் உரிமை நந்திக்கு உண்டு.
 • நந்தி சிவசந்நிதியில் காவல் புரிகிறார். இவர் அனுமதிபெற்றே சிவதரிசனம்
 • செய்யமுடியும்.
 • நந்தியின் வேறுபெயர்கள் – தூயவன், சைலாதி, இடபதேவர்.
 • தப்பு செய்தோரை தண்டிக்கும் அதிகாரம் இவருக்குண்டு.
 • தட்ச யாகத்தில் சிவனை பழித்து பேசிய தட்சன், தேவர்களை சபித்தார்.
 • நந்தியிடமிருந்து உபதேசம் பெற்றவர் சநத்குமாரர்  சத்யஞானிதரிசினி
 • பரஞ்சோதி மெய்கண்டார். இப்பரம்பரை திருக்கைலாய பரம்பரை எனப்படும்.

பலிபீடம் பலிபீடம்

 • ஸ்ரீ பலி நாதர் எனப்படும். இது எட்டு மூலையிலும் ஒவ்வொன்று உள்ளது.
 • தலைமை பலிபீடம் – நந்திக்குப் பின் உள்ளது.

தெட்சிணாமூர்த்தி

 • சிவனின் குரு வடிவே இவர்.
 • வேறுபெயர் – தென்முகக்கடவுள் (கர்ப்பகிரகத்தின் தென்பகுதியில் உள்ளதால்)
 • கல்லால மரத்தடியில் சனகாதி முனிவர் 4 பேருக்கு உபதேசிப்பது போல், ஒரு கால் முயல் மிதித்தும், மற்றொன்று வீராஸனம் இட்டும், 4 கைகளோடு உள்ளார்.
 • வலது கை 1 – சின் முத்திரை காட்டுகிறது.
 • வலது கை 2 – ருத்ராட்ச மணிவடம் உள்ளது.
 • இடது கை 1 – அமிர்த கலசம் உள்ளது
 • இடது கை 2 – வேகம்.
 • சின் முத்திரை என்பது – சுட்டு விரலால், பெருவிரல் அடியைச் சேர்த்து மற்ற 3 விரல்களை ஒதுக்கி காட்டுவதேயாகும்.
 • யோகநிலையிலிருப்பதால் – யோகதட்சிணாமூர்த்தி
 • தும்புரு மற்றும் நாரதருக்கு வீணை இலக்கணம் உணர்த்தியதால் வீணாதட்சிணாமூர்த்தி என வேறுபெயர்கள் உண்டு.
 • தட்சிணாமூர்த்தியை ‘ளுடைநவெ றுயவஉhநச” என அழைத்தவர் – பிளாவட்ஸ்கி அம்மையார்.

நடராஜர்

 • நடராஜரின் வலக்காலில் மிதிபட்டுள்ள முயல் – அபஸ்மாரம்.
 • பஞ்சலிங்க தலங்கள் பஞ்சலிங்க தலங்கள்
 • பிருத்வி ( நிலம் ) — திருவாரூர்
 • அப்பு ( நீர் ) – திருவானைக்காவல்
 • தேயு ( தீ ) – திருவண்ணாமலை
 • வாயு (காற்று) – காளஹஸ்தி
 • ஆகாயம் – சிதம்பரம்
 • ஆண்கள் ஆடும் கூத்து – தாண்டவம் எனப்படும்
 • பெண்கள் ஆடும் கூத்து – இலாஸ்யம் எனப்படும்
 • நடராசர் ஆடும் கூத்துகள் – கொடுகட்டி, பிண்டரங்கம், காபாலம் என மூன்றாகும்.
 • மொத்தம் உள்ள தாண்டவங்கள் — 108 ஆகும்.
 • திருநடன தத்துவம் – மாயையை ஓட்டி, கன்மம் சுட்டு, ஆணவத்தை அமுக்கி அருளால் ஆன்மாவை மேலே எடுத்து ஆனந்தக்கடலில் மூழ்கச் செய்வது.
இடம்சபைதாண்டவம்
சிதம்பரம்பொன்னம்பலம்ஆனந்த தாண்டவம்
மதுரைவெள்ளியம்பலம்சந்தியா தாண்டவம்
திருவாலங்காடுரத்தின சபைஊர்த்துவ தாண்டவம்
திருநெல்வேலிதாமிர சபைகாளிகா ( முனி ) தாண்டவம்
குற்றாலம்சித்திர சபைதிரிபுர தாண்டவம்
 • சேரமான் பெருமானுக்கு சிலம்பொலி காட்டி அருள்செய்ததும், சேக்கிழார்க்கு திருத்தொண்டர்புராணம் பாட ‘உலகெலாம்”என அடியெடுத்து கொடுத்ததும் – சிவனே.
 • அம்பலவாணர்(நடராசர்) உருவம் ஐந்தெழுத்தைக் குறிக்கும். கூத்து ஐந்தொழிலைக் குறிக்கும்.
 • அம்பலவாணர் திருமேனி ஆனந்தத்தையும், நிருத்தசபை துரிய அருணிலை தானத்தையும் குறிப்பன.
 • சோமாங்கந்த திருவுருவம் ‘வயசி” என்னும் முக்திபஞ்சாக்கரத்தின் உருவகமாகும்.
 • திருவாசி – ஓங்காரத்தையும், அதன் கண் உள்ள 51 சுடர்கள் அவ்வெண்ணிக்கையுள்ள மாத்ருகாக்கரங்களையும் குறிக்கும்.

முருகன்

 • குறிஞ்சி நிலக் கடவுள்.
 • அறுபடை வீடுகள் – 1)திருப்பரங்குன்றம் 2)திருச்சீரலைவாய்(திருச்செந்தூர்)
 • 3)திருவாவினன்குடி (பழனி) 4)திருவேரகம் (சுவாமிமலை) 5)குன்றுதோறாடல் (திருத்தணி) 6) பழமுதிர்ச்சோலை.
 • முருகு என்றால் – இளமை, அழகு, நறுமணம், தேன், கடவுள் தன்மை.
 • முருகனது மூர்த்தங்கள் – சுப்பிரமணி, சண்முகன், ஞானசக்திதரன், தேவசேனாதிபதி, மயில்வாகனன்.
 • முருகனின் 1-வது முகம் – இருளுடைய உலகை குற்றமில்லாததன் பொருட்டு பல கிரகணங்களை தோற்றுவித்தது.
 • 2-வது முகம் — அன்பர்க்கு வேண்டும் வரம் தருதல்
 • 3-வது முகம் — வேதம் தவறாத பிராமணர்க்கு யாகத்தில் தீங்கு வராமல் தடுக்க.
 • 4-வது முகம் — வேதாகமத்தில் மறைந்துள்ளவற்றை ஆராய்ந்து போதித்து சந்திரன்
 • போல் விளங்கும்.
 • 5-வது முகம் — அசுரரை ஒழித்து போர் வேள்வியை வேட்டது.
 • 6-வது முகம் – வள்ளியுடன் மகிழ்ச்சியை பொருந்திற்று.
 • முருகனுக்கு கைகள் — 12.
 • கொக்கறுகோ – சூரனாகிய மா மரத்தை வெட்டி வீழ்த்திய தலைவன்.
 • வள்ளி (சுந்தரி), தெய்வானை(அமுதவல்லி) பூர்வஜென்மத்தில் திருமாலின் புதல்வியர்.
 • சிவஞானபோதம் 8-ம் சூத்திரத்திலுள்ளதுபோல், உயிர் தன்னியல்பில்லாமல் கருவி இயல்பே என மயங்கும் போது இறைவன் ஆட்கொள்வான் என்பது – வள்ளி திருமண தத்துவம்.

சண்டிகேஸ்வரர்

 • ஆலய இறுதி வழிபாடு.
 • மும்முறை கைதட்டி வழிபடுவர்.
 • வீடுபேறு விரும்புவோர் இவரை வழிபடலாம்.
 • சோழநாட்டில் மண்ணியாற்றங்கரையில் சேய்ஞலூரில் எச்சதத்தனுக்கும், பவித்திரைக்கும் மகனாக பிறந்தவர் – விசாரசருமர்.
 • ஆற்று மணலில் லிங்கம் அமைத்து பாலாபிஷேகம் செய்தவர் – விசாரசருமர்.
 • அதனால் அவர் தந்தை கோபத்தில் காலால் பால்குடத்தை இடற, விசாரசருமர் தந்தையை அடிக்க கோலெடுக்க, அது மழுவாய் மாறி கால்களை வெட்டியது.
 • விசார சருமருக்கு முன் சிவன் தோன்றி கொன்றை மலரை இவருக்குச் சூட்டினார்.
 • இவர் ஆழ்ந்த சிந்தனையில் ஆலயத்தின் வடபுறம் கோமுகிக்கருகே தனிக்கோயிலில் வீற்றிருப்பார். இவரருகே ஆலயத்திற்கு தேவையான நூல், திரி, நெய் போன்றவற்றை வைப்பர்.

PDF Download

TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download

TNPSC Current Affairs in Tamil 2018

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!