ஆலய நிர்மாணம்

0
1186

ஆலய நிர்மாணம்

 • சிவாகமங்கள் – 28, சைவ உபாகமங்கள் – 11, சத்தேய உபாகமங்கள் – 64, பஞ்சராத்ராகமங்கள் – 108.
 • எந்த ஆகமத்தை ஒட்டி ஆலயம் நிறுவப்படுகிறதோ அந்த ஆகமத்தை ஆதாரமாகக் கொண்டே பூஜை முதலியவை நடைபெறும்.
 • ஆலய நிர்மாணம் – 1)ஆவர்த்தம் 2)அநாவர்த்தனம் 3)புனராவர்த்தனம் 4)அந்தரிதம் என நான்கு வகைப்படும்.
 • ஆவர்த்தம் – புதிதாக ஆலயங்கட்டி முதன்முதலில் விக்ரகம் நிறுவி அனுக்ஞை முதல் கும்பாபிஷேகம் வரை முடிப்பது.
 • அநாவர்த்தம் – மழை, புவியதிர்ச்சி முதலிய இயற்கைசீற்றத்தின் பேரில் ஆலயமழிந்து போனால் மீண்டும் புதுப்பித்தல்.
 • புனராவர்த்தனம் (அ) ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன கும்பாபிஷேகம் – ஆலயத்தில் காலப்போக்கில் சில பாகம் சிதைந்து போனால் மீண்டும் புதுப்பித்தல். எட்டு சக்தியோடு இறைவனை இணைப்பது – அஷ்டபந்தனம்.
 • அந்தரிதம் – அசுத்தப் பொருளோடு திருடர் புகுந்ததனால் ஆலயத்தை சுத்தம் செய்யும் பொருட்டு செய்யப்படும் சம்ப்ரோட்சனம் அந்தரிதம் எனப்படும்.
 • பிரதிட்டைக்குரிய கிரியைகள் மொத்தம் 64.
 • அனுஞ்ஞை – ஆகம நூல்களை ஆராய்ந்து, கிரியைகளை ஒழுங்குப்பட அனுஞ்ஞை சய்யும் ஆற்றல் வந்த ஓர் ஆச்சரியனை தேர்ந்தெடுத்து, இவ்வரிய செயலை செய்வதற்கு இறைவன் அனுமதி பெற்று நியமனம் செய்வதாகும்
 • கணபதி பூஜை – எடுத்த காரியம் இனிது நிறைவேற
 • வாஸ்து சாந்தி – தேவர்களை பூஜித்து இடையூறு நேராவண்ணம் கும்பாபிஷேக பணி செய்வோர், கலந்து கொள்வோருக்கு இன்னல் வராமலும், அசுர தொந்தரவு நேராமலும் இருக்க செய்யும் கிரியை.
 • மண் எடுத்தல் – இந்திரன் முதலிய 8 மண் எடுத்தல 8 காவலரிடம் அனுமதி பெற்று, சுத்த பூமியிலிருந்து மண் எடுத்து பள்ளத்தில் அபிசேகம் செய்தல்.
 • முளையீடு – பாலிகை என்ற மண்பாத்திரத்தில் விதையிட்டு உலக முளையீடு சிருஷ்டியை உணர்வித்தல்.
 • காப்புகட்டு – கிரியை நடத்துவோருக்கு இடையூறு நேராவண்ணம் ம காப்புகட்டு ந்திர கயிற்றை
  கையில் கட்டுதல்.
 • கும்பதானம் – குடத்தை உடலாக பாவித்துää ஜீவனாக மந்திரங் கூ கும்பதானம றிய வித்யாதேகமாக
  பாவித்தல்.
 • கலாகர்ஷ கலாகர்ஷணம் – எந்த மூர்த்தியை எக்குடத்தில் ஆவாகனம் செய்கிறோN ணம் மா
  அக்குடத்தில் மூர்த்தி இருப்பதாக நினைத்து வழிபடல்.
 • யாகசாலை – கும்பாபிஷேகத்திற்கு முன் யாகசாலை 1, 3, 5, 9 குண்டவிதானமாக அமைக்கப்படும். பின் அதனை 81 பாகமாக செய்து நடுவில் பிரமபதத்தினை அமைப்பர். அதனை சுற்றி 16, 24, 32 என பல பதங்களை அமைப்பர். அதில் தீ வளர்த்து, பூஜை பொருட்களை எரிப்பர். அது இறைவனுக்கு ‘ஹவிஸ்” எனும் பொருளாக மாறி அவரிடம் சேர்கின்றது.
 • பிம்பசுத்தி – விக்ரகத்திலுள்ள அழுக்கு நீங்குதற்பொருட்டு ப பிம்பசுத்திட்டை, தளிர், மண் இவைகளைக் கொண்டு தேய்த்து அபிடேகம் செய்தல்.
 • ஸ்பர்சாகுதி – யாகசாலை குடத்திற்கும், மூல விக்ரகத்திற்கும ஸ்பர்சாகுதி; தர்ப்பைக் கயிறு, தங்கக் கம்பி, வெள்ளிக்கம்பி இவற்றால் இணைப்பு ஏற்படுத்தலாம்.
 • அஷ்டபந்தனம – இது மூலஸ்தான மூர்த்திக்கு செய்யப்படும் முக்கிய கிரியையாகும். மூர்த்தியையும், பீடத்தையும் ஒன்றுசேர்த்தல் (அ) பதித்தல் ஆகும். இவ்வாறு சேர்த்தலுக்கு மருந்துசாத்தல் எனக் கூறுவர்.
 • மருந்து பொருட்கள் – சுக்கான், கற்பொடி, குங்கிலியம், கொம்பரக்கு, காவிக்கல், செம்பஞ்சு, இலிங்கம், வெள்ளை மெழுகு, வெண்ணெய் என எட்டு ஆகும்.
 • குடமுழுக்கு – யாகசாலையில் எந்த மூர்த்திக்கு எந்த குடம் வைத குடமுழுக்கு பூஜிக்கப்படுகிறதோ அக்குடநீரை மூர்த்திக்கு அபிடேகம் செய்தல்.
 • மகாபிஷே மகாபிஷேகம்- கும்பாபிஷேகம் கழிந்தபின் இறைவனின் எழுந்தருளிக்கும் விக்ரகத்தில் இருந்து முறைப்படி அபிஷேக, அலங்கார நிவேதனம் செய்தல்.
 • மண்டல அபிஷே மண்டல அபிஷேகம் – மகாகும்பாபிஷேகம் முடிந்து மூன்றுபட்சம் கழித்து செய்யுகம் அபிஷேக ஆராதனை.
 • பஞ்ச சுத்தி – பூஜிப்பவர் உடல் உள்ளம் சுத்தமாக இருக்கச் பஞ்ச சுத்தி செய்வது.

ஐவகை சுத்திகள்:

 • ஆத்மசுத்தி – ஆச்சாரியன் தன் உடலை கோவில் உள்ளிருக்கும் திருமேனி போல சுத்தமாக வைத்தல்.
 • ஸ்தான சுத்தி – அர்க்கிய நீரை பூமியில் தெளித்து ஆலயத்தின் அனைத்து இடங்களையும் சுத்தமாக வைத்தல்
 • திரவிய சுத்தி – பூஜை பொருட்களை (பாத்திரம்) நன்கு கழுவி சங்கு நீரால் பூஜை பதார்த்தத்தை அர்க்கிய நீர்கொண்டு தெளித்தல்.
 • மந்திர சுத்தி – பீஜாட்சர மந்திரத்தை சுஷம்னை நாடியில் அடக்கி அந்தந்த மூர்த்திக்கு உரிய மூலமந்திரத்தை பத்து முறை ஜபிக்க வேண்டும்.
 • இலிங்க சுத்தி – அபிடேக பாத்திரத்தில் நீர் நிரப்பி கங்கை முதலிய 9 தீர்த்தங்களை ஆவாகனம் செய்து இலிங்கத்தில் அபிடேகம் செய்ய வேண்டும். விக்ரகங்களில் ஒட்டி கிடக்கும் மெழுகினை கலைந்து சுத்த ஆடை கட்டவேண்டும்.

சோடசோபசாரங்கள்:

 • இது இறைவனுக்குரிய பூஜையில் செய்யப்படும் 16 உபசாரங்கள்.
 • 1.ஆவாகனம் – இறைவனை வரவழைத்து நேர்முகப்படுத்தி விக்ரகத் 1.ஆவாகனம தல் சேர்ப்பதற்கு ஆவாகனம் என்று பெயர். இது மூலாதாரத்திலுள்ள ஜீவசைதன்யத்தை எடுத்து சுஷ{ம்னை வழியாக மேலேற்றி கொண்டு வந்ததாக சங்கற்பம் செய்தல்.
 •  2. ஸ்தாபனம் – இறைவனை விக்ரகத்தில் எழுந்தருள வேண்டுமென 2. ஸ்தாபனம் பிரார்த்தித்து பீடத்தலுள்ள விக்ரகத்தில் இறைவனை அமர்த்துதல்.
 • 3.சந்நிதானம் – இது பூஜிக்கப்படும் மூர்த்தி நமக்கு அனுக்க செய்யும் முறையும், பூஜகன் அருள்பெறும் முறையுமாகும்.
 • 4.சந்நிரோதனம் – இறைவா அடியேனிடம் என்றும் கருணையோடு இருக்கவேண்டும்
  என வேண்டி பூஜை முடிவு வரை சாநித்யம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளுதல்.
 • 5.அவகுண்டனம் – விக்ரகத்தைச் சுற்றி கவச மந்திரத்தால் மூ 5.அவகுண்டனம ன்று அகழ் உண்டாக்கி தடைகள் வராமல் அம்மந்திரத்தாலேயே அதனை மூட வேண்டும்.
 • 6.அபிஷேகம் – எண்ணெய், மாப்பொடி, நெல்லிமுள்ளி, மஞ்சள்பொடி, பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம், பால், தயிர், தேன், கரும்பு, வாழைப்பழம், எலுமிச்சைபழச்சாறு, இளநீர், அன்னம், விபூதி, சந்தனம், பத்ரோதகம், கும்போதகம் இவற்றை வரிசைப்படி அபிடேகம் செய்ய வேண்டும். அபிடேகத்திற்குப்பின் தேனுமுத்திரை காட்டவேண்டும்.
 • தேனு முத்திரை என்பது பசுவின் அகடு போன்ற முத்திரை ஆகும்.
 • 7.பாத்யம 7.பாத்யம் – சந்தனம், வெண்கடுகு, விலாமிச்சை இந்த நான்கு பொருட்களையும் பாத்ய நீரில் கரைத்து மூலமந்திரத்தை ‘நம” என முடியுமாறு கூறி பாதத்தில் விடவேண்டும்.
 • 8.ஆசமநீயம் – நீரில் ஏலக்காய், கிராம்பு, பச்சைக்கற்பூர ஆசமநீயம் நாவற்பழம், சாதிக்காய், குங்குமப்பூ என்ற பொருட்களை இட்டு சம்கிதா மந்திரம் மும்முறை சொல்லி பாதத்தின் அடியில் வைக்க வேண்டும்.
 • 9.அர்க்கியம் – இறைவனுக்கு மூலமந்திரம் கூறி எள், யவநெல், தர்பூசணி, பால், அரிசி, புஷ்பம், வெண்கடுகு முதலியன கலந்தநீரால் சிரசில் சமர்ப்பித்து அர்க்கியம் கொடுக்க வேண்டும்.
 • 10.மாலை சாத்துதல் – அழகிய புஷ்பங்களால் இறைவனை அலங்கரித்த மாலை சாத்துதல்.
 • 11. தூபம் – சந்நிதியில் சாம்பிராணி புகைத்தல் ஆகும். இது கிரியா சக்தியைக் கொண்டு ஆணவமலத்தை அகற்றலாம் என்பது தத்துவம். அகில், கீழாநெல்லி, சாம்பிராணி, குங்கிலியம் முதலியன தூப பொருட்களாம்.
 • 12. தீபம் – ஆத்மாவின் மலத்தை போக்கி, ஞானத்தை கொடுக்கிற தீபம். திரி, கற்பூரம், துணி, நூல், பஞ்சு இவற்றில் எதையாவது பயன்படுத்தலாம். தீபமேற்றி மணியடித்து மந்திரம் கூறி கீரிடம் முதல் பாதம் வரை காட்டவேண்டும்.
 • 13. நைவேத்யம் – இதற்கு நெல்லரிசி, கோதுமை, முளையரிசி இவை உத்தமம்.
  வெள்ளை அரிசியை விட சிவந்த நெல்லரிசி நிவேதனத்துக்கு உத்தமம். நெல், கல், உமி, ரோமம் இவை அரிசியில் இருக்கக் கூடாது.
 • சுத்த அன்னம், பாயாசம், பொங்கல் முதலியன சித்ரான்னங்கள். நிவேதனத்துக்கு உகந்தவை.
 • ஆத்மா குணமாகிய அகங்காரம், சங்கற்பம், கோபம்,மோகம் இவைகளை அன்னமாக வேகவைத்து இறைவனுக்கு சமர்பிப்பதை நிவேதனம் குறிக்கிறது.
 • 14. பாநீயம் – வாசனையுள்ள தீர்த்தத்தை ஈஸ்வரப்ரீதிக்காக சபாநீயம் மர்ப்பித்தல்.
 • 15.ஜபசமர்ப்பணம் – மூலமந்திரத்தை 108 முறை உரு ஜபித்து அதை ஈஸ்வரனுக்கு சமர்ப்பிக்க வேண்டும். ஜபம்,பூஜை, ஹோமம் முதலிய எல்லா புண்ணிய செயல்களையும் அர்ச்சகர் ஈஸ்வரனுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
 • 16. தீபாராதனை – பல வித தீபங்களை ஈஸ்வர சந்நிதியில் காட்டி செய்வதற்கு தீபாராதனை என்று பெயர். இவ்வேளையில் ஏற்படும் மேளதாளங்கள், மணியொலிகளும் சங்கநாதமும் அரக்க பிசாசர், பிரம்மராட்சசர் முதலியோரை வெகுதொலைவில் விரட்டுகின்றன.
 • தீபராதனை 16 வகைப்படும். தூபம், புஷ்பதீபம், நாகதீபம், விருட்சதீபம், மேருதீபம், புருஷாமிருகதீபம், கும்பதீபம், ஆராத்திரிகம், நட்சத்திரதீபம், கற்பூரதீபம், பஸ்மோபசாரம், கண்ணாடிகாட்டுதல், குடைப்பிடித்தல், கொடிகாட்டுதல், சாமரம் வீசுதல், விசிறி வீசுதல்.
 • தத்துவம் – பஞ்சபூதம் ஒன்றிலொன்று ஒடுங்கி இறுதியில் கற்பூரதீபம் போல் எரிந்து எவ்வித மிச்சமின்றி இறைவனோடு ஒன்றுகிறது.
 • திருநீறின்(விபூதி) வேறுபெயர்கள் – பஷிதம், பஸ்பம், சூட்சாரம், ரட்சை, பூதி, நீறு.
 • விசேஷமான ஐஸ்வர்யம் – விபூதி
 • ஒளியைத் தருவது, சிவதத்துவத்தை விளக்குவது – பஷிதம்
 • பாவங்களை நீக்குவது – பஸ்பம்
 • ஆபத்தை (அ) மலத்தை நீக்குவது – சூட்சாரம்
 • அச்சம் நீக்கி காப்பது – ரட்சை
 • புல்வெளியில் மேய்ந்த இளம்பசுவின் சாணத்தை அக்கினியில் நீற்றி எடுக்கும் பொடியே – விபூதி ஆகும். அதனை பட்டுப்பை, சம்புடத்தில் வைத்தல் நலம்.
 • ‘மந்திரமாவது(பாராவணம்) நீறு” – திருஞானசம்பந்தரின் திருநீற்றுப்பதிகம்
 • வடக்கு (அ) கிழக்கு முகமாக நின்று 3 விரல்களால் எடுத்து சிவசிவ என சிவனை தியானித்து திருநீற்றைப் பூசுதல் வேண்டும்.
 • விபூதியை நீரில் கரைத்து உடலில் பாகத்தில் பூசும்போது கூறவேண்டிய மந்திரங்கள் :
  மந்திரங்கள் விபூதியை பூச வேண்டிய உடல் உறுப்பு
  ஈசான மூர்த்தியே நம சிரசு(தலை)
  தத்புருஷ வகத்ராய நம நெற்றி
  அகோர ஹிருதாய நம மார்பு
  வாமதேவ குஹயாய நம கொப்பூழ்
  சத்யோஜாத மூர்த்தியே நம புஜங்கள், மணிக்கட்டு, இடுப்பு கை, கால்மூட்டுகள்
 • கண்டிகை என அழைக்கப்படுவது – உருத்திராக்கம்
 • சிவபெருமானது 3 திருக்கண்களிலிருந்து பொழிந்த நீரால் தோன்றியதாக எண்ணி சிவனடியார்கள் அணிந்து கொள்வது – உருத்திராக்கம்
 • நீரில் மூழ்கும்போது உருத்திராக்கத்தில்பட்டு உடலில் விழும் நீர் கங்கை நதியின் புனிதநீருக்கு சமமாக கருதப்படுகிறது.
 • விநாயகருக்கு முன் தோப்புகரணமும்ää தலைக்குட்டுதலையும் நன்றியுணர்வுடன் செய்ய காரணம் – கயமுகசூரனை விநாயகர் அழித்ததால்.
 • தேவார பாடல்கள் பாடப்பட்ட ஆலயங்கள் ‘தலங்கள்’ என்றும், திவ்வியபிரபந்தபாடல்கள் பாடப்பட்ட ஆலயங்கள் ‘திவ்வியதேசம்” எனவும் அழைக்கப்படுகின்றன.
 • ஆழ்வார் பாடல்களை ‘மங்களாசாசனம்” எனவும் கூறுவர்.
 • சைவசமயச்சாரியார்களால் பாடல்பெற்ற தலங்கள் மொத்தம் 274. அவையாவன:
  சோழநாடு 190 தொண்டைநாடு 32 நடுநாடு 22

   

  பாண்டிநாடு 14 மலைநாடு 01 துளுவம் 01
  ஈழநாடு 02 கொங்கு நாடு 07 வடநாடு 05
 • ஆழ்வார்களால் மங்காளசாசனம் செய்யப்பட்ட திருப்பதிகள் 108 ஆகும். அவையாவன:
  சோழநாடு 40 பாண்டிநாடு 18 மலைநாடு 13 பரமபதம் ஒன்று
  நடு நாடு 02 தொண்டைநாடு 22 வட நாடு 12 மொத்தம் 108
 • திருக்காளத்தி, திருச்சி, திருக்கோணமலை இவற்றை தென்திசை கயிலை எனக் கூறுவர்.
 • அட்ட வீரட்டங்கள் – சிவபிரான் புரிந்த எட்டு வீரசெயல்களை கொண்ட தலங்களை ‘அட்டவீரட்டங்கள்” என்பர். அவை: திருக்கண்டியூர், திருக்கோவிலூர், திருவதிகை, திருப்பறியலூர், திருவிற்குடி, திருவழுவூர், திருக்குறுக்கை, திருக்கடவூர்.
 • சில மூர்த்தி விசேஷ தலங்களாவன:
  விநாயகர் வலஞ்சுழி திருக்குமரன் திருவேரகம்
  தட்சிணாமூர்த்தி ஆலங்குடி சண்டேசர் சேய்ஞலூர்
  நந்தி திருவாவடுதுறை வடுகன்(பைரவர்) சீர்காழி
  சபாபதி தில்லை தியாகராஜர் திருவாரூர்
 • காசிக்கு சமமான தலங்களாவன: திருவெண்காடு, திருவையாறு, திருமயிலாடுதுறை, திருவிடைமருதூர், திருச்சாய்க்காடு, திருமுதுகுன்றம் (விருத்தாசலம்), திருவாஞ்சியம்.
 • நவதிருப்பதிகள் – 1)ஸ்ரீவைகுண்டம் 2)ஆழ்வார்திருநகரி 3)தென்திருப்பேரை 4)திருக்குளத்தை 5)புளியங்குடி 6)திருக்கோ@ர் 7)வரகுணமங்கை 8)தொலைவில்லிமங்கலம் 9)தொலைவில்லிமங்கலத்தில் அரவிந்தலோசனன் சன்னிதி தனியாக உள்ளது. அதைச் சேர்த்து ஒன்பது திருப்பதிகள் ஆகும்.

Pdf Download

TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download

TNPSC Current Affairs in Tamil 2018

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here