தீட்சை

0

தீட்சை

 • உயிருக்கு பாசத்தைக் கெடுத்து ஞானத்தை (அ) மெய்யுணர்வை ஏற்றுக்கொண்டு நன்மை பயப்பது – தீட்சை எனப்படும்.
 • முதல்வனது சந்நிதியில் தீட்சை எனப்படுவது – தொழிற்பாடு ஆகும்.
 • முதல்வன் செய்யும் ஐந்தொழில்களுள் அருளல் எனப்பொருள்படுவது – தீட்சை
 • சைவத் திருமுறைகளை ஓதுவதற்கும், சைவ நெறியை ஒழுகுவதற்கும் தகுதியை
  உண்டு பண்ணுவது – சிவதீட்சை எனப்படும்.
 • முதல்வனால் தரப்படும் தீட்சையின் வகைகள் – 2, அவை 1)நிராதாரம், 2)சாதாரம்
 • முதல்வன் தானே செய்யும் அருட்செயல் – நிராதார தீட்சை
 • அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியயோருக்கு அளித்தது – நிராதார தீட்சை
 • விஞ்ஞானகலருக்கும், பிரளயாகலருக்கும் இறைவன் அளித்த தீட்சை – நிராதார தீட்சை
 • சகலருக்கு முதல்வன் அளிக்கும் தீட்சை – சாதார தீட்சை
 • மாணிக்கவாசகருக்கு அளிக்கப்பட்ட தீட்சை வகை – சாதார தீட்சை
 • சாதார தீட்சை பொதுவாக தீட்சை என அழைக்கப்படுகிறது.
 • தீட்சையின் வகைகள்:- 3, அவை 1)சமயதீக்கை 2)விசேடதீக்கை 3)நிர்வாண தீக்கை
 • சரியை தொடங்குமுன் செய்யப்படுவது – சமயதீக்கை.
 • கிரியை தொடங்குமுன் செய்யப்படுவது – விசேஷதீக்கை
 • யோகம், ஞானம் தொடங்குமுன் செய்யப்படுவது – நிர்வாண தீக்கை
 • தீட்சை செய்யும் முறைகள் – 7 வகைப்படும். அவை: 1)ஸ்பரிசதீட்சை 2)நயனதீட்சை(திருநோக்கு) 3)மானததீட்சை(பாவனை) 4)வாசகதீட்சை(உரை)
  5)மந்திரதீட்சை(சாத்திரம்) 6)யோகதீட்சை 7)ஒளத்திரிதீட்சை
 • கோழி தன் முட்டையை அடைகாத்து குஞ்சை வெளிவரச் செய்வது போல் குரு தன்
  கரத்தால் சீடனை தொட்டு சீடனுக்கு கர்மபாசம் நீங்கச் செய்து பக்குவப்படுத்துவது –
  ஸ்பரிச தீக்கை.
 • மீன் தன் சினையிலிருந்து குஞ்சை வெளிவர செய்வதுபோல ஆசிரியன் தன் அருள்நோக்கால் பாச பந்தத்திலிருந்து மாணக்கனை விடுவித்தல் – நயன தீட்சை(திருநோக்கு).
 • ஆமை தன் முட்டையை மனத்தால் நினைத்து உதவுவதுபோல குரு தன் மாணவனது மனதை தன்வயப்படுத்தி அவனது கர்மத்தின் வலிமையை குறைய வைத்தல் – மானத தீட்சை(பாவனை).
 • குரு உபதேசித்து மாணவன் தெளிதல் – வாசகதீட்சை(உரை).
 • ‘காதற்ற ஊசியும் வாராது காணுங் கடை வழிக்கே” – என்று மருதவாணரின் உபதேசத்தால் துறவு பூண்டவர் – பட்டினத்தார். இது வாசகதீட்சைக்கு எ.கா. ஆகும்.
 •  ‘செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?” என்று
  மதுரகவியாழ்வார் கேட்டதற்கு ‘அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்று உரைத்தவர் – நம்மாழ்வார். இதுவும் வாசகதீட்சைக்கு எ.கா. ஆகும்.
 • குருவானவர் மந்திரத்தை உபதேசித்து, அதை சீடர்கள் உச்சரிப்பதன் மூலம் அவர்களது மலங்களை அழியச்செய்வது – மந்திர தீட்சை
 • யோகம் என்பது – சேர்க்கை என பொருள்படும்.
 • குரு மாணக்கனை இறைவனோடு ஒன்ற வைப்பது – யோக தீட்சை
 • ஹோமா அக்னி மூலம் சீடனின் மலங்களை நீக்கச் செய்வது – ஒளத்திரி தீக்கை.
 • ஒளத்திரி தீக்கை செய்யும் முறைகள் – 2 வகை. அவை 1)கிரியாவிதி 2)ஞானவழி
 • குண்டமண்டலங்களை ஹோமத்தோடு செய்வது – கிரியாவிதி எனப்படும்.
 • குண்டமண்டலங்கள் இன்றி ஹோமத்தை மனதால் செய்வது – ஞான வழி
 • ஒளத்திரி தீக்கையின் வகைகள் – 3, அவை சமயதீக்கை, விசேடதீக்கை, நிருவாண தீக்கை
 • ஒளத்திரியின் வகை மூன்றும் தனித்தனியே நிர்பீசம், சபீசம் என இருவகைப்படும்.
 • உபதேசிக்கும் மந்திரங்களை பீச அக்கரங்களின்றி உணர்த்துவது – நிர்ப்பீசம்.
 • அதாவது இது சமய ஆசாரங்களை ஓம்பி ஒழுக முடியாதவர்களுக்கு செய்யப்படுவது.
 •  நிர்பீசத்தின் வேறுபெயர் – நிரதிகாரை.
 • மந்திரங்களை பீசங்களுடன் உணர்த்துவது – சபீசம்.
 • சபீசத்தின் வேறுபெயர் – சாதிகாரை
 • வேள்விச்சாலை அமைத்து, தீயுருவாய் விளங்கும் இறைவனை மாணக்கன் வழிபடும்படி செய்து ஹோமத்தால் தூய்மைப்படுத்துவது – சமயதீக்கை
 • சமயதீக்கையின் வேறுபெயர் – மந்திராதிகாரை
 • சமயதீக்கை பெற்ற மாணக்கனை சிவபுத்திரன் ஆகசெய்வது – விசேடதீக்கை
 • விசேடதீக்கையின் வேறுபெயர்கள் – அர்ச்சனாதிகாரை, யோகாதிகாரை
 • மாணக்கனின் சஞ்சித கன்மத்தை வலுவிழக்கச் செய்து, மூல மலத்தின் வலியை
  நீக்கி, முப்பொருள் பற்றிய மெய்யுணர்வை பொதுவகையால் விளங்கச்செய்வது – நிர்வாணதீக்கை.
 • நிர்வாண தீக்கை பெற்றோர் மேற்கொள்ளும் நெறி – ஞானநெறி.

Pdf Download

TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download

TNPSC Current Affairs in Tamil 2018

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!