கடவுளும் உயிரும்

0

கடவுளும் உயிரும்

  • கடவுளால் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன, போகம் அளிக்கப்படுகிறது.
  • உலகை தனு, கரண, புவன, போகம் என நான்கு வகைப்பட விளக்குவது – சைவநூல்
  • தனு – 84 லட்சம் பேதத்திற்கும் கொடுக்கப்படும் உடம்புகள்.
  • கரணம் – 36 தத்துவங்களை கொண்ட மனம் என்னும் அகக்கருவிகளாகவும், புறக்கருவிகளாக 60 தத்துவங்களையும் கொண்டது.
  • உடம்புக்கு ஆதாரமாக உள்ள நிலம் – புவனம்
  • போகம் – உயிர்கள், ஐந்து இந்திரியங்கள் மூலம் நுகர விரும்பும் இன்பமாகும்.
  • அசுவத்தம் என்ற மரத்தின் இரு பறவைகள் – ஜீவாத்மா மற்றும் பரமாத்மா – முண்டக உபநிஷத்.
  • ‘கேவல சகல சுத்தமென்று மூன்றவத்தை ஆன்மா” — சிவஞானசித்தியார்.
  • உயிரின் மூன்று அடிப்படை உணர்வு நிலைகள் – 1)கேவலம் 2)சகலம் 3)சுத்தம்
  • கேவலம்(இரவு) – அறியாமையில் அழுந்தும் நிலை
  • சகலம் (பகல்) – உலகப்பொருட்களின் தன்மையில் அழுந்தும் நிலை.
  • சுத்தம்(இரவு பகலற்ற இடம்) – முதல்வனின் திருவருளில் அழுந்தும் நிலை.
  • கேவலாவத்தை : இறைவன் உலகைப் படைக்கும் முன் எவ்வித உடம்பும் இல்லாமல் ஆன்மா அஞ்ஞானத்தில் சூழப்பட்டு கிடக்கும்.
  • சகலாவத்தை : தனு, கரண, போகத்தில் திளைக்கும் ஆன்மா.
  • சுத்தாவத்தை : ஆன்மா விருப்பு, வெறுப்பற்ற நிலையிலிருக்கும். கன்மம், மாயை, அகன்று ஞானம் அருளும்.
  • சித்தியாரின் கூற்றுப்படி, ஆன்மாவிற்கு வேறொரு வகையில் 5 அவத்தை உண்டு.
ஐந்து அவஸ்தைகள்இடம்கருவி
ஜாக்ரம்புருவநடு35
சொப்பனம்கழுத்து25
சுஷுப்திஇதயம்3
துரியம்நாபி2
துரியாதீதம்மூலாதாரம்1
  • உயிரானது அன்னமயகோசத்தைப் பற்றி தொழில்பட்டு வினைப்பயனை நுகரும் நிலை – நனவு(ஜாக்ரம்)
  • உயிரானது பிராணமயகோசத்தைப் பற்றி நினைவு உணர்வுகளோடு கூடி வினைப்பயன்களை நுகரும் நிலை – கனவு (சொப்பனம்)
  • உயிரானது மனோமயகோசத்தை பற்றி நின்று ஒடுக்கமுறும் நிலை – உறக்கம் (சுழுத்தி (அ) சுஷுப்தி)
  • உயிரானது விஞ்ஞானமயகோசத்தைப் பற்றி நிற்கும் நிலை – பேருறக்கம் (துரியம்)
  • உயிரானது ஆனந்தமயகோசத்தைப் பற்றி நிற்கும் நிலை – உயிர்ப்படக்கம்(துரியாதீதம்)
  • சுஷுப்தியில் — பிராணவாயு, சித்தம், புருடத்துவம் ஆகியவை காணப்படுகிறது.
  • துரியத்தில் — பிராணவாயு, புருடத்துவம் ஆகியவை காணப்படுகிறது.
  • துரியாதீதத்தில் — புருடத்துவம் மட்டும் காணப்படுகிறது.
  • நம் உடலினுள் உள்ள நுண்ணுடல் சூக்கும சரீரம் (அ) யாதனா சரீரம் (அ) ஆவி (அ) உள்ளுடம்பு என அழைக்கப்படுகிறது.
  • ஸ்தூலத்திலிருந்து சூக்குமம் பிரிந்து செல்வதை படம்பிடித்தவர் – பாடரக்
  • ஸ்தூலசரீரத்தினுள் சூக்குமசரீரமும், சூக்குமசரீரத்தினுள் குணசரீரமும், குணசரீரத்தினுள் கஞ்சுக சரீரமும், கஞ்சுகசரீரத்தினுள் காரண சரீரமும் உள்ளன.
  • கனவு காணும் சரீரம் — சூக்கும சரீரம்
  • ஸ்தூல உடலைவிட்டு உயிர் பிரியும் நிலை – மரணம்

PDF Download

TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download

TNPSC Current Affairs in Tamil 2018

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!