உடம்பின் வகைகள் 

0

உடம்பின் வகைகள் 

 • தத்துவங்களுள் மாயையானது உயிரின் காரண சரீரம் எனப்படும்.
 • காலம், நியதி, கலை, வித்தை, அராகம் எனும் ஐந்தின் தொகுதி – கஞ்சுக சரீரம்
  (கஞ்சுகம் – சட்டை) எனப்படும்.
 • மூலப்பிரக்ருதியின் முக்குணங்களும் விளங்கி நிற்கும் நிலை – குணசரீரம் ஆகும்.
 • காரண, கஞ்சுக, குண ஆகிய மூன்று சரீரமும் சேர்ந்து உயிருக்கு மிக நெருக்கமாய் அமைந்த நிலை – பரசரீரம்.
 • பரசரீரத்திற்கு மேல் சூக்கும பூதம் எனப்படும் தன்மாத்திரை ஐந்து, மனம், புத்தி, அகங்காரம் ஆகியவையும் சேர்ந்து அமைவது – அகக்கரணசரீரம்.
 • 8 தத்துவங்களால் அகக்கரணசரீரம் அமைந்த நிலை – புரியட்டகம்.
 • கனவு நிலையில் நமது உணர்வும், போக நுகர்ச்சியும் உண்டாக காரணமான சரீரத்தின் பெயர் – அகக்கரணசரீரம்.
 • ஆயுள் முடிவில் உடலை உயிர்நீத்தபின் பிரிதோர் உடலை எடுக்க காரணமான சரீரம் – அகக்கரணசரீரம்.
 • நனவு நிலையில் போக நுகர்ச்சிக்கு காரணமாக அமையும் பருவுடம்பின் பெயர் ஸ்தூலசரீரம்
 1. காரணசரீரம் – ஆனந்தமயகோசம்
 2. கஞ்சுக சரீரம் – விஞ்ஞானமயகோசம்
 3. குணசரீரம் – மனோமயகோசம்
 4. அகக்கரணசரீரம்(சூட்சும உடல்) – பிராணமயகோசம்
 5. ஸ்தூல சரீரம் (உயிர்) – அன்னமயகோசம்
 • பாசங்கள் நீங்கி நிற்றல் – முதல்வன் இலக்கணம்.
 • பாசங்களில் கட்டுண்டு நிற்றல் – உயிர்களின் இலக்கணம்.
 • ‘மீளா அடிமை உனக்கே” – என்றுரைத்தவர் நம்பியாரூரர்(சுந்தரர்)
 • ‘என்று நீ அன்று நான் உன்னடிமையல்லவோ!” – தாயுமானவர்.

ஆன்மாக்கள்:

 • உயிர்களின் தோற்றம் நான்கு. பிறப்பு ஏழு வகை. உருவவேற்றுமை (பேதம்) 84 லட்சம்.
 • நான்கு வகை தோற்றம்
அண்டஜம் முட்டையில் தோன்றுவன. எ.கா. பறவை, ஊர்வன, நீர்வாழ்வன
ஸ்வேதஜம் வேர்வையில் தோன்றுவன. எ.கா. கிருமி, பேன்
உத்பிஜ்ஜம் வித்து, வேர், கொடி, கிழங்கிலிருந்து  தோன்றுவது (தாவரங்கள்)
சராயுஜம் கருப்பையில் தோன்றுவன எ.கா. மனிதரும், விலங்குகளும்

எழுவகை பிறப்புக்களாவன:

பிறப்பு

உருவவேற்றுமை

பிறப்பு

உருவவேற்றுமை

தேவர் பதினோரு இலட்சம் பறவை பத்து இலட்சம்
மனிதர் ஒன்பது  இலட்சம் ஊர்வன பதினைந்து லட்சம்
விலங்குகள் பத்து இலட்சம் நீர்வாழ்வன பத்து லட்சம்

 

தாவரம் பத்தொன்பது லட்சம்
 • தாவரம் என்பது – அசரம் எனவும், நிலையியல் பொருள் எனவும் அழைக்கப்படும்.
 • மேற்காணும் ஏனைய பிறப்புப் பொருட்கள் அனைத்தும் சங்கமம் எனவும், சரம் எனவும் அழைக்கப்படும்.
 • ‘உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப்பது போல பிறப்பு” – திருக்குறள்.
 • வையத்து இறந்தாரை எண்ணிக் கொண்டற்று” – திருக்குறள்.

Pdf Download

TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download

TNPSC Current Affairs in Tamil 2018

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!