பதி,பசு,பாசம்

0

பதி,பசு,பாசம்

 • முடிவுநிலை உண்மைப்பொருட்கள் இறை, உயிர், தளை என மூன்று வகைப்படும்.
 • அவை முறையே பதி,பசு,பாசம் எனவும் வேறுபெயரிட்டு அழைக்கப்படும்.
 • தளை (அ) பாசம் என்பது ஆணவம்,கன்மம்,மாயை என மூன்று வகைப்படும்.
 • உயிர்களின் நிலைகள் – அவை பிறப்பு நிலை,வீட்டு நிலை.
 • ‘பந்தமும் வீடும் ஆய பதபதார்த்தங்கள் அல்லான்” – சிவஞானசித்தியார்.
 • ‘அனாதிமுத்த சித்துருவாகிய எந்தை, கட்டு வீடு எனும் பதங்களையுடைய பசு பாச பதார்த்தங்களது இயல்புடையன் அல்லன்” – சிவஞானசித்தியார்.
 • ‘பதம் அவ்வச் செவ்வி” – சிவஞானசித்தியார்
 • முதல்வனது சக்தி திருவருள் எனவும்,திருவடி எனவும்,சிவஞானம் எனவும்,அம்மை எனவும் அழைக்கப்படுகிறது.
 • முதல்வனானவன் – தேவசவிதா,சிவசூரியன் எனவும் அழைக்கப்படுகின்றான்.
 • இறைவனின் திருவுருவங்கள் மூன்று வகைப்படும். அவை 1)போகவடிவம் 2)கோரவடிவம் 3)யோக வடிவம்.

பசு

 • உயிர் (அ) ஆன்மா எனப்படும் பல என்றும் அவை உள்ளவை.
 • கடவுள் உயிரை உண்டாக்குவதில்லை. உடம்பையே படைக்கின்றார். அதனுள் பொறி, புலன்,கரணம் அமைக்கின்றார். அவை கருவி (அ) தத்துவம் எனப்படும்.
 • உள்நிலை கருவிகள் புறநிலைக் கருவிகள் 60. மொத்தம் 96.
 • ஆன்மாவின் அவஸ்தைகள் – ஐந்து. அவை 1)ஜாக்ரம் 2)சொப்னம் 3)சுஷ{ப்தி 4)துரியம் 5)துரியாதீதம்.
 • ஆன்மா 3 வகைப்படும்.1)விஞ்ஞானகலர் – ஆணவமலம் பற்றி நிற்கும் 2)பிரளயாகலர் — ஆணவ,கன்ம மலம் பற்றி நிற்கும் சகலர் – ஆணவ,கன்ம,மாயை மலம் பற்றி நிற்கும்.
 • ஆன்மா ஸதஸத்து (சார்ந்ததன் வண்ணமாகும் தன்மையுடையது)

பாசம் (அ) தளை (அ) தடை

 • ஆன்மாவை பற்றி நிற்பது – பாசமாகும். பற்றறுத்தால் அது பதியுடன் கலக்கும்.
 • தளை(அ) பாசம் ஐந்து வகைப்படும். அவை 1)ஆணவம் 2)கன்மம் 3)திரோதயி 4)சுத்தமாயை 5)அசுத்தமாயை.
 • உயிர்களின் தூய்மையை மாற்றி துன்புறுத்தும் மாசு எனப்படுவது – ஆணவம்,கன்மம், மாயை எனும் மூன்றும்.
 • பசுவை கட்டி நின்று இறைவனை அடையவிடாமல் தடைசெய்வது – பாசம்

ஆணவம்

 • ஆணவ மலம் – உயிர்களின் அறிவாற்றலை இல்லை எனும்படி மறைத்து நிற்பது. இது உயிர்தோறும் செம்பில் களிம்பு போலவும்,நெல்லுக்கு உமியாகவும் காணப்படும்.
 • ஆணவ மலத்தின் வேறுபெயர்கள் – மூலமலம்,சகஜமலம், இருள், அவித்தை, அறியாமை.
 • ‘ஆணவத்தை நீக்கிக் கொள்ள உலகத்தார் முந்துவது இல்லை” – உமாபதிசிவனார்.
 • அறியாமைக்கு காரணம் – ஆணவம் ஆகும்.
 • ஆணவத்தால் முழுவதும் அறிவிழந்து நின்ற உயிர்களுக்கு சிற்றறிவும் சிறுசெயலும் விளங்குதற்பொருட்டு இறைவன் மாயையின் சம்பந்தத்தை உண்டுபண்ணுவது – ‘உலகுசிருஷ்டி” எனப்படும்.
 • கனவு,உறக்கங்களில் அறிவாற்றலை மறைப்பதும்,நனவு நிலையில் தன்னை நோக்காது புறப்பொருளை நோக்கி ஓடுமாறு நம் அறிவை திசைதிருப்புவது ஆணவ மலத்தின் செயலாகும்.
 • ஆவாரகம் – மறைப்பு: அதோநியாமிகாசக்தி – கீழ்வீழ்க்கும் சக்தி (அ) இருள்.
 • நியாமிகாசக்தி – மருள்,மாசு,செருக்கு எனவும் பொருள்படும்.

கன்மம்

 • கன்மம் — உயிர்கள் உடம்பிலிருக்கும்போது மன,மொழி,மெய்களால் செய்யும் நல்லனவும்,தீயவும் ஆகிய செயல்களே கன்மமாகும். இதை ‘வினை” எனக்கூறுவர்.
 • இது 1)சஞ்சிதம் 2)பிராரப்தம் 3)ஆகாமியம் என மூவகைப்படும்.
 • ஆகாமியம் – எதிர்வினை: பழக்க ரூபமாய் புத்தியில் நுண்ணிய நிலையில் பற்றி நிற்கும்போது ‘கிடைவினை” (சஞ்சிதம்) எனப்படும்.
 • கிடைவினையில் பக்குவப்பட்ட பாகம் இன்ப,துன்ப நுகர்ச்சியை பயப்பதாய் வெளிப்படும் நிலையில் “நுகர்வினை” ( பிராரப்தம்) எனப்படும்.
 • கிடைவினை பயன்படும்போது அது மூன்று வகைப்படும். அவை 1)ஆதித்தைவிகம் – தெய்வத்தால் வருவது 2)ஆத்தியான்மிகம் – அறிவியல் பொருளோடு கூடிய உயிர்கள் வாயிலாக வருவது 3)ஆதிபௌதிகம் – அறிவியல் பொருள் வாயிலாக வருவது.
 • வாழ்க்கை சூழ்நிலைக்கு காரணமான கிடைவினை – சனகம் எனப்படும்
 • ஆயுளுக்கு காரணமான கிடைவினை — தாரகம் எனப்படும்.
 • பிறவற்றிற்கு காரணமான கிடைவினை – போக்கியம் எனப்படும்

மாயை

 • மாயை — சுத்த மாயை,அசுத்தமாயை என இருவகைப்படும்.
 • இன்பம் ஒன்றே பயப்பது – சுத்தமாயை இன்ப,துன்ப,மயக்கம் என்ற மூன்றையும் தருவது – அசுத்தமாயை
 • தனு,கரண,புவன,போகம் என நான்கும் ஒன்றாக இணைந்து நிற்கும்போது அதன் பொருள் – மாயேயம்
 • காணப்படும் பொருள்கள் எல்லாவற்றுக்கும் முடிந்த முதற்காரணமாக உள்ள பொருள் – மாயை ஆகும்.
 • மாயையிலேயே தோன்றி மாயையிலேயே மறைவன – தனு,கரண,புவன,போகம்
 • பிரளயா மற்றும் விஞ்ஞானகலருக்கு தனு,புவன,கரண,போகம் முதலியவற்றை கொடுப்பது – சுத்த மாயை.
 • அசுத்தமாயையும் – மேலே சொன்னவற்றை கொடுக்கும். ஆனால் திரோதாயி ஆன்மாவை இதில் அழுந்தி கிடக்கச் செய்யும்.
 • அசுத்தமாயையின் முதற்காரியம் – மாயை.
 • அசுத்தமாயை – மோகினி,அதோமாயை என வேறுபெயராலும் அழைக்கப்படும்.
 • ‘விடிவாம் அளவும் விளக்கணைய மாயை,வடிவாதி கன்மத்து வந்து” – திருவருட்பயன்.
 • சுத்தமாயை,சொல் மற்றும் பொருள் என இருவகைப்படும்.
 • சொல் – உயிருக்கு,உலகப்பொருள்களை இ~து இன்னது என வேறுபடுத்தி உணரும் சவிகற்ப உணர்வை பயக்கும்.
 • மொழி – எழுத்து,சொல்,மந்திரம் என 3 வகைப்படும்.

 • படைப்புக் காலம் முதல் ஊழிக்காலம் வரை தன் தன்மை மாறாது நிலைத்துள்ள பொருட்கள் – தத்துவங்கள் எனப்படும்.
 • உயிரை உலகபோகத்தில் அழுந்தும்படி செய்வது – தத்துவங்கள்
 • அசுத்தமாயை வித்தியாதத்துவம், ஆன்மதத்துவம் என இருவகைப்படும்.
 • வித்தியா தத்துவம் — மாயை, காலம், நியதி, கலை, வித்தை வித்தியா தத்துவம , அராகம், புருடன் என வழங்கும்.
 • ஆன்மதத்துவங்கள் — பிராக்ருதி, புத்தி, அகங்காரம், மனம் ஆன்மதத்துவங்கள எனும் அந்தகரணம் என நான்கு. மெய், வாய், கண்,மூக்கு, செவி எனும் அறிவுப்பொறி (ஞானேந்திரியங்கள்) ஐந்து. வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம் என்னும் தொழில்பொறி(கன்மேந்திரியம்) ஐந்து. சுவை, ஒளி,ஊறு, ஓசை,நாற்றம் என்னும் தன்மாத்திரை(சூக்குமபூதம்) ஐந்து. வான், வளி, அனல், புனல், மண் எனும் பூதங்கள் ஐந்து. ஆக மொத்தம்
 • புறக்கருவிகளின் எண்ணிக்கை – 20
 • ஐம்பூதங்களின் நுண்ணிய நிலை – தன்மாத்திரை
 • நாதம், விந்து, சாதாக்கியம், ஈசுவரம், சுத்தவித்தை ஆகிய ஐந்தும் சிவதத்துவங்களாகும்.
 • எனவே சிவதத்துவம் – 5, வித்தியாதத்துவம் – 7, ஆன்மதத்துவம் – 24. ஆக மொத்தம் சைவத்தில் கூறப்படும் தத்துவங்கள்
 • 24 தத்துவங்களையும் அடக்கும் மூவகை குணங்கள் – சத்துவம், ராசதம், தாமசம்
 • சத்துவம், ராசதம், தாமசம் எனப்படும் மூவகை குணங்கள் பிரியாமல் அடங்கி நின்ற நிலையே — மூலப்பகுதி எனப்படும்.
 • ஆனந்த மயகோசம் எனப்படுவது – ‘காரியமாயை’ என தைத்தீரிய உபநிஷத் கூறுகிறது
 • கலை, வித்தை, அராகம் இம்மூன்றினால் உயிர் தன் செயல், இச்சை, அறிவு
 • என்னும் மூவகை ஆற்றலும் விளங்கி உலகப்பொருட்களால் வரும் இன்பதுன்ப மயக்க நுகர்ச்சியை பெறும் தகுதியுடையதாய் நிற்கும் நிலை – புருடன்.
 • உயிர்க்கு புருடனாகும் தன்மையை எய்துவிப்பவை – வித்தியாதத்துவங்கள்.
 • புருடனை போகியாய் நின்று மயங்கச் செய்வது – ஆன்ம தத்துவங்கள்.
 • காலம், நியதி, கலை, வித்தை, அராகம் எனும் 5 தத்துவங்களின் தொகுதியே – விஞ்ஞானமயகோசம் என தைத்தீரிய உபநிஷத் குறிக்கிறது.
 • சிவதத்துவம் ஐந்தும் செலுத்தும் கருவிகள் பற்றி கூறுவது – பிரேரக காண்டம் எனப்படும்.

PDF Download

TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download

TNPSC Current Affairs in Tamil 2018

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!