சைவம், சிவம் என்பதன் பொருள்

0

சைவம், சிவம் என்பதன் பொருள் பாடக்குறிப்புகள்

 • சைவம் என்பது – சிவ சம்பந்தமுடையது.
 • கடவுள் என்பதன் பொருள் – யாவர் உணர்வையும் கடந்தவர்.
 • இறைவன் என்பதன் பொருள் – எப்பொருளிலும் தங்குபவன்.
 • முதல்வன் என்பதன் பொருள் – எப்பொருளுக்கும் முற்பட்டு அதனை  தொழிற்படுத்துபவன்.
 • சிவம் என்பது – செம்பொருள் என்ற சொல்லைக் குறிக்கும்.
 • ‘பெண்ணாண் அலியெனும் பெற்றியன் காண்க” – திருவாசகம்.
 • திருஞானசம்பந்தர் பௌத்தர்களை வாதில் வென்ற இடம் – திருதெளிச்சேரி
 • ‘பாசமாம் பற்றறுக்கும் ஆரியனே” – திருவாதவூராரின் திருவாசகம்.
 • ‘தெய்வமே சிவமே, சிவனருள் சைவம் சிவத்தொடு சம்பந்தம்” -திருச்சிற்றம்பலநாடிகள் வாய்மொழி.
 •  ‘ஓரல் நீழல் ஒன்கழல் இரண்டும்” – திருஞானசம்பந்தர் எழுதிய திருமொழிப்பாடல்.
 • சிந்து சமவெளி நாகரிகம் இன்றிலிருந்து – சுமார் ஐந்தாயிரம்(5000) ஆண்டுகளுக்கு
  முற்பட்டது.
 • ஹரப்பா என்னுமிடத்தில் முதன்முதலில் ஆராய்ச்சி செய்து அறிக்கை வெளியிட்டவர் – சர் ஜான் மார்ஷல்.
 •  ‘இருமொழிக்கும் கண்ணுதலார் முதற்குரவர்” – காஞ்சிப்புராணம்
 • சமட்டி நிலை என்பது – முழுமுதல் இணைந்தது எனப் பொருள்படும்.
 • வியட்டி நிலை என்பது – பிரிவு நிலையைக் குறிக்கும்.
 • ‘சத்” என்ற சொல் குறிப்பது – சிவபெருமான்.
 • ‘சத்தாகிய ஒன்றே முதற்கண் உலகத் தோற்றத்தின் முன் அத்விதீயமாய் இருந்தது” –
  சாந்தோக்ய உபநிஷத்.
 • ‘ஒருவன் உருத்திரனே, இரண்டாவதொன்றைக் கொள்வார் அல்லர்” – சுவாதாசுவர உபநிஷத்.
 • ‘ஒருவன் என்னும் ஒருவன் காண்க” – மாணிக்கவாசகர்.
 • ‘ஒளி மணிவண்ணன் என்கோ! நளிர்மதிச் சடையன் என்கோ!” – நம்மாழ்வாரின்
  திருவாய்மொழி.
 • சக்தியும் சிவனும் சத் எனும் சொல்லின் பகுதி விகுதிகளாக ஓதப்படுகிறார்கள்.
 • ‘தம்மலர் அடியொன்று அடியவர் பரவ” – திருஞானசம்பந்தர்.
 • சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை தோன்றிய காலம் – சங்க காலத்தின் இறுதியில்.
 • சுடலையாடி என அழைக்கப்படுபவர் – சிவபெருமான்.
 • ‘உலகம் யாவும் யாண்டு ஓடுங்கும், அவை ஆண்டு நின்றே தோன்றும்” -கலித்தொகை.
 • ‘ஒடுங்கி மலத்து உளதாம் அந்தம் ஆதி என்மனார் புலவர்” – சிவஞானபோத முதற் சூத்திரம்.
 • “மலர்தலை உலகத்து மரபு நன்கறியப் பலர்செலச் செல்லாக் காடு வாழ்த்து” – தொல்காப்பியரின் காஞ்சித்திணையின் பொருட்பகுதி.
 • ‘ஊனக்கண் பாசம் உணராப் பதியை ஞானக்கண்ணினில் சிந்தை நாடி” – சிவஞான போத ஒன்பதாம் சூத்திரம்.
 • தொல்காப்பியம், திருக்குறள் ஆகிய நூல்கள் – நான்கு வேத நெறியினையும், நான்மறை வழக்கையும் தழுவி அமைந்துள்ள நூல்களாகும்.
 • ‘தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” – மாணிக்கவாசகர்.
 • கங்கையும் யமுனையும் இணையுமிடம் – பிரயாகை.
 • ‘தேவர் குறளும் திருநாள் மறைமுடியும்” – ஒளவையாரின் நல்வழி.
 • நான்கு வேதங்களின் முடிபு என அழைக்கப்படுவது – உபநிடதங்கள்.
 • சைவ சமயத்தின் பழங்கால பெயர்கள் – திருநெறி, மெய்நெறி, முன்நெறி, சிவமாநெறி.
 • ஆரியர்கள் சிந்து நதிக்கரையில் வசித்தபோது அவர்களை ‘இந்துக்கள்” என அழைத்தவர்கள் — பாரசீகர்கள் மற்றும் கிரேக்கர்கள்.
 • ஹிந்து என்பதன் பொருள் — ஹிம்சையில் துக்கிக்கின்றவன்
 • பிற உயிர் துன்புறும்போது அத்துன்பம் தமக்கு நேர்ந்தது போல் வருந்துபவன் – இந்து.
 • அன்பே சிவம் எனக் கூறுவது – இந்து மதம்
 • இந்து மதத்தின் வேறுபெயர்கள் — சநாதனதர்மம், திருநெறி, தவநெறி, அருள்நெறி, அன்புமதம் ஆகியன.
 • ‘சநாதனதர்மம்” என்பதன் பொருள் — அழிவிலா அறம்.
 • பழமையான மதம், உலக மதங்களுக்கு தாய் – இந்து மதம்.
 • ‘இந்து மத இணைப்பு விளக்கம்” ‘இந்து மத இணைப்பு விளக்கம எனும் நூலை எழுதியவர் – மகாவித்துவான் ஆறுமுக நாவலர்.

Pdf Download

TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download

TNPSC Current Affairs in Tamil 2018

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!