TNPSC வேலைவாய்ப்பு 2022 – மாதம் ரூ.1,34,200 ஊதியம் || இப்போதே விரையுங்கள்!

0
TNPSC வேலைவாய்ப்பு 2022 - மாதம் ரூ.1,34,200 ஊதியம் || இப்போதே விரையுங்கள்!
TNPSC வேலைவாய்ப்பு 2022 - மாதம் ரூ.1,34,200 ஊதியம் || இப்போதே விரையுங்கள்!
TNPSC வேலைவாய்ப்பு 2022 – மாதம் ரூ.1,34,200 ஊதியம் || இப்போதே விரையுங்கள்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் சமீப காலமாக அதிக அளவிலான காலியிடங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில், அலுவலக பணியாளர்களான Assistant Section Officer மற்றும் Assistant ஆகிய பதவிகளுக்கு 161 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC வேலைவாய்ப்பு:

TNPSC ஆணையமானது அரசு துறைகளில் காலியாக உள்ள Assistant Section Officer மற்றும் Assistant ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது. அரசின் அறிவிப்பின் படி, Assistant Section Officer in Secretariat (Other than Law and Finance Department) பணிக்கு 74 காலியிடங்களும், Assistant Section Officer in Secretariat (Finance Department) பணிக்கு 29 இடங்களும், Assistant in Secretariat (Other than Law and Finance Department) பணிக்கு 49 இடங்களும், Assistant in Secretariat (Finance Department) பணிக்கு 9 பணியிடங்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பில் உள்ள பணியிடங்களுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Commerce, Economics, Statistics போன்ற பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்கள் தகுதியானவர்களாக கருதப்படுவார்கள். மேலும், பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் Assistant அல்லது Junior Assistant பதவிகளில் 03 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை அனுபவம் இருப்பின் அவர்கள் கூடுதல் தகுதி உடையவர்களாக கருதப்படுவார்கள். விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்றைய தேதியின் Assistant Section Officer பணிக்கு 35க்கு மிகாமலும், Assistant பணிக்கு 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. SC / ST பிரிவினருக்கு கூடுதல் 5 ஆண்டுகள் வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

ESIC நிறுவனத்தில் நல்ல வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.2,00,000!

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

Assistant Section Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் Level 16 படி, ரூ.36,400/- முதல் ரூ.1,34,200/- வரை மாத சம்பளமும், Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் Level 9படி, ரூ.20,000/- முதல் ரூ.73,700/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள். மேலும், விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கான பதிவு கட்டணம் ரூ.150 மற்றும் தேர்வு கட்டணம் ரூ,100 ஐ விண்ணப்பதாரர்கள் செலுத்த வேண்டும். குறிப்பாக, SC / ST / PWD பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 21ம் தேதியான நாளை இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயனடைய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNPSC NOTIFICATION

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!