TNPSC தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – தவறாமல் படிங்க!

0
TNPSC தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 - தவறாமல் படிங்க!
TNPSC தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 - தவறாமல் படிங்க!
TNPSC தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – தவறாமல் படிங்க!

TNPSC தற்போது திருத்தப்பட்ட புதிய தேர்வு கால அட்டவணையை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் இளைஞர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு தயாராகவும், தேர்வு முடிவுகள், நேர்காணல், கலந்தாய்வு விவரங்களை அறிவதால் உத்வேகத்துடன் தேர்வுக்கு படிப்பதற்கும் தேர்வு கால அட்டவணை பெரிதும் உதவும் என்று குறிப்பிட்டுள்ளது.

திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை வெளியீடு:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த போட்டி தேர்வுகள் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 என்ற வகைகளில் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு நடக்க உள்ள தேர்வுகள் குறித்த ஓராண்டு கால அட்டவணை, முன்னதாக கடந்த ஆண்டே வெளியாவது வழக்கம் ஆகும். இருப்பினும் கடந்த ஒன்றரை வருடமாக எந்த ஒரு தேர்வுகளும் கொரோனா பரவல் காரணமாக நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ரூ.10,000 அட்வான்ஸ் தொகை!

மேலும் கடந்த ஆண்டு இறுதியில் நடப்பு ஆண்டுக்கான(2022ம் ஆண்டு) போட்டி தேர்வுகள் குறித்த கால அட்டவணையை TNPSC வெளியிட்டது. அந்த கால அட்டவணை அடிப்படையில் இந்த மாதம் குரூப் 2, குரூப் 2A தேர்வு நடக்க உள்ளதாகவும், அடுத்த மாதம் குரூப் 4 தேர்வு நடக்க உள்ளதாக அட்டவணையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் மே 21 ல் குரூப்- 2, குரூப் 2- ஏ போட்டித் தேர்வு நடைபெறும் என்று கடந்த 18ம் தேதி அறிவிப்பு வெளியானது. இந்தத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும். குரூப்-2 தேர்வு 3 கட்டமாக நடைபெற உள்ளது. மொத்தம் 5,417 பணியிடங்களுக்கு நடைபெறும்

மத்திய அரசு ஊழியர்களின் 18 மாத அகவிலைப்படி நிலுவைத்தொகை – அரசின் திடீர் முடிவு!

இந்த நிலையில் 2022-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையை TNPSC தனது இணையதளத்தில் (www.tnpsc.gov.in)  சமீபத்தில் வெளியிட்டது. அதில் 21 போட்டித் தேர்வுகளுக்கு அறிவிப்புகள் வெளியாகும் மாதம், ஒவ்வொரு தேர்வு மூலம் நிரப்பப்படும் காலியிடங்களின் எண்ணிக்கை ஆகிய விவரங்கள் மட்டும் இடம்பெற்றிருந்தன. மேலும் கூடுதலாக, தேர்வு எந்த மாதத்தில் நடத்தப்படும், அதன் முடிவுகள் எந்த மாதம் வெளியிடப்படும். நேர்காணல், கலந்தாய்வு எப்போது நடத்தப்படும் ஆகிய விவரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே தேர்வர்கள் இணையதளத்தில் சென்று கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!