TNPSC இயற்பியல் பாடக்குறிப்புகள் – காந்தவியல்

1

பொது அறிவியல் – காந்தவியல்

TNPSC, UPSC பாடக்குறிப்புகள்- கிளிக் செய்யவும்

இயற்பியல் பாடக்குறிப்புகள்- கிளிக் செய்யவும்

இங்கே போட்டி தேர்விற்கான காந்தவியல் பற்றிய முக்கிய இயற்பியல் பாடக்குறிப்புகள் கொடுத்துள்ளோம்.  தேர்வுக்கு தயாராகுபவர்கள் பொது அறிவியல் பாடக்குறிப்புகளை பயன்படுத்தி கொள்ளவும்.

TNPSC இயற்பியல் பாடக்குறிப்புகள் – காந்தவியல்

காந்தவியல் என்பது மூலப்பொருட்கள் காந்தப் புலங்களில் விழும்பொழுது அதன் அணுக்களில் ஏற்படும் விளைவிகளில் தொடர்புள்ளதாகும். இரும்புக் காந்தவியல், காந்தவியலில் சிறப்பு வாய்ந்ததாகும். காந்தப்புலங்களை வெளியிடும் நிலைக்காந்தம், அது ஈர்க்கும் பொருட்களுக்கான அடிப்படைக் காரணமாக உள்ளது. ஆனாலும் எல்லாப் பொருட்களும் சிறிய அளவிலாவது காந்தப்புலத்திற்கு விளைவுகளுக்கு ஆளாகும்.

காந்தப்புலங்களைப் பொருட்படுத்தாத பொருட்களை சாராக் காந்தப் பொருட்கள் என்று அழைப்பர். அவைகளில் காப்பர், அலுமினியம், வாயுக்கள், நெகிழிகள் ஆகியவை அடங்கும்.

காந்த பொருள் வகைகள்

காந்தமாக்கும் புலத்தினுள் பொருள்களின் பண்புகளைப் பொருத்து அவற்றை பொதுவாக மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

  1. டயா காந்தப் பொருள்கள்
  2. பாரா காந்தப் பொருள்கள்
  3. ஃபெர்ரோ காந்தப் பொருள்கள்

காந்த பொருள்விளக்கம் உதாரணம் காந்த புலம்வெப்ப நிலை
1. டயா காந்தப் பொருள்கள்நிகர காந்தத் திருப்புத்திறன் சுழி மதிப்பைப் பெற்ற அணுக்களைக் கொண்ட பொருள்கள் செப்பு, பாதரசம், நீர் வலிமை வாய்ந்தது அதிகரிக்கும்
2. பாரா காந்தப் பொருள்கள்ஒரு பொருளின் அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் சுழியற்ற நிகர காந்தத் திருப்புத் திறனை கொண்ட பொருள்கள்அலுமினியம், பிளாட்டினம், குரோமியம்வலுக்குறைந்ததுஎந்த மாற்றமும் இல்லை
3. ஃபெர்ரோ காந்தப் பொருள்கள்அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் ஒரு வலிமையான நிகர காந்தத் திருப்புத் திறனை இயல்பாகவே பெற்றுள்ள பொருள்கள் இரும்பு, நிக்கல்வலிமை வாய்ந்தது அதிகரிக்கும்

காந்த பண்புகள்:

காந்த நிலை, ஒரு பொருளில் உண்டாகும் வெப்பநிலை, பிற காந்தப்புலங்கள், அல்லது அழுத்தம் ஆகியவற்றை பொருத்து மாறுபடும். அதாவது ஒரேப் பொருள் வெவ்வேறு வெப்பநிலையில், வெவ்வேறு காந்த நிலையாக இருக்கும்.

காந்தவியல் விளக்கங்கள்:

காந்தவியல் சொற்கள்விளக்கம்சூத்திரம்
காந்த புலச் செறிவுஒரு பொருளை காந்தமாக்கப் பயன்படும் காந்தப்புலம், காந்தமாக்கும்புலம் அல்லது காந்தப்புலச் செறிவு எனப்படும்H
காந்த உட்புகுதிறன்காந்த உட்புகுதிறன் என்பது, ஒரு பொருள் அதனுள்ளே காந்தவிசைக் கோடுகளை அனுமதிக்கும் திறனைக் குறிக்கும்µ = B/H
காந்த ஏற்புத் திறன்காந்த ஏற்புத் திறன் என்ற பண்பு ஒரு பொருள் எவ்வளவு எளிதில் மற்றும் எவ்வளவு வலுவுடன் காந்தமாக்கப்படுகிறது என்பதைத் தீர்மானிக்கிறது.X m =I/H
காந்தப்பாயம் மின்காந்தவியலில்,மேற்பரப்பொன்றினூடாகப் பாயும் காந்தப்பாயம்  என்பது அம்மேற்பரப்பினூடாகச் செல்லும் காந்தப் புலம் B யின் செங்குத்துக் கூறின் மேற்பரப்புத் தொகையீடாகும்ΦB = B. S Cos θ
காந்தப் புலம்காந்தப் புலம் என்பது மின்னோட்டத்தின் அல்லது காந்தப் பொருள் ஒன்றின் காந்த விளைவாகும். ஒவ்வொரு புள்ளியிலும் உள்ள காந்தப் புலம் திசையாலும் வலிமையாலும் குறிப்பிடப்படுகிறதுB= µH
காந்தத் தயக்கம்புறக் காந்தப்புலம் ஒன்றில் வைக்கப்படும் ஒரு அயக்காந்தப் பொருள் காந்தப்புலத்தின் திசையிலேயே காந்தமாக்கம் அடையும்; அவ்வாறு ஒரு திசையில் காந்தமாக்கப்பட்ட அயக்காந்தப் பொருள், காந்தமாக்கும் புலத்தைச் சுழியாக்கிய பின்னரும் தன் காந்தத்தன்மையை இழக்காது. இவ்வாறு, காந்தமாக்கும் புலத்தைப் பொறுத்து காந்தத்தன்மை பின் தங்கும் நிலை காந்தத் தயக்கம் ( magnetic hysteresis ) எனப்படும் -
காந்த இயக்கு விசை காந்த இயக்கு விசை (Magneto motive force) காந்தச் சுற்றமைப்பின்/சுற்றதரின் காந்தப் பெருக்குக்கானசமன்பாட்டில் வரும் ஓர் அளவாகும். இது ஃஆப்கின்சனின் விதி எனப்படுகிறது.F = ΦR
காந்த அழுத்த ஆற்றல்ஒரு புள்ளியில் காந்த அழுத்த ஆற்றல் (magnetic potential energy) என்பது அலகு காந்தமுனையை வெகு தொலைவிலிருந்து அப்புள்ளிக்கு காந்தவிசைக்கு எதிராக கொண்டு வரும் போது செய்யப்படும் வேலையின்அளவாகும். இது காந்த இயக்கவிசைக்குச் சமம்.U = -m. B

காந்த தயாரிப்பு முறை:

  1. ஒற்றை தொடர்பு முறை
  2. இரட்டை தொடர்பு முறை
  3. மின்சாரத்தை பயன்படுத்துதல்

காந்த புலம் மற்றும் எல்லை:

காந்த புலங்கள்டெஸ்லா மதிப்பு
அணுக்கருவிற்கு உள்ளே10 -11 T
மீக்கடத்தி வரிச்சுருள் 20 T
மீக்கடத்தி சுருள் சைக்ளோட்ரான்
5 T
சிறிய காந்தம்0.5 T
பூமியின் நிலப்பகுதி4(10 −5 ) T
விண்மீன் இடைவெளி2(10 −10 ) T

PDF Download

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!