TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – ரூ.71900 வரை சம்பளம்! முழு விவரம்!

0
TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு - ரூ.71900 வரை சம்பளம்! முழு விவரம்!
TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு - ரூ.71900 வரை சம்பளம்! முழு விவரம்!
TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – ரூ.71900 வரை சம்பளம்! முழு விவரம்!

நில அளவர், வரைவாளர், அளவர்/உதவி வரைவாளர் பதவிகளுக்கான காலிப் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மேலும் ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு அறிவிப்பு :

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நில அளவை பதிவேடுகள் சார்நிலைப் பணிகளில் அடங்கிய நில அளவர் மற்றும் வரைவாளர் பணியிடங்கள் மற்றும் நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணிகளில் அடங்கிய அளவர்/ உதவி வரைவாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைனில் கடன் வழங்கும் ஆப்களின் மீது நடவடிக்கை – மத்திய நிதியமைச்சர் எச்சரிக்கை!

மொத்த காலியிடங்கள்: 1089

பதவியின் பெயர் : நில அளவர்
பணியின் பெயர் மற்றும் பணி குறியீடு: நில அளவைப் பதிவேடுகள் சார்நிலைப் பணி
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை: 794 +4 (முன்கொணரப்பட்ட காலிப் பணியிடங்கள் )
சம்பளம்: ரூ.19500-71900

பதவியின் பெயர் : வரைவாளர்
பணியின் பெயர் மற்றும் பணி குறியீடு: நில அளவைப் பதிவேடுகள் சார்நிலைப் பணி
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை: 236
சம்பளம்: ரூ.19500-71900

பதவியின் பெயர் : அளவர்/ உதவி வரைவாளர்
பணியின் பெயர் மற்றும் பணி குறியீடு: தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணி
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை: 55
சம்பளம்: ரூ.19500-71900

விண்ணப்பதாரர் கல்வித் தகுதி:

இந்த பணியிடங்களுக்கு சிவில் இன்ஜினியரிங் பட்டயப் படிப்புகள் முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அல்லது சம்பந்தப்பட்ட தொழிற் துறைகளில் (Surveyor, Draftsman) தேசிய தொழிற் பயிற்சி கவுன்சிலால் சான்றிதழ் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பதாரர் வயது வரம்பு: நில அளவர்/வரைவாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 01.07.2022 அன்று, 32 -க்கு கீழ் இருக்க வேண்டும் .

தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணியின் கீழுள்ள அளவர்/ உதவி வரைவாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 01.07.2022 அன்று, 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியர் , பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப் படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினர், சீர்மரபினர், அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகிய பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை:

இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.08.2022

தேர்வுக் கட்டணம்: ரூ. 100, நிரந்தர பதிவு கட்டணம் : ரூ.150

ஆதிதிராவிடர்/ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர், நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள்/ஆதரவற்ற விதவைகள் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பதாரர் நிர்ணயிக்கப்பட்ட தேர்வுக் கட்டணத்துடன் குறித்த நேரத்திற்குள் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கவில்லை என்றால், விண்ணப்பம் உரிய நடைமுறைகளுக்குப் பிறகு நிராகரிக்கப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

மேலும் இது குறித்து மேலும் விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here