TNPSC ரூ.71900 சம்பளத்தில் நிர்வாக அதிகாரி வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
TNPSC ரூ.71900 சம்பளத்தில் நிர்வாக அதிகாரி வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
TNPSC ரூ.71900 சம்பளத்தில் நிர்வாக அதிகாரி வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
TNPSC ரூ.71900 சம்பளத்தில் நிர்வாக அதிகாரி வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை TNPSC நிரப்பி வருகிறது. அந்த வகையில் நிர்வாக அதிகாரி பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த பணிக்கு ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஜூன் 18 க்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் வரவேற்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்- VIII சேவைகளில் சேர்க்கப்பட்டுள்ள கிரேடு-IV செயல் அலுவலர் பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்பின்படி, சுமார் 36 நிர்வாக அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு செயல்முறைகள் தற்போது தொடங்கியுள்ளது.

BECIL நிறுவனத்தில் ரூ.47,000/- ஊதியத்தில் வேலை ரெடி – விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பங்களை செலுத்தலாம். இந்த பணியிடங்களுக்கன விண்ணப்பப்பதிவு செயல்முறைகள் வரும் ஜூன் 18 ம் தேதியுடன் நிறைவடைகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில், இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் பதிவு கட்டணமாக ரூ. 150/- செலுத்தி ஒரு முறை ஆன்லைன் பதிவு முறை மூலம் தங்கள் அடிப்படை விவரங்களைப் பதிவு செய்வது கட்டாயமாகும், பின்னர் அவர்கள் இந்த ஆட்சேர்ப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப செயல்முறை:

  • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.in க்குச் செல்லவும்
  • அடுத்து ‘ ஒன் டைம் ரெஜிஸ்டரேஷன் நியூ யூசர்’ ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • பதிவு முடிந்ததும், விண்ணப்பிக்கவும் ஆன்லைன் விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  • விண்ணப்ப படிவத்தை நிரப்பவும். பின்பு ஆவணங்களைப் பதிவேற்றவும்.
  • தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தி படிவத்தைச் சமர்ப்பிக்கவும்.
  • எதிர்கால பயன்பாட்டிற்காக ஒரு நகலை பதிவிறக்கம் செய்து அச்சிடவும்.

தேர்வு செயல்முறை:

இந்த பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 11 அன்று நடைபெறும். இவை இரண்டு தாள்களைக் கொண்டிருக்கும். அதன்படி, தாள்-I காலை 9:30 மணிக்கு தொடங்கி மதியம் 12:30 மணி வரையும் , தாள்-II மதியம் 2 மணி முதல் 5 மணி வரையும் நடைபெறும்.

சம்பள விவரம்:

இந்தப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.19,500 முதல் ரூ.71900 வரை சம்பளம் வழங்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!