TNPSC ரூ.56,100 சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – ஏப்ரல் 30 கடைசி நாள்!

0
TNPSC ரூ.56,100 சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு - ஏப்ரல் 30 கடைசி நாள்!
TNPSC ரூ.56,100 சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு - ஏப்ரல் 30 கடைசி நாள்!

TNPSC ரூ.56,100 சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – ஏப்ரல் 30 கடைசி நாள்!

தமிழகத்தில், TNPSC தொடர்ந்து பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ரூ.56,100 சம்பளத்தில், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பணியில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

வேலைவாய்ப்பு அறிவிப்பு :

இந்தியாவில் மாநில அளவில் உருவாக்கப்பெற்ற முதல் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆகும். தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய இந்த தேர்வாணையம் செயல்பட்டு வருகிறது. மேலும் கடந்த 2 வருடங்களில் கொரோனா எதிரொலி காரணமாக TNPSC மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இதனால் போட்டி தேர்வுக்கு தயாராகி வந்தவர்கள் வருடக்கணக்கில் காத்திருந்தனர். இருப்பினும் தமிழக சுகாதாரதுறையின் கடுமையான நடவடிக்கை காரணமாக தற்போது நோய் தாக்கம் குறைந்து மாநிலம் முழுதும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

ICICI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – புதிய வட்டி விகிதம் குறித்த விவரம் இதோ!

மேலும் போட்டிதேர்வு அறிவிப்புகளும் வெளியாகி வருகிறது. இதன்படி, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தேர்வுகளுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் தமிழ்நாடு சீர்த்திருந்த பள்ளிகள் மற்றும் ஒழுக்க கண்காணிப்பு பணிகள் அடங்கிய மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்விற்கு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பணியில் 16 காலிபணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாத சம்பளம் ரூ.56,100 – 2,05,700 வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் சமூகவியல் அல்லது சமூகப்பணி அல்லது உளவியல் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கால்நடை பராமரிப்புத்துறையில் உதவியாளர் காலிப்பணியிடங்கள் – ஏப்ரல் 23 நேர்காணல்!

மேலும் விண்ணப்பத்தார் 01.07.2022 தேதியின்படி, 32 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி மற்றும் அனைத்து வகுப்புகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பு இல்லை. மேலும் கணினி வழித் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்த பணிக்கு விண்ணப்பிக்க நிரந்தரப் பதிவுக் கட்டணம் ரூ.100, தேர்வுக் கட்டணம் ரூ.200. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். மேலும் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 30.04.2022 ஆகும். மேலும் கூடுதல் விவரங்கள் அறிய அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று தெரிந்துகொள்ளவும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!