TNPSC Group 1 தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை (ஆகஸ்ட் 22) ஆன்லைன் மாதிரித்தேர்வு!

0
TNPSC Group 1 தேர்வர்கள் கவனத்திற்கு - நாளை (ஆகஸ்ட் 22) ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TNPSC Group 1 தேர்வர்கள் கவனத்திற்கு - நாளை (ஆகஸ்ட் 22) ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TNPSC Group 1 தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை (ஆகஸ்ட் 22) ஆன்லைன் மாதிரித்தேர்வு!

தமிழகத்தில் TNPSC குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மாதம் மாதம் வெளியாகி அதற்கான விண்ணப்பபதிவுகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ExamsDaily வலைத்தளம் தேர்வர்கள் பயிற்சி பெறும் வகையில் குரூப் 1 தேர்வுக்கான ஆன்லைன் மாதிரித்தேர்வை நடத்தி வருகிறது.

TNPSC குரூப் 1 தேர்வு:

தமிழகத்தில் துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், உதவி ஆணையர், வணிக வரித் துறை, துணைப் பதிவாளர், கூட்டுறவு சங்கங்கள், உதவி இயக்குநர், ஊரக வளர்ச்சி துறை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வை TNPSC தேர்வாணையம் நடத்தி வருகிறது. 2022 ம் ஆண்டுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பு வெளியாகி அதற்கான விண்ணப்பபதிவுகள் தற்போது நடைபெற்று வருகிறது. மொத்தம் 96 பணியிடங்களை கொண்ட இத்தேர்வுக்கு வரும் ஆகஸ்ட் 22 அதாவது நாளை வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் விரைந்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.

மற்ற TNPSC தேர்வுகளை ஒப்பிடும் போது குரூப் 1 சற்று கடினமாகவே இருக்கும் அதனால் போதிய பயிற்சி பெற வேண்டியது அவசியம். தற்போது காலிப்பணியிடங்கள் குறைவாக இருப்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குரூப் 1 தேர்வு 3 படிநிலைகளாக நடத்தப்படுகிறது. அதில் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே முதன்மை தேர்வை எழுத முடியும் என்று குறிப்பிடத்தக்கது. தேர்வு நெருங்கும் இந்த நேரத்தில் விண்ணப்பதாரர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளமானது நாளை (22.08.2022) அறிவியல் பாடத்திற்கான ஆன்லைன் மாதிரித்தேர்வை நடத்த உள்ளது. இந்த தேர்வை எழுத விரும்புவோர் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

TNPSC:Group I:Science 08

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!