தமிழ் வழியில் பயின்று TNPSC மூலம் பணியில் சேர்ந்தவர்கள் விவரம் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு !!!

0
தமிழ் வழியில் பயின்று பணியில் சேர்ந்தவர்கள் விவரம் தாக்கல் செய்ய உத்தரவு !!!
தமிழ் வழியில் பயின்று பணியில் சேர்ந்தவர்கள் விவரம் தாக்கல் செய்ய உத்தரவு !!!

தமிழ் வழியில் பயின்று TNPSC மூலம் பணியில் சேர்ந்தவர்கள் விவரம் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு !!!

தமிழ் வழியில் பயின்று TNPSC தேர்வாணையம் மூலமாக 2016-19 ஆண்டுகளில் பணியில் சேர்ந்தவர்களின் விவரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என TNPSC தேர்வாணையத்திற்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை தற்போது உத்தரவிட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

தமிழ் வழி ஒதுக்கீடு !!!

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு பணியிடங்களில் 20% ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது அரசாணை ஆகும். ஆனால் சமீபகாலமாக அந்த ஒதுக்கீடு முறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. அதனால் இது குறித்து மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த ஒதுக்கீடு மசோதா ஆளுநரிடம் இன்னும் ஒப்புதல் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TN Police “FB Group” Join Now

மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தான் அதிக மதிப்பெண் பெற்றிருந்தும், முற்றிலும் தமிழ் வழியில் பயின்றிருந்தும் தனக்கு ஒதுக்கீடு வழங்காமல் லஞ்சம் பெற்றுக் கொண்டு இந்த நடைமுறைகளில் முறைகேடுகள் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு வைத்து வழக்கு தொடர்ந்துள்ளார். 20% ஒதுக்கீட்டிலும் முறைகேடு நடந்தால் தமிழ் வழியில் பயின்றவர்கள் நிலை என்னாவது? என ஏற்கனவே நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்த நிலையில் தற்போது இந்த வழக்கு விசாரணையில் மற்றொரு தீர்ப்பினை வெளியிட்டு உள்ளது.

நீதிமன்ற உத்தரவு !

ஏற்கனவே தமிழ் வழியில் பயின்று பணிக்கு சேர்ந்தவர்களின் பட்டியல் கேட்கப்பட்டு இருந்ததால் அதனை TNPSC சமர்ப்பித்து உள்ளது. அதில் உள்ளவர்கள் எந்த கல்லூரிகளில் பயின்றனர், அவர்கள் முற்றிலும் தமிழ் வழியில் பயின்றுள்ளார்களா? என பல்வேறு கேள்விகள் எழுப்பி தேர்வு செய்யப்பட்டவர்களின் முழு விவரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

ஆளுநரின் செய்யலாளரையும், திருத்த சட்ட மசோதாவின் நிலை என்ன? அது எப்போது சட்டமாக இயற்றப்படும்? என்பது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிச.9-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!