தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) செய்திக்குறிப்பு – தேர்வர்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் உள்ள அரசு பணியிடங்களை நிரப்பும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தற்போது செய்திக்குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அது குறித்த தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம்
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் அரசுத்துறைகளில் காலியாகும் பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வுகளை நடத்தி தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து வருகிறது. அவ்வப்போது தேர்வர்களுக்கு முக்கியமான அறிவிப்புகளை தங்களது அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடுவது தேர்வாணையத்தின் வழக்கம். தமிழகத்தில் எவ்வாறு அரசு பணியாளர்களை டிஎன்பிஎஸ்சி ஆணையம் தேர்ந்தெடுக்கிறதோ அதே போலவே ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக ஒரு தேர்வாணையம் இருக்கும். அந்த வகையில் அருணாச்சல பிரதேச தேர்வாணைய உறுப்பினர் ஒருவர் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்திற்கு வருகை புரிந்துள்ளார்.
ஆண் குழந்தைகளுக்கான ‘பொன்மகன் சேமிப்பு திட்டம்’ – பெற்றோர்கள் கவனத்திற்கு! முழு விவரம் இதோ!
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு, அருணாச்சல பிரதேச அரசுப் பணியாளர் தேர்வாணையத்திலிருந்து மாண்புமிகு உறுப்பினர் திருமதி. முபெங் தாதர் பாகே அவர்கள் வருகை புரிந்துள்ளார். டின்பிஎஸ்சி தேர்வாணைய தலைவர் திரு. கா.பாலச்சந்திரன், இ.ஆ.ப (ஓய்வு) மற்றும் தேர்வாணைய உறுப்பினர்கள் அனைவரும் அவரை வரவேற்று உடன் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3, 5, 8 வகுப்பு மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – பள்ளிக்கல்வி ஆணையர்!
அருணாச்சல பிரதேச தேர்வாணைய மாண்புமிகு உறுப்பினருக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அமைப்பு, சிறப்பு மற்றும் தேர்வு நடைமுறைகள் ஆகியவற்றை தேர்வாணையத்தின் செயலாளர் திருமதி. பி. உமா மகேஸ்வரி இ.ஆ.ப மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் திரு. கிரண் குராலா, இ.ஆ.ப. அவர்களும் விளக்கிக் கூறினார்கள். அருணாச்சல பிரதேச தேர்வாணைய உறுப்பினருக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக நினைவுப் பரிசும் வழங்கப்பட்டுள்ளது.
Tnpsc update exam