TNPSC Junior Analyst சான்றிதழ் சரிபார்ப்பு 2024 – சற்றுமுன் தகவல் வெளியீடு!

0
TNPSC Junior Analyst சான்றிதழ் சரிபார்ப்பு 2024 - சற்றுமுன் தகவல் வெளியீடு!

Junior Analyst பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் பட்டியலானது TNPSC தேர்வாணையத்தால் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்கள் கீழே விரிவாக தரப்பட்டுள்ளது.

TNPSC சான்றிதழ் சரிபார்ப்பு:

தமிழக மருத்துவ துறையின் கீழுள்ள மருந்து பரிசோதனை ஆய்வகத்தில் Junior Analyst பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு 21.09.2023 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) வெளியிடப்பட்டது. இப்பணிக்கு பொருத்தமான நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் எழுத்து தேர்வானது 05.12.2023 அன்று கணினி வழித்தேர்வு முறையில் நடத்தப்பட்டது.

சுங்க கட்டணம் செலுத்துவதில் புதிய மாற்றம் – போக்குவரத்து துறை அமைச்சர் முக்கிய தகவல்!!

இத்தேர்வின் முடிவுகள் 02.02.2024 அன்று வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று (12.02.2024) சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பட்டியலானது வெளியிடப்பட்டுள்ளது. இப்படியலை தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற TNPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பெறலாம். இந்த சான்றிதழ் சரிபார்ப்புக்கு 1:2 என்ற விகித முறைப்படி 37 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!