TNPSC இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

0
TNPSC இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
TNPSC இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

தமிழ்நாடு பொதுப்பணித் தேர்வாணையம் ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் சேவை பணிகளுக்கான (சிஇஎஸ்இ) தேர்வு 2022ஆம் ஆண்டில் நடத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்பு படி, இப்பணிக்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய அறிவிப்பு:

கொரோனா வருகையால், அனைத்து துறைகளும் முடங்கியது. அதனால் வேலைவாய்ப்பு அறிவிப்புகளை ஒத்தி வைத்து இருந்தது. தற்போது நோய் தாக்கம் குறைந்து உள்ளதால் அனைத்து வேலைவாய்ப்பு அறிவிப்புகளும் வெளியாகி வருகிறது. அந்த வகையில் சிஇஎஸ்இ பணிகளுக்கான நேரடி பணி நியமனம் நடைபெற உள்ளது. இதற்கு மே 3ஆம் தேதி வரையில் விண்ணப்பம் செய்யலாம். டின்பிஎஸ்சி சிஇஎஸ்இ எழுத்துத் தேர்வு என்பது ஜூன் 26ஆம் தேதி இரண்டு ஷிஃப்ட்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரையில் முதல் பேப்பர் தேர்வும், பிற்பகல் 2.00 மணி முதல் 5 மணி வரையில் இரண்டாம் கட்டத் தேர்வும் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் ஆக.15ம் தேதிக்குள் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் தகவல்!

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் ஆன்லைனில் ரூ.150 கட்டணம் செலுத்தி ஒன் டைம் ரெஜிஸ்ட்ரேசன் மூலமாக அவர்களது விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதற்குப் பிறகு இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர் பதிவு செய்த நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்கு ஒன் டைம் ரெஜிஸ்ட்ரேஷன் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு மூலம் ஆட்டோமொபைல் என்ஜினியர், ஜூனியர் எலெக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்டர், உதவிப் பொறியாளர் (வேளாண் துறை), உதவிப் பொறியாளர் (நெடுஞ்சாலைத் துறை), தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை உதவி இயக்குநர், உதவி பொறியாளர் (பொதுப்பணித்துறை), ஜெனரல் ஃபோர்மேன், டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட பணியிடங்களில் மொத்தம் 626 இடங்கள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த காலிப்பணியிடங்களை நிரப்ப நடைபெறும் தேர்வுக் கட்டணம் ரூ.200 ஆகும். மேலும் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் அருந்ததியர் விண்ணப்பதாரர்களுக்கு முழு கட்டணமும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பழங்குடியினர் முழு கட்டணமும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் விண்ணப்பதாரர் அதிகபட்சமாக 3 முறை இலவசமாக விண்ணப்பிக்கலாம். மேலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் விண்ணப்பதாரர் அதிகபட்சமாக 3 முறை இலவசமாக விண்ணப்பிக்கலாம். முன்னாள் இராணுவத்தினர் அதிகபட்சமாக 2 முறை இலவசமாக விண்ணப்பிக்கலாம். இந்த வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு முழு கட்டணமும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. கைம்பெண்களுக்கும் முழு கட்டணமும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!