குரூப் தேர்வில் முறைகேடுகளை தடுக்க ‘ஜிபிஎஸ் லாக்’ அறிமுகம் – TNPSC தலைவர் தகவல்!!

0
குரூப் தேர்வில் முறைகேடுகளை தடுக்க 'ஜிபிஎஸ் லாக்' அறிமுகம் - TNPSC தலைவர் தகவல்!!
குரூப் தேர்வில் முறைகேடுகளை தடுக்க 'ஜிபிஎஸ் லாக்' அறிமுகம் - TNPSC தலைவர் தகவல்!!
குரூப் தேர்வில் முறைகேடுகளை தடுக்க ‘ஜிபிஎஸ் லாக்’ அறிமுகம் – TNPSC தலைவர் தகவல்!!

TNPSC தேர்வில் நடக்கும் முறைகேடுகளை தடுப்பதற்காக “ஜி.பி.எஸ் லாக்” உள்ளிட்ட புதிய வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தேர்வாணைய தலைவர் பாலச்சந்திரன் ஊட்டியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

முறைகேடுகள்:

கடந்த ஆண்டு நடந்த TNPSC தேர்வில் நிறைய முறைகேடுகள் நடந்திருந்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் TNPSC தேர்வுக்குழு தேர்வு முறையில் நிறைய மாற்றங்களை செய்துள்ளது.

மருத்துவ உளவியலில் எம்.ஃபில் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் – மருத்துவ கல்வி இயக்குனரகம்!!

புதிய மாற்றங்கள்:

இனிவரும் TNPSC தேர்வுகளில் யாரும் முறைகேட்டில் ஈடுபட முடியாத அளவிற்கு புதிய மாற்றங்களை தேர்வு வாரியம் செய்துள்ளது. இந்நிலையில்  மாநிலம் முழுவதும் ஜனவரி 3ம் தேதி TNPSC, குரூப் 1 தேர்வு நடைபெற இருக்கிறது. இத்தேர்விற்காக 856 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2.56 லட்சம் பேர் தேர்விற்கு விண்ணப்பித்து உள்ளனர். 1.80 லட்சம் பேர் இணையத்தில் நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்துள்ளனர்.

நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்வதற்கு விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தேர்வு வாரியம் முன்னரே அறிவிப்பு கொடுத்துள்ளது. மேலும், ஓ.எம்.ஆர் சீட்டில் தேர்வு எழுதுபவரின் முழு விவரங்களும் இடம்பெறும் மற்றும் எத்தனை கேள்விகளுக்கு பதில் எழுதியுள்ளனர் என்று தேர்வு மைய கண்காணிப்பாளர் சரிபார்த்து சான்றளிக்க வேண்டும் என்றும் அறிவித்திருந்தனர்.

பிரிட்டன் விமானங்கள் இந்தியா வர ஜன.7 வரை தடை நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு!!

இந்நிலையில் தற்போது, ஊட்டியில் உள்ள தேர்வு மையத்தை ஆராய்வு செய்ய வந்த TNPSC தலைவர், “விடைத்தாள்கள் கொண்டு செல்லும்பொது ஏற்படும் முறைகேடுகளை தடுப்பதற்காக விடைத்தாள்கள் அடங்கிய பெட்டிக்கு ஜி.பி.எஸ் லாக் செய்யப்படும். மேலும் அதற்காக நியமிக்கப்பட்ட கட்டுப்பாட்டு அதிகாரிகளின் உதவி இல்லாமல் விடைத்தாள்கள் அடங்கிய பெட்டியை திறக்க முடியாது. தேர்வு சமயங்களில் கொரோனா தொற்றை தடுக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!