TNPSC முக்கிய அறிவிப்பு 2022 – தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு!

0
TNPSC முக்கிய அறிவிப்பு 2022 - தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு!
TNPSC முக்கிய அறிவிப்பு 2022 - தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு!
TNPSC முக்கிய அறிவிப்பு 2022 – தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு!

தமிழகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அறிவிக்கப்பட்ட கூட்டுறவு உதவி இயக்குனர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் 30 ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்று TNPSC சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC:

தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம் கடந்த இரு ஆண்டுகளாக தலைதூக்கி இருந்தது. இந்நிலையில் சென்ற 2021 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் தமிழக அரசு பல தளர்வுகளை அறிவித்து இருந்தது. மேலும் பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்றும் அதற்கான தேதியும் தெரிவித்து உள்ளது அரசு. இது மட்டுமல்லாமல் கொரோனா தொற்று இருந்த காரணத்தால் கடந்த இரு ஆண்டுகளாக அரசு தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வராமல் இருந்த நிலையில் தற்போது சமீபத்தில் tnpsc குரூப் 2 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளிவந்தது. இதனை தொடர்ந்து அடுத்தாக குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகளும் வெளியாக உள்ளது. இதனால் பட்டதாரிகள் மிகவும் ஆர்வமுடன் தேர்வுகளுக்கு படித்து வருகின்றனர்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? – முக்கிய கோரிக்கை!

இந்த நிலையில் சமீபத்தில் TNPSC சார்பில் கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குனர் (Assistant Director of Co-operative Audit) பணியில் 8 காலிப்பணியிடங்கள் இருந்தது. இந்த பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாளாக பிப் 21 என்றும் அறிவித்து இருந்தது. இந்த பணிக்கு சம்பளமாக ரூ. 56,100 – 1,77,500 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க 01.07.2022 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும் மற்றும் எம்.ஏ அல்லது எம்,காம் மற்றும் கூட்டுறவு டிப்ளோமா அல்லது ஐசிஏஐ படித்தவராக இருக்க வேண்டும் என்றும் கூறி இருந்தனர்.

அதனை தொடர்ந்து, எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் இப்பணிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்றும் கூறி இருந்தனர். இந்த அறிவிப்பு அடிப்படையில் ஏராளமானோர் இந்த பணிக்கு விண்ணப்பித்து உள்ளனர். இந்நிலையில் கூட்டுறவுத் தணிக்கைத் துறையில் உதவி இயக்குனர் பதவிக்கு ஏப்ரல் 30 ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிக்கை வெளியிட்டுள்ளது. www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் இருந்து ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!