TNPSC தேர்விற்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – மாற்றுத்திறனாளிகளுக்கான வழிகாட்டுதல்கள்!

0
TNPSC தேர்விற்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு - மாற்றுத்திறனாளிகளுக்கான வழிகாட்டுதல்கள்!
TNPSC தேர்விற்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு - மாற்றுத்திறனாளிகளுக்கான வழிகாட்டுதல்கள்!
TNPSC தேர்விற்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – மாற்றுத்திறனாளிகளுக்கான வழிகாட்டுதல்கள்!

தமிழகத்தில் அரசு காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தேர்வுகள் நடத்தி பணிகள் வழங்கப்படுகிறது. தற்போது தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் மாற்றுத்திறனாளர் தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

TNPSC வழிகாட்டுதல்கள்:

பதிலி எழுத்தரின் உதவி வேண்டும் என இணையவழி விண்ணப்பத்தில் கோரியதன் பேரில் நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர் பதிலி எழுத்தரின் உதவியை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அல்லது தேர்வு நாளன்று பதிலி எழுத்தர் வேண்டும் எனக் கோருவது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு DA, HRA அதிகரிப்பு – இரட்டை போனஸ்? சூப்பர் தகவல்!

பார்வையற்ற மற்றும் தன்னுடைய கையினால் எழுத இயலாத மாற்றுத்திறன், கொண்ட விண்ணப்பதாரர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளில் கலந்து கொள்ளும் போது எழுத்தர் உதவியுடன் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.

பதிலி எழுத்தரை தேர்வாணையமே நியமிப்பதுடன் அவர்களுக்கான கட்டணம் தேர்வாணையத்தால் வழங்கப்படும். பதிலி எழுத்தரின் பணியினை பயன்படுத்தி கொள்ளும் விண்ணப்பதாரர் பதிலி எழுத்தருக்கென தனியே எந்தத் தொகையும் செலுத்த தேவையில்லை.

தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளை எழுதும் போது பதிலி எழுத்தரின் பணியினைப் பயன்படுத்திக் கொள்ளும் நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய அனைத்து மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர் தரைத்தளத்தில் தலைமை கண்காணிப்பாளரின் கட்டுப்பாட்டு அறைக்கு அருகில் அவரின் நேரடி மேற்பார்வையின் கீழ் தனி அறையிலேயே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர் விடைத்தாளில் தங்களது கையொப்பம் மற்றும் இடது கை பெருவிரல் ரேகை அடையாளத்தை கொடுக்கப்பட்டுள்ள இடங்களில் இட வேண்டும்.

கையொப்பமிட இயலாத மற்றும் பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர் தேர்வு முடிவடைந்த பின்னர் OMR விடைத்தாளின் பகுத்து -1 ல் அதற்கென கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் தங்களது இடது கைப் பெருவிரல் ரேகை பதிவினை வைக்க வேண்டும்.

தமிழகத்தில் அக். 6 & 9 தேதிகளில் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை – உள்ளாட்சி தேர்தல் எதிரொலி!

இடது கையைப் பயன்படுத்த இயலாத மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர் தங்களது வலது பெருவிரல் ரேகை பதிவினை வைக்க வேண்டும்.

இரண்டு கைகளையும் பயன்படுத்த இயலாத மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர் கையொப்பம் மற்றும் பெருவிரல் ரேகை பதிவினை வைக்க வேண்டிய இடங்களை காலியாக விட்டு விடலாம்

தேர்வினை வேகமாக எழுத இயலாத உடல் குறைபாடுடைய மாற்றுத்திறனாளர் விண்ணப்பத்தார் பதிலி எழுத்தரின் உதவியுடன் தேர்வு எழுதும் போது ஒரு மணி நேரத்திற்கு 20 நிமிடம் வீதம் கூடுதல் நேரம் வழங்கப்படும்.

பதிலி எழுத்தரின் உதவியின்றி தேர்வு எழுதும் அனைத்து நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மற்றும் தேர்வினை வேகமாக எழுத இயலாத மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர், மூன்று மணி நேரம் நடைபெறும் தேர்விற்கு குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் கூடுதலாக வழங்கப்படும். மாற்றுத்திறனாளியின் தனிப்பட்ட நிலையை பொறுத்து இது மேலும் உயர்த்தப்படலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!