TNPSC குரூப் 4 & VAO தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் எப்போது? முழு விபரம் இதோ!

0
TNPSC குரூப் 4 & VAO தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு - தேர்வு முடிவுகள் எப்போது? முழு விபரம் இதோ!
TNPSC குரூப் 4 & VAO தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு - தேர்வு முடிவுகள் எப்போது? முழு விபரம் இதோ!
TNPSC குரூப் 4 & VAO தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் எப்போது? முழு விபரம் இதோ!

தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் TNPSC தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற்றது. தற்போது இத்தேர்வின் முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்பது தொடர்பாக விரிவான விவரத்தை பார்ப்போம்.

TNPSC குரூப் 4 & VAO தேர்வு

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிடப்பட்டது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, குரூப் 2,2ஏ பணியிடத்திற்கான தேர்வு கடந்த மே 21ம் தேதி அன்று நடைபெற்றது. இதையடுத்து குரூப் 4 & VAO தேர்வு ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற்றது. இத்தேர்வு மூலமாக 7301 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமீப காலத்தில் அரசு துறைகளில் ஏராளமானோருக்கு பதவி உயர்வு வழங்கப்படுள்ளதாலும் மற்றும் ஓய்வு பெற்றுள்ளதாலும் காலிப்பணியிடங்கள் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

PG TRB பணியிடத்திற்கான சான்றிதழ் சரிபாா்ப்பு தேதி அறிவிப்பு – ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியீடு!

இதனால் குரூப் 4 பணியிடத்தில் கூடுதலாக 1500 பணியிடங்கள் வரை அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இத்தேர்வை தமிழகத்தில் 21 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதியுள்ளனர். இத்தேர்வு ஆவரேஜ் என்ற அளவில் இருந்ததாக தேர்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து குரூப் 4 தேர்வுக்கான Answer Key வெளியிடப்பட்டது. இதன் முடிவில் தேர்வர்களிடம் கருத்து கேட்பு நடைபெற்றது. இந்த ஆண்டில் குரூப் 4 தேர்வுக்கான கட் ஆப் மதிப்பெண்கள் கடந்த வருடங்களை விட குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கு கட் ஆப் மதிப்பெண்கள் என்று குறிப்பிடப்படுவது சரியான கேள்விகளின் எண்ணிக்கை குறிப்பிடுவதாகும். இத்தேர்வின் முடிவுகளுக்காக தேர்வர்கள் எதிர்பார்த்த வண்ணம் காத்திருக்கின்றனர். இத்தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தின் 2வது வாரத்தில் வெளியிடப்படும் என்று தேர்வாணையம் தகவல் தெரிவித்துள்ளது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். அதன் பின்பு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வர்கள் பணியில் நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!