TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு.. 2023ல் குரூப் 2,4 மூலம் நிரப்பப்படவுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

0
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு.. 2023ல் குரூப் 2,4 மூலம் நிரப்பப்படவுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு.. 2023ல் குரூப் 2,4 மூலம் நிரப்பப்படவுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு.. 2023ல் குரூப் 2,4 மூலம் நிரப்பப்படவுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

தமிழகத்தில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் அதிகம் எதிர்பார்ப்பது TNPSC வெளியிடும் குரூப் 2,4 போன்ற வேலைவாய்ப்பு அறிவிப்புகளுக்காக தான். கடந்த வருடம் குரூப் 2 அறிவிப்பின் கீழ் 5529 பணியிடங்களும், குரூப் 4 அறிவிப்பின் கீழ் 7301 பணியிடங்களுக்கும் அறிவிப்பு வெளியாகியது.

TNPSC குரூப் 2,4:

கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக எந்த ஒரு தேர்வுகளும் TNPSCன் மூலம் நடத்தப்படவில்லை. ஆனால் கடந்த 2022ம் ஆண்டு தேர்வுகள் முன்னர் தெரிவிக்கப்பட்டபடி நடந்தது. கடந்த வருடம் குரூப் 2 அறிவிப்பின் கீழ் 5529 பணியிடங்கள் நிரப்படப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது, குரூப் 4 அறிவிப்பின் கீழ் 7301 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியது.

சமீபத்தில் குரூப் 4 தேர்விற்கான பணியிடங்கள் மேலும் 2500 பணியிடங்கள் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் சில நாட்களுக்கு முன்பு TNPSCயின் வருடாந்திர தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. அதில் குரூப் 1 தேர்வு குறித்த விவரங்கள் இடம்பெறவில்லை. ஆனால் சில நாட்களில் குரூப் 1 தேர்வு குறித்த விவரங்கள் சேர்க்கப்பட்டு திருத்தப்பட்ட அட்டவணை வெளியிடப்பட்டது.

இன்ப அதிர்ச்சி..தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அமல்.. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

மேலும் TNPSC ஆணையம், ஒவ்வொரு வருடமும் கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்பட தொடர்ந்து முயற்சி செய்வதாகவும், வருடாந்திர தேர்வு அட்டவணை முதல்கட்ட தகவல்களை தருவதற்காக மட்டும் தான் என விளக்கம் அளித்தது. அதன்படி பார்த்தால் கடந்த வருடம் வெளியாகியுள்ள குரூப் 4 தேர்வு காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையான 9801 (7301+2500) விட இந்த வருடம் கூடுதல் பணியிடங்கள் நிரபபடப்படும் என கூறப்படுகிறது.. மேலும் குரூப் 1 போல, குரூப் 2 தேர்வு பற்றிய விவரங்களும் TNPSC ஆணையத்தால் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!