TNPSC Group 2, 2A தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – கட் ஆஃப் மார்க் எவ்வளவு? முடிவு எப்போது வெளியீடு?

0
TNPSC Group 2, 2A தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு - கட் ஆஃப் மார்க் எவ்வளவு? முடிவு எப்போது வெளியீடு?
TNPSC Group 2, 2A தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு - கட் ஆஃப் மார்க் எவ்வளவு? முடிவு எப்போது வெளியீடு?
TNPSC Group 2, 2A தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – கட் ஆஃப் மார்க் எவ்வளவு? முடிவு எப்போது வெளியீடு?

TNPSC குரூப் 2 & 2A முதல்நிலைத் தேர்வு,மே 21 அன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பல தேர்வு மையங்களில் நடைபெற்றது. மேலும் இந்த எழுத்துத் தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள், கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு, எத்தனை மதிப்பெண் எடுத்தால், மெயின் தேர்வுக்கு படிக்கலாம் என்ற விவரங்களை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர்.

முழு விவரம்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-2 மற்றும் 2ஏ பதவிகளில் உள்ள 5,529 காலிப் பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு திட்டமிட்டபடி கடந்த மே 21ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் சுமார் 13 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், 11 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதியதாகவும், 1.83 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் குரூப் 2 மற்றும் 2A தேர்வு எழுதிய அனைவரும் தேர்வு முடிவு எப்போது வரும் என எதிர்பார்ப்பில் உள்ளனர்.

TNPSC Group 2, 2A தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – கட் ஆஃப் மார்க் எவ்வளவு? முடிவு எப்போது வெளியீடு?

அத்துடன், கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு நிர்ணயிக்கப்படும் என்பதற்கான தகவலுக்காகவும் காத்திருக்கின்றனர். மேலும் தேர்வு முடிவுகள் ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் எனவும், குரூப் 2-க்கான முதன்மை எழுத்துத்தேர்வு செப்டம்பர் மாதமும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டிசம்பர் 2022 முதல் ஜனவரி 2023 மாதங்களில் இதற்கான கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மைத் தேர்வு, தனிநபர் நேர்காணல் என பல படிகளில் தேர்வு செயல்முறை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பதாரர் பிரிவு  ஆண் கட் ஆஃப் ஸ்கோர்  பெண் கட் ஆஃப் ஸ்கோர்
பொது விண்ணப்பதாரர்  161 மார்க்ஸ்  158 மார்க்ஸ்
BC விண்ணப்பதாரர்கள்  159 மார்க்ஸ் 157 மார்க்ஸ்
MBC விண்ணப்பதாரர்கள்  156 மார்க்ஸ்  154 மார்க்ஸ்
SC விண்ணப்பதாரர்கள்  153 மார்க்ஸ்  150 மார்க்ஸ்
ST விண்ணப்பதாரர்கள் 144 மார்க்ஸ் 140 மார்க்ஸ்

TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகளை சரிபார்ப்பது எப்படி:

  • முதலில் TNPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை( tnpsc.gov.in.)பார்வையிடவும்.
  • பின்னர், முகப்பு பக்கத்தில் வலது புறத்தில் உள்ள “WHATS NEW” என்பதில், TNPSC குரூப் 2 தேர்வு முடிவுக்கான விளம்பரத்தை கிளிக் செய்ய வேண்டும்.
    Exams Daily Mobile App Download
  • இப்போது, ஒரு புதிய பக்கம் திறக்கப்படும். இதையடுத்து, விண்ணப்பதாரர்கள் தேர்வு முடிவுகளுக்கான இணைப்பைத் தேடி கிளிக் செய்ய வேண்டும்.
  • பின்னர், பதிவு எண் மற்றும் பிறந்த தேதி போன்ற விவரங்களை உள்ளிடவும்.
  • பின்னர் சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்து சிறிது நேரம் காத்திருக்கவும்.
  • இப்போது, ஒரு புதிய பக்கத்தில் pdf கோப்பு வடிவத்தில் உங்கள் தேர்வு முடிவுகள் காட்டப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!