TNPSC குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு! மே 21ல் தேர்வு!

0
TNPSC குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு - நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு! மே 21ல் தேர்வு!
TNPSC குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு - நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு! மே 21ல் தேர்வு!
TNPSC குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு! மே 21ல் தேர்வு!

TNPSC குரூப் 2 பதவிகளில் காலியாக உள்ள 5,500 க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான தேர்வுகள் மற்றும் ஆட்சேர்ப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை (பிப்ரவரி 23) வெளியாக உள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

அறிவிப்பு வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 2 ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை பிப்ரவரி 23 அதாவது நாளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் குரூப் 2 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் TNPSCன் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.in மூலம் தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களையும் நாளை (பிப்.23) பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு முன்னதாக TNPSC கடந்த ஆண்டு டிசம்பர் 7 அன்று, 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது.

சென்னையில் நாளை (பிப்.23) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இந்த காலண்டரின் படி, TNPSC குரூப் 2 மற்றும் 2A ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான அறிவிப்பு பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்படும் என்றும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் 2022 ஆம் ஆண்டில் மொத்தம் 32 வகையான தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், அறிவிக்கப்பட்டபடி TNPSC குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த வாரத்தில் வெளியிடப்பட்டது. அந்த வகையில் குரூப் 2 தேர்வு மே மாதம் 21ம் தேதி நடத்தப்பட இருக்கிறது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

தேர்வுக்கான முடிவுகள் ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது. இப்போது TNPSC குரூப் 2A பதவிகளில் மொத்தம் 5,831 காலியிடங்கள் உள்ளன. அதே போல குரூப் 4 பணியிடங்களில், 5,244 காலியிடங்கள் உள்ளன. இருப்பினும், இவை தற்காலிக எண்ணிக்கை ஆகும். இந்த காலியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
முக்கியமான தேதிகள்:

  • TNPSC குரூப் 2 அறிவிப்பு தேதி – பிப்ரவரி 23, 2022
  • TNPSC குரூப் 2 ஆன்லைன் பதிவுக்கான கடைசி தேதி – மார்ச் 23, 2022
  • TNPSC குரூப் 2 பிரிலிம்ஸ் தேர்வு தேதி – மே 21, 2022
  • TNPSC குரூப் 2 பிரிலிம்ஸ் தேர்வு முடிவு தேதி – ஜூன் 5, 2022
  • TNPSC குரூப் 2 முதன்மைத் தேர்வு தேதி – செப்டம்பர் 2022
  • TNPSC குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவு தேதி – டிசம்பர் 2022
  • TNPSC குரூப் 2 நேர்காணல் தேதி – பிப்ரவரி 2023

இப்போது குரூப் 2 தேர்வின் அனைத்து பதவிகளுக்கும் விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 30 ஆண்டுகள் ஆகும். இருப்பினும், ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன் படி, SC, SC(A)s, STs, MBCs/DCs, BCs, BCMs பிரிவுகளை சேர்ந்தவர்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!