TNPSC குரூப் 7 A வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – சம்பளம் : ரூ.37,700 –1,19,500/-

0
TNPSC குரூப் 7 A வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022
TNPSC குரூப் 7 A வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022

TNPSC குரூப் 7 A வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022
சம்பளம் : ரூ.37,700 –1,19,500/-

குரூப்-VII-A சேவைகளில் சேர்க்கப்பட்டுள்ள கிரேடு-I நிர்வாக அதிகாரி (Executive Officer, Grade-I) பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்பு செய்ய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு இந்து மதத்தைச் சார்ந்த தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.  ஆன்லைன் மூலம் 21.02.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

நிறுவனம் TNPSC
பணியின் பெயர் Executive Officer, Grade-I
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
TNPSC காலிப்பணியிடங்கள் :

TNPSC அறிவிப்பின்படி, இந்த ஆட்சேர்ப்புக்கு ஒட்டுமொத்தமாக 4 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதாவது GT (G) 1, MBC/DC (AC)** 1, MBC/DC (W)* 1 மற்றும் SC (G) 1 பணியிடம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Executive Officer வயது வரம்பு:

01.07.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் SCs, SC(A)s, STs, MBC/DCs, BC பிரிவை சார்ந்தவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.

TNPSC கல்வி தகுதி:

பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இருந்து கலை அல்லது அறிவியல் அல்லது வணிகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது சட்டத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

நிர்வாக அதிகாரி தேர்வு செயல் முறை:

விண்ணப்பதார்கள் இரண்டு தொடர்ச்சியான நிலைகளில் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதாவது (i) எழுத்துத் தேர்வு மற்றும் (ii) நேர்காணலின் வடிவத்தில் வாய்வழித் தேர்வு.

Download Syllabus

எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு ஆகியவற்றில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில், நியமனங்களின் இடஒதுக்கீடு விதிக்கு உட்பட்டு விண்ணப்பதார்கள் இறுதியாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TNPSC தேர்வு கட்டணம்:
  • தேர்வு கட்டணம்: ரூ. 150/-
  • (முதல் முறையாக பதிவு செய்வோருக்கு நிரந்தரப் பதிவு கட்டணம்: ரூ.150 /-).
  • கட்டணத்தை செலுத்தும் முறை : Net banking / Credit card / Debit card.
TNPSC Executive Officer, Grade-I விண்ணப்பிக்கும் முறை:
  • tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்
  • “Recruitment” என்பதைக் கிளிக் செய்து “Notification” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • “EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) (TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE)“ என்ற அறிவிப்பை கண்டுபிடித்து தகுதி விவரங்களை சரிபார்க்கவும்.
  • அதன் பின் “Apply Online” என்பதை கிளிக் செய்யவும்
  • நீங்கள் புதிய பயனராக இருந்தால், நீங்கள் பதிவு செய்ய வேண்டும் இல்லையெனில் உங்கள் கணக்கில் உள்நுழைந்து விண்ணப்பிக்க ஆரம்பிக்கலாம்.
  • உங்கள் விவரங்களைச் சரியாக உள்ளிட்டு பணம் செலுத்தவும்.
  • இறுதியாக சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்து விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் எடுக்கவும்.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!