தமிழக இளைஞர்களுக்கு காத்திருக்கும் வேலைவாய்ப்பு – 1,38,500 வரை சம்பளம்! முழு விவரம் இதோ!

0
தமிழக இளைஞர்களுக்கு காத்திருக்கும் வேலைவாய்ப்பு - 1,38,500 வரை சம்பளம்! முழு விவரம் இதோ!
தமிழக இளைஞர்களுக்கு காத்திருக்கும் வேலைவாய்ப்பு - 1,38,500 வரை சம்பளம்! முழு விவரம் இதோ!
தமிழக இளைஞர்களுக்கு காத்திருக்கும் வேலைவாய்ப்பு – 1,38,500 வரை சம்பளம்! முழு விவரம் இதோ!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் மேலும், பணி குறித்த தகவல்களை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

அரசு பணி வாய்ப்பு:

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் பல்வேறு அரசு பணிகளுக்கான தேர்வுகளும் பணியின் தகுதி மற்றும் நிலையை பொறுத்து குரூப் வாரியாக நடத்தப்படுகிறது. எந்த விதமான பரிந்துரைகள் மற்றும் முறைகேடுகளுக்கும் இடமின்றி அரசு பணிக்கான ஊழியர்கள் முறையாக தேர்வுகளின் மூலம் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் இளைஞர்களுக்கு அரசின் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில், குரூப் 6 தேர்வின் மூலம் நியமிக்கப்படும் வன சார்நிலை பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் பணிக்கான அதிகாரப்பூர்வ வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து – அதிகாரிகள் விளக்கம்!

வனத்தொழில் பழகுநர் பணிக்கு மொத்தம் 10 இடங்கள் மட்டுமே உள்ளதாகவும், பணிக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பணிக்கான விண்ணப்பங்கள் அனைத்தும் செப்டம்பர் 6ம் தேதிக்குள் செய்து முடிக்கப்பட வேண்டும். இதற்காக அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும், 01.04.2022 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC DNC, MBC, BC and BCM பிரிவினர் 37 வயதிற்குள் இருக்க வேண்டும் என்றும் மாத ஊதியமாக, ரூ. 37,700 முதல் ரூ.1,38,500 வரை வழங்கப்படும்.

இப்பணிக்கு உயரம் ஆண்கள் – 163 செ.மீ மற்றும் பெண்கள் – 150 செ.மீ உயரத்தை உடல் தகுதியாக பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வு மூன்று தாள்களாக நடைபெறும். மேலும், ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும், மற்றவர்களுக்கு ரூ.150 விண்ணப்பக்கட்டணம் ஆகும். தேர்வுக் கட்டணம் ரூ. 150 என்றும், SC, SC(A), ST மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வனத்தொழில் பழகுநர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!