TNPSC Group 5A தேர்வு அறிவிப்பு வெளியீடு – விண்ணப்பிக்க தகுதி என்ன? முழு விவரம் இதோ!

0
TNPSC Group 5A தேர்வு அறிவிப்பு வெளியீடு - விண்ணப்பிக்க தகுதி என்ன? முழு விவரம் இதோ!
TNPSC Group 5A தேர்வு அறிவிப்பு வெளியீடு - விண்ணப்பிக்க தகுதி என்ன? முழு விவரம் இதோ!
TNPSC Group 5A தேர்வு அறிவிப்பு வெளியீடு – விண்ணப்பிக்க தகுதி என்ன? முழு விவரம் இதோ!

தமிழகத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த குரூப் 5ஏ தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகளை பற்றி பார்ப்போம்.

குரூப் 5ஏ தேர்வு

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வு மூலமாக தகுதியான நபர்கள் நிரப்பப்பட்டு வருகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதில் குறிப்பிட்டபடி அனைத்து தேர்வுகளும் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதையடுத்து தற்போது தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர், உள்ளிட்ட பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இத்தேர்வு மூலமாக 161 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வருகிற செப்டம்பர் 21 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு பழங்குடியினர் மற்றும் பட்டியல் இனத்தவராக இருப்பின் 35 வயதிற்குள் இருப்பவராக இருக்க வேண்டும். மற்ற இனத்தவர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இப்பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் மற்றும் பணி நியமனங்களுக்கான இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

சென்னை: தொடர்ந்து ஏறுமுகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் கவலை!

Exams Daily Mobile App Download

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்திற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அதனை திருத்தி கொள்ள வருகிற செப்டம்பர் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கான எழுத்து தேர்வு டிசம்பர் 18ம் தேதி அன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எழுத்துத் தேர்வு சென்னை (0101) தேர்வு மையத்தில் மட்டுமே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!