TNPSC குரூப் 4 VAO காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – பாடத்திட்டம் மாற்றம்! முழு விபரம் இதோ!

2
TNPSC குரூப் 4 VAO காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு - பாடத்திட்டம் மாற்றம்! முழு விபரம் இதோ!
TNPSC குரூப் 4 VAO காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு - பாடத்திட்டம் மாற்றம்! முழு விபரம் இதோ!
TNPSC குரூப் 4 VAO காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – பாடத்திட்டம் மாற்றம்! முழு விபரம் இதோ!

தமிழக அரசுத்துறைகளில் உள்ள பல்வேறு பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு பணிநியமனம் செய்யப்பட்டு வருகிறது. இத்தகைய தேர்வுகளுக்கு தற்போது பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது.

பாடத்திட்டம் மாற்றம்:

தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள முதல்நிலை பணி முதல் நான்காம் நிலை பணியிடங்கள் வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடத்தப்படும் குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்வு குறித்த அறிவிப்பு மார்ச் மற்றும் பிப்ரவரி மாதங்களில் வெளியிடப்படும் என்று TNPSC தேர்வு வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த குரூப் 4 தேர்வுக்கு பெரும்பாலானோர் தங்களை தயார் செய்து வரும் நிலையில் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதாவது TNPSC தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளுக்கும் தமிழ் மொழிப்பாடத்தை கட்டாயமாக்கியுள்ளது. அதே போல் ஆங்கில மொழி பாடத்தை நீக்கியும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனால் பழைய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வு நடைபெறுமா அல்லது புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வு நடைபெறுமா என்ற சந்தேகம் தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அவர்களின் சந்தேகத்தை போக்கும் வகையில் TNPSC தேர்வு வாரியம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஜனவரி 31 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

அதன்படி தேர்வில் முதல் பகுதியில் கேட்கப்படும் 100 வினாக்களும் தமிழ் மொழி பாடத்தில் இருந்து கேட்கப்படும். அதனை தொடர்ந்து இரண்டாவது பகுதியில் பொது அறிவு இடம்பெற்றுள்ளது. மேலும் அந்த தமிழ் மொழி பாடத்தில் 40 மதிப்பெண் பெற்றால் மட்டுமே இரண்டாவது பகுதி மதிப்பீடு செய்யப்படும். தமிழ் பாடப்பகுதியில் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தொண்டுகளும் என 3 பிரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் பொது அறிவுப் பிரிவில் அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், இந்திய வரலாறு, இந்திய ஆட்சி, இந்திய பொருளாதாரம் உள்ளிட்ட பிரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

2 COMMENTS

  1. Exam la old syllabus base panni questions varumaa..illa new syllabus base panni questions varumaa nu sollave ila ..please sollunga

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!