TNPSC Group 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – இப்படி படித்தால் வெற்றி உறுதி!

0
TNPSC Group 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - இப்படி படித்தால் வெற்றி உறுதி!
TNPSC Group 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - இப்படி படித்தால் வெற்றி உறுதி!
TNPSC Group 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – இப்படி படித்தால் வெற்றி உறுதி!

தமிழகத்தில் குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ளன. எனவே இந்த குறைந்த கால இடைவெளியில் குரூப் 4 தேர்வுக்கு, விண்ணப்பதாரர்கள் எப்படி தயாராக வேண்டும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

TNPSC Group 4:

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஊழியர்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு தேர்வு செய்து வருகிறது. திறமையான ஊழியர்களை கண்டறிய பல்வேறு போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பிப்ரவரி மாதம் குரூப் 2, குரூப் 2A தேர்வுக்காக தேதிகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மே 21 ஆம் தேதி முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டது. இதையடுத்து, குரூப் 4 தேர்வுக்கான தேதியை தேர்வாணையம் வெளியிட்டு, அறிவிப்பின்படி, குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ளது.

TN Job “FB  Group” Join Now

குரூப் 4 தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ), டைபிஸ்ட், ஸ்டேனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படும். மேலும் குரூப் 4 தேர்வில் 200 வினாக்கள் இடம்பெறும். இதில் தமிழில் இருந்து 100 வினாக்களும், பொது அறிவில் இருந்து 75 வினாக்களும், கணிதப்பகுதியில் இருந்து 25 வினாக்களும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தேர்வுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், குரூப் 4 தேர்வுக்கு எப்படி தயாராவது என்பதை பார்க்கலாம்.

தேர்வுக்கு எப்படி படிப்பது?

  • குரூப் 4 தேர்வுக்கு தயாராகி வருபவர்கள், பாடத்திட்டத்திற்கு ஏற்றவாறு 6 முதல் 10 ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களை முதலில் வாங்கிக் கொள்ளுங்கள்.
  • ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கு குறையாமல் படிப்பதற்காக ஒதுக்க வேண்டும். மீதம் உள்ள நேரங்களில் படித்ததை நினைவுப்படுத்தி பார்க்க வேண்டும். இந்த 8 மணி நேரத்தில் பாதிக்கும் மேலான நேரத்தை தமிழ் பகுதிக்கு ஒதுக்க வேண்டும்.

TN TET விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு – ஆகஸ்டு 25 முதல் தேர்வுகள்? முழு விபரம் இதோ!

  • தமிழ் மொழிப்பாடத்திற்கு 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை படித்துக் கொள்ள வேண்டும், முதலில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு தமிழ் புத்தகங்களையும், தேவைப்பட்டால் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு புத்தகங்களையும் படித்து முடித்து விடுங்கள். பின்னர் 6,7,8 தமிழ் புத்தகங்களை படித்துக் கொள்ளுங்கள்.
  • அடுத்ததாக முந்தைய ஆண்டு வினாக்களை பயிற்சி செய்து பாருங்கள். புதிதாக சேர்க்கப்பட்டுள்ள யூனிட் 8 மற்றும் 9 பாடங்களான, தமிழ் வரலாறு, இலக்கியம், மரபு, பண்பாடு மற்றும் தமிழ்நாடு வளர்ச்சி நிர்வாகம் பகுதிகளிலிருந்து அதிகமான வினாக்கள் கேட்கப்படுகின்றன. இந்தப் பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள்.
  • பொது அறிவுப் பகுதியில் 10 கேள்விகள் வரை பள்ளி புத்தகங்களை தாண்டி வெளியில் இருந்து கேட்கப்படலாம். ஆனால் அவை பெரும்பாலும் நடப்பு நிகழ்வுகள் சார்ந்த வினாக்களாக இருக்க வாய்ப்புள்ளது.
  • நடப்பு நிகழ்வுகளுக்கு செய்தித்தாள்களை படிக்க வேண்டும், செய்தித்தாள்களை படிக்கும் போது சிலபஸூக்கு ஏற்றவாறு படித்து கொள்ள வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!