TNPSC குரூப் 4 தட்டச்சர் காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – கலந்தாய்வு வெளியீடு!

0
TNPSC குரூப் 4 தட்டச்சர் காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு - கலந்தாய்வு வெளியீடு!
TNPSC குரூப் 4 தட்டச்சர் காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு - கலந்தாய்வு வெளியீடு!
TNPSC குரூப் 4 தட்டச்சர் காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – கலந்தாய்வு வெளியீடு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தால் கடந்த 2019ம் ஆண்டு வெளியிடப்பட்ட குரூப் 4 தகுதியில் அடங்கிய தட்டச்சர் பணிக்கு தெரிவு செய்யப்பட்ட தேர்வர்களுக்கு முதல்கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC கலந்தாய்வு:

TNPSC தேர்வு வாரியத்தால் கடந்த 2019ம் ஆண்டு குரூப் 4 தகுதியில் அடங்கிய தட்டச்சர் பதவிக்கு நேரடி நியமன அடிப்படையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. பின்னர் அதற்கான எழுத்துத்தேர்வு கடந்த 2019 செப்.1ம் தேதி நடத்தப்பட்டு அதற்கான தேர்வு முடிவுகள் 2019 நவ.12ம் தேதி வெளியிடப்பட்டது. அந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முதல்கட்டமாக மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஏற்கனவே நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது இரண்டாம் கட்ட கலந்தாய்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC 365 காலிப்பணியிடங்கள் 2021 – தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இத்தகைய இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை – 3 தேர்வாணையச்சாலை (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் டிச.18 மற்றும் 20ம் தேதிகளில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கலந்தாய்விற்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் மதிப்பெண், ஓட்டுமொத்த தரவரிசை எண், இட ஒதுக்கீட்டு விதி மற்றும் காலிப்பணியிடங்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிக பட்டியல் TNPSC இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

மேலும் மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும் நாள், நேரம் மற்றும் விபரங்கள் அடங்கிய நுழைவு கடிதத்தினை TNPSC தேர்வாணைய அதிகாரபூர்வ இணையதளமான https://www.tnpsc.gov.in/ ல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான விபரம் SMS மற்றும் e-Mail மூலம் தெரிவிக்கப்படும். கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படும் அனைவரும் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று உறுதியில்லை. மேலும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட தேர்வர்கள் கலந்தாய்வு நடைபெறும் குறிப்பிட்ட நாள் அல்லது நேரத்திற்கு வர தவறினால் மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!