TNPSC குரூப் 4 பாட ஆன்லைன் வகுப்புகள் – தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு

0
TNPSC குரூப் 4 பாட ஆன்லைன் வகுப்புகள் - தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு
TNPSC குரூப் 4 பாட ஆன்லைன் வகுப்புகள் - தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு

TNPSC குரூப் 4 பாட ஆன்லைன் வகுப்புகள் – தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 போட்டித் தேர்வு எழுத உள்ளவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளது. அதன்படி ஆன்லைன் பயிற்சி வகுப்பானது காலை 10 முதல் 11 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 4 பயிற்சி வகுப்பு:

தமிழகத்தில் அரசு பணிகளுக்கு தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் (TNPSC) குரூப் தேர்வுகளை நடத்துகிறது. தற்போது அரசு பணிகள் தேர்வாணையம் 2022ம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்வுகள் குறித்த கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதில் 2022ம் ஆண்டில் 22 வகையான தேர்வுகளை நடத்த TNPSC திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administative Officer), வரித் தண்டலர் (Bill Collector), நில அளவர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman)ஆகிய பணியிடங்களுக்கு நடத்தப்படும் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.குரூப் 4 பிரிவில் 5,244 காலிப்பணியிடங்கள் இருக்கும் நிலையில், இதற்கான போட்டிகள் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

எனவே பலரும் தற்போது தங்களை தேர்வுக்கு தயார்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் 14.12.2021 அன்று காலை 10 -11 மணி வரை ஆன்லைன் வகுப்பு நடத்த உள்ளது. இந்த வகுப்பில் தேர்வர்களுக்கு குரூப் 4 தேர்வு முறை மதிப்பெண் விவரங்கள், பாடத்திட்டம், தேர்வுக்கு எளிதாக தயாராகும் வழிமுறைகள் குறித்து பயிற்றுனர் விளக்கவுள்ளார். இந்த வகுப்பு பங்கு பெற விரும்புவோர் கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்து பயன் பெறலாம் என்று ExamsDaily கேட்டு கொள்ளப்படுகிறது. அடுத்தடுத்த அரசு தேர்வுகள் குறித்த ஆன்லைன் வகுப்புகளும் இனி நடைபெறும். தேர்வர்கள் ExamsDaily வலைத்தள தளத்துடன் இணைந்திருங்கள். மேலும் இந்த ஆன்லைன் வகுப்புகளை கீழே உள்ள இணைய முகவரி வாயிலாக தேர்வர்கள் எப்போது வேண்டுமானாலும் காணலாம். தேர்விற்கு தயாராவோர் எந்த நேரத்திலும் இந்த வகுப்பினை பயன்படுத்தி தயார் படுத்திக் கொள்ளலாம்.

TNPSC Group 4 Online Mock Class 2021

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!