TNPSC குரூப் 4 அறிவிப்பு 2022 – வெளியீடு || 7,382 காலிப்பணியிடங்கள்

0
TNPSC குரூப் 4 அறிவிப்பு 2022 வெளியீடு
TNPSC குரூப் 4 அறிவிப்பு 2022 வெளியீடு

TNPSC குரூப் 4 அறிவிப்பு 2022 – வெளியீடு || 7,382 காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் TNPSC குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக, உலகை உலுக்கிய கொரோனா நோய் பாதிப்பால் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. தற்போது அனைத்து நிலைமைகளும் சரியாகி உள்ளதால், அதிகப்படியான தேர்வர்கள் எதிர்பார்த்து இருந்த குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வி தகுதி 10 ஆம் வகுப்பு. எனவே தகுதியானவர்கள் வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TNPSC
தேர்வின்  பெயர் Group 4
பணியிடங்கள் 7,382
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online
குரூப் 4 காலிப்பணியிடங்கள்
  • Village Administrative Officer (VAO) Office
  • Junior Assistant (Non–Security)
  • Junior Assistant (Security)
  • Bill Collector Grade-I (Post Code:)
  • Field Surveyor
  • Draftsman
  • Typist
  • Steno-Typist (Grade–III)
  • என மொத்தம் 7,382 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 7,382 பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வில் 81 பணியிடங்கள் விளையாட்டு கோட்டா மூலம் நிரப்பப்படும்.

TN Job “FB  Group” Join Now

TNPSC Group 4  வயது வரம்பு:

இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

கல்வி தகுதி:
  • விண்ணப்பதார்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் உயர்நிலைப் படிப்புகளில் சேர்க்கை வழங்கக்கூடிய குறைந்தபட்ச மதிப்பெண்களுடன் எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தட்டச்சர் மற்றும் பதவிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி உடன், தட்டச்சு எழுதுவதில் அரசு தொழில்நுட்பத் தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
  • ஸ்டெனோ-டைப்பிஸ்ட் (கிரேடு – III) பதவிக்கு தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து இரண்டிலும் அரசு தொழில்நுட்பத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழி அறிவும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:

விண்ணப்பதார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.  எழுத்து தேர்வுகள் ஜூலை 24 ஆம் தேதி காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Group 4 Exam Pattern – தேர்வு மாதிரி :

குரூப் 4 தேர்வு 3 மணி நேரம் நடைபெற உள்ளது. இந்த தேர்வில் 200 கேள்விகள் இடம் பெற்றிருக்கும். இதற்கு 1.5 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 300 பணியிடங்கள் காலியாக உள்ளன. 200 கேள்விகளில் 100 கேள்விகள் முழுக்க முழக்க தமிழில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 4 விண்ணப்பக் கட்டணம்:
  • ஒரு முறை பதிவு கட்டணம் ரூ. 150/- (5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்). ஏற்கனவே பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை.
  • தேர்வுக் கட்டணம் ரூ.100/-
TNPSC விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். குரூப் 4 பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது நாளை (30.03.2022) அன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணியிடங்களுக்கு மார்ச் 30 முதல் ஏப்ரல் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.

Download TNPSC Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!