குரூப் 4 முறைகேடு நடைபெற்றது எப்படி..? பரபரப்பு வாக்குமூலங்கள்..!

0
குரூப் 4 முறைகேடு
குரூப் 4 முறைகேடு

குரூப் 4 முறைகேடு நடைபெற்றது எப்படி..?

டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம் காந்தன் சிபிசிஐடி போலீசார் காவலில் வைத்து விசாரிக்கும் போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக அவர் தந்த வாக்குமூலத்தில் முறைகேடு எவ்வாறு நடந்தது என கூறியுள்ளார்.

சென்னை பள்ளிக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் புரோக்கர் பழனி என்பவர் மூலம் முகப்பேரை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. இவரின் உதவி மூலம் 2019ல் நடந்த குரூப் 4 தேர்வில் முறைகேடாக பலரை வெற்றி அடைய செய்ய வேண்டும் எனவும் அதற்காக 15 லட்சம் ரூபாய் தருவதாகவும் மேலும் 2 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் தொகையும் கொடுத்தார்.

பக்கா பிளான்..!

ஜெயக்குமார் இந்த முறைகேட்டிற்கு முக்கிய மூளையாக செயல்பட்டுள்ளார். எவ்வாறு விடைத்தாளை மாற்றுவது, விடைகளை திருத்துவது என பிளான் போட்டு கொடுத்துள்ளார். அவர் கூறியேவாறே ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வெழுதும் அவருக்கு பணம் கொடுத்தவர்களுக்கு உதவி செய்வதாக பிளான் செய்யப்பட்டது. தேர்வு எழுதும் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சீக்கிரமாகவே மை மறைந்துவிட கூடிய சிறப்பு மேஜிக் பேனாக்களை ஜெயக்குமார் தந்தார்.

ஸ்பெஷல் ரூம்..!

தேர்வு முடிந்ததும் விடைத்தாள்களை சென்னைக்கு கொண்டு செல்வதற்க்காக செப்டம்பர் 1-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் கருவூலத்தில் இருந்து சென்னைக்கு இரவு 8 மணிக்கு ஏபிடிபார்சல் சர்வீஸ் வேனில் விடைத்தாள்கள் ஏற்றப்பட்டது. விடைத்தாள்கள் வேனில் இருந்த ஸ்பெஷல் ரூமில் வைக்கப்பட்டது. விடைத்தாள்களை சென்னைக்கு வேனில் கொண்டு வரும் பணி எனக்கும் மேலும் என்னுடன் வேலை பார்க்கும் டிஎன்பிஎஸ்சி டைப்பிஸ்ட் மாணிக்கவேலிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது.

ஸ்பெஷல் ரூமில் விடைத்தாள்கள் வைக்கப்பட்டு சாவி என்னிடம் இருந்தது. பிறகு வேன் புறப்பட்டதும் பின்னாடியே காரில் ஜெயக்குமார் வந்து கொண்டிருந்தார். சிவகங்கையை தாண்டி பாதுகாப்புக்கு வந்த போலீசார், மாணிக்கவேலை எதிரே இருந்த ஒரு ஹோட்டலில் சாப்பிட வைத்துவிட்டு நான் மட்டும் வேனுக்கு திரும்பி வந்து, காரில் இருந்த ஜெயக்குமாரிடம் சாவியை தந்தேன். அவர் அந்த பணம் கொடுத்த நபர்களின் விடைத்தாளை மற்றும் எடுத்து விட்டு அங்கிருந்து சென்று விடைத்தாள்களை திருத்தி கொண்டு வந்து விடிகாலை விக்கிரவாண்டியில் ஒரு டீக்கடையில் டீ சாப்பிடும் நேரத்தில் விடை திருத்தப்பட்ட விடைத்தாள்கள் மீண்டும் ஸ்பெஷல் ரூமில் வைக்கப்பட்டு டிஎன்பிஎஸ்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!