TNPSC குரூப் 4 தேர்வு காலிப்பணியிடங்கள்- 15,000 ஆக உயர்வு? வலுக்கும் கோரிக்கை!

0
TNPSC குரூப் 4 தேர்வு காலிப்பணியிடங்கள்- 15,000 ஆக உயர்வு? வலுக்கும் கோரிக்கை!
TNPSC குரூப் 4 தேர்வு காலிப்பணியிடங்கள்- 15,000 ஆக உயர்வு? வலுக்கும் கோரிக்கை!
TNPSC குரூப் 4 தேர்வு காலிப்பணியிடங்கள்- 15,000 ஆக உயர்வு? வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் அரசுத்துறை பணியிடங்கள் அதிகமாக இருப்பதால் TNPSC குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கையை 15 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் என போட்டி தேர்வர்கள் அமைப்பு தமிழ்நாடு அரசுக்கும், அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கும் கடிதம் எழுதி இருக்கின்றனர்.

TNPSC குரூப் 4 தேர்வு

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக குரூப் 4 தேர்வு கொரோனா காரணமாக நடத்தப்படவில்லை. அதன் பின் 2022 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி 7301 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் 3 ஆண்டுகளாக தேர்வு நடக்காமல் 15 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில் வெறும் 7301 பணியிடங்களுக்கு மட்டுமே தேர்வு நடைபெற்றது. இது குறித்து போட்டி தேர்வர்கள் அமைப்பு தமிழ்நாடு அரசுக்கும், அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கும் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறது

அதில், குரூப் 4 பணியிடங்கள் சுமார் 15 ஆயிரம் காலியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் பணி ஓய்வு பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால் அது மேலும் அதிகமாக இருக்கிறது. கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வில் குறைந்தபட்சம் 10 ஆயிரம் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. 2018 ஆம் ஆண்டு 11800 பணியிடங்களுக்கும், 2019 ஆம் ஆண்டு 9500 பணியிடங்களுக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு மிகவும் குறைவான அளவே பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது.

30,000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்.. ஏப்ரலில் பணி நியமனம் – உறுதியளிக்கும் அரசு!

மேலும் இந்த ஆண்டு வினாத்தாள் கடினமாகவும் தவறான சில கேள்விகளும் இடம் பெற்றதால் எல்லை மதிப்பெண் பெற்றவர்கள் கடினமாக படித்தும் பயனில்லாமல் போனது. இதனை கருத்தில் கொண்டு TNPSC குரூப் 4 தேர்வுக்கு 15000 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட வேண்டும் என பணிவன்புடன் கேட்டுக் கொள்வதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!