TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு தயாராகுபவர்கள் கவனத்திற்கு – அதிக மதிப்பெண் பெற ஈஸி டிப்ஸ் இதோ!

0
TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு தயாராகுபவர்கள் கவனத்திற்கு - அதிக மதிப்பெண் பெற ஈஸி டிப்ஸ் இதோ!
TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு தயாராகுபவர்கள் கவனத்திற்கு – அதிக மதிப்பெண் பெற ஈஸி டிப்ஸ் இதோ!

ஜூன் மாதம் 24 ஆம் தேதியன்று நடத்தப்பட இருக்கும் குரூப் 4 தேர்வில் தமிழ் பாடப்பிரிவில் 95 வினாக்களுக்கு மேல் சரியாக விடையளிக்க சில முக்கிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.

குரூப் 4 தேர்வு:

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வரும் ஜூன் 24 ஆம் தேதியன்று குரூப் 4 போட்டித்தேர்வுகளை நடத்த இருக்கிறது. இப்போது, சுமார் 7382 காலிப்பணியிடங்களுக்கு நடத்தப்படும் குரூப் 4 தேர்வை எழுத 21 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இப்போது குரூப் 4 பணியிடங்களுக்கான போட்டிகள் அதிகரித்துள்ளதால் தேர்வர்கள் அதிகளவு மதிப்பெண்களை எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த தேர்வை பொறுத்தவரை தமிழ் பாடப்பகுதியில் இருந்து எளிதாக மதிப்பெண்களை எடுக்க முடியும் என்பதால் இதில் 95 மதிப்பெண்களுக்கு மேலே பெற சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

TN TET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

இது தவிர, கடந்த குரூப் 4 தேர்வில் கட் ஆஃப் மதிப்பெண்கள் 160க்கு மேல் இருந்த நிலையில், இந்த ஆண்டும் கட் ஆஃப் மதிப்பெண்கள் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இப்போது தேர்வர்கள் 160 வினாக்களுக்கு மேல் எடுக்க வேண்டும் என்றால் தமிழ் பாடத்தில் 95 வினாக்களுக்கு மேல் மதிப்பெண்களை எடுக்க வேண்டும். ஏனென்றால் பொது அறிவு பகுதியில் மதிப்பெண்கள் வருவது கடினம். அதனால் தமிழ் மொழிப்பாடப்பிரிவில் ஸ்கோர் செய்ய, தமிழ் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் ஆகிய தலைப்புகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.40 ஆயிரம் உயர்வு? ஜாக்பாட் அறிவிப்பு!

இதற்காக 6 முதல் 10 வரையுள்ள தமிழ் பாட புத்தகத்தை படிக்க வேண்டும். அந்த வகையில் இந்த புத்தகத்தில் இருக்கும் செய்யுள், உரைநடை, இலக்கணம், செய்யுளில் கேட்கப்பட்டுள்ள நூற்குறிப்பு, நூலாசிரியர் குறிப்பு, நூலாசிரியர் எழுதிய பிற நூல்கள், காலம் போன்ற அனைத்து தகவல்களையும் கற்றுக்கொள்ள வேண்டும். இதனுடன் பாடங்களின் முடிவில் உள்ள புக் பேக் வினாக்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மேலும், பாடங்களுக்கு பிறகு கொடுக்கப்பட்டிருக்கும் பெட்டிச் செய்திகள், அடைப்புக்குள் இருக்கும் தகவல்களையும் தெரிந்துகொள்வது அவசியம்.

LPG சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு – புதிய விதிகள் அமல்!

மேலும், நூல் மற்றும் நூலாசிரியர் தொடர்பான வினாக்கள் தேர்வுகளில் அதிகம் இடம்பெறுவதால் அதிலும் கவனம் செலுத்துவது அவசியம். தொடர்ந்து மனப்பாட செய்யுள், அதற்குரிய நூல், நூலாசிரியர் விவரங்கள் உரைநடைப் பகுதியில் ஹைலைட் செய்யப்பட்ட தகவல்கள், அறிவியல் சார்ந்த மற்றும் ஆண்டுகள் குறிப்பிடப்பட்ட வினாக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தமிழ் இலக்கண பகுதியை பொருத்தளவு பாடப்பகுதியிலிருந்து பெரும்பான்மையான வினாக்கள் கேட்கப்படும். இந்த இலக்கண பகுதியை செய்யுள் மற்றும் உரை நடைப்பகுதியோடு சேர்த்து படிப்பது நல்லது. சந்தர்ப்பம் கிடைத்தால் முந்தைய ஆண்டு தேர்வு வினாத்தாள்களை திருப்பி பார்ப்பதும் பயனளிக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!