TNPSC குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு 2021 – தேர்வர்கள் எதிர்பார்ப்பு!

1
TNPSC குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு 2021 - தேர்வர்கள் எதிர்பார்ப்பு!
TNPSC குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு 2021 - தேர்வர்கள் எதிர்பார்ப்பு!
TNPSC குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு 2021 – தேர்வர்கள் எதிர்பார்ப்பு!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் வெளியிடப்பட்ட வருடாந்திர தேர்வு கால அட்டவணையின் படி குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் தேர்வர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

TNPSC தேர்வு:

தமிழக அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு வருடத்திற்கும் நடைபெற உள்ள தேர்வுகளின் பட்டியல் வருடாந்திர அட்டவணையாக வெளியிடப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறவில்லை. இதனால் பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. எனவே விரைந்து தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

இணைய சூதாட்டத்திற்கு தடை விதிப்பு – மாநில அரசு உத்தரவு!

மேலும் 2021 வருடாந்திர தேர்வு கால அட்டவணையின் படி செப்டம்பர் மாதம் குரூப் 4 & VAO தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாக வேண்டும். ஏற்கனவே பல தேர்வுகள் நடத்தப்படாமல் உள்ளதால் நிலுவையில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ASSISTANT PUBLIC PROSECUTOR IN THE PROSECUTION DEPARTMENT, COMBINED GEOLOGY SERVICES மற்றும் PRINCIPAL / VICE-PRINCIPAL / ASSISTANT DIRECTOR IN THE EMPLOYMENT AND TRAINING DEPARTMENT என அடுத்தடுத்த தேர்வு அறிவிப்புகள் வெளியானது. இதற்கு விண்ணப்ப பதிவும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பல மாதங்களுக்கு பின்னர் TNPSC இந்த அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளதால் அடுத்தடுத்து புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.136 குறைவு – இன்றைய நிலவரம்!

இதனால் செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட வேண்டிய குரூப் 4, VAO தேர்வுகள் குறித்த அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்பட வேண்டும் என எதிர்பார்ப்பதாக தேர்வர்கள் தெரிவித்து உள்ளனர். அவ்வாறு வெளியிடப்பட்டால் தேர்வுகள் டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட வாய்ப்புள்ளது. மேலும் குரூப் 4 தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தை விரைந்து வெளியிட வேண்டும் என ஏற்கனவே கோரிக்கை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Download Notification

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!