TNPSC குரூப் 4 VAO தேர்வெழுத திட்டமிடுவோர் கவனத்திற்கு – A டூ Z தகவல்கள் இதோ!

0
TNPSC குரூப் 4 VAO தேர்வெழுத திட்டமிடுவோர் கவனத்திற்கு - A டூ Z தகவல்கள் இதோ!
TNPSC குரூப் 4 VAO தேர்வெழுத திட்டமிடுவோர் கவனத்திற்கு - A டூ Z தகவல்கள் இதோ!
TNPSC குரூப் 4 VAO தேர்வெழுத திட்டமிடுவோர் கவனத்திற்கு – A டூ Z தகவல்கள் இதோ!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தவிருக்கும் குரூப் 4 தேர்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தேர்வு தொடர்பான சில முக்கியமான விவரங்களை தெரிந்து கொள்வது அவசியமாகும். இந்த விவரங்களை இப்பதிவில் காணலாம்.

TNPSC தேர்வு

தமிழக அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் போட்டித்தேர்வுகள் மூலம் நிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட சில துறைகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு குறித்த அட்டவணை அதற்கு முந்தைய ஆண்டிலேயே வெளியிடப்படுவது வழக்கமானதாகும். அதன் படி வரவிருக்கும் 2022ம் ஆண்டிற்கான TNPSC தேர்வு கால அட்டவணை கடந்த வாரத்தில் வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் ஜன.3 முதல் பள்ளிகள் திறப்பில் மாற்றம் – சுழற்சி முறை வகுப்புகள் ரத்து! அரசாணை வெளியீடு!

இந்த அட்டவணையின் படி, குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு மார்ச் மாதத்தில் வெளியாகும். அறிவிப்புகள் வெளியான 40 நாட்கள் கழித்து தேர்வு நடத்தப்படும். இப்போது குரூப் 4 தேர்வு எழுத காத்திருப்பவர்கள் சில முக்கியமான விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமானதாகும். அந்த வகையில் இந்த குரூப் 4 தேர்வில் கலந்து கொள்வதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே போதும் என்பதால் இத்தேர்வுக்கு பல லட்சக்கணக்கானவர்கள் போட்டியிடுவார்கள். மேலும் இது எழுத்து தேர்வை மட்டுமே அடிப்படையாக கொண்டிருப்பதால் இதற்கு போட்டி அதிகம்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

தவிர இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் அவர்கள் சொந்த ஊரிலேயே பணியமர்த்தப்படுவார்கள் என்பது இத்தேர்வின் கூடுதல் சிறப்பம்சம் ஆகும். பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் குரூப் 4 தேர்வை பல லட்சக்கணக்கானவர்கள் எழுதும் நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இத்தேர்வு மறுபடியும் நடத்தப்படுவதால் இதற்கான போட்டி இன்னும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இப்போது குரூப் 4 தேர்வு மூலம் என்னென்ன பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது, தகுதி, தேர்வுக்கு எப்படி தயாராவது குறித்த விவரங்களை காணலாம்.

பதவிகள்:
  • கிராம நிர்வாக அலுவலர் (Village Adminisrtative Officer)
  • இளநிலை உதவியாளர் (Junior Assistant)
  • தட்டச்சர் (Typist)
  • சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist)
  • வரித் தண்டலர் (Bill Collector)
  • நில அளவர் (Field Surveyor)
  • வரைவாளர் (Draftsman)
கல்வித் தகுதி:
  • பத்தாம் வகுப்பு தேர்ச்சி முதன்மையானதாகும்.
  • தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை அல்லது முதுநிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
  • பொதுவான வயது வரம்பு 18 வயது முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
  • பிரிவுகளுக்கு ஏற்றபடி வயது வரம்பில் தளர்வுகள் இருக்கும்.
மொழிப்பாடம்:
  • குரூப் 4 தேர்வில், முதல் 100 வினாக்கள் தமிழ் மொழி பாடத்திலிருந்து கேட்கப்படும்.
  • இந்த தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.
  • இந்த மதிப்பெண்கள் குறையும் பட்சத்தில் அடுத்த தாள்கள் மதிப்பீடு செய்யப்படாது.
  • இந்த மதிப்பெண்கள் இறுதி மதிப்பீட்டு கணக்கிடுதலில் சேர்த்துக் கொள்ளப்படும்.
  • இந்த பாடப்பிரிவில், தமிழ் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்கள், தமிழ் தொண்டும் ஆகிய தலைப்புகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
பொது அறிவு
  • இப்பிரிவில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்படும்.
  • இதில் 75 பொது அறிவு வினாக்களும் , 25 திறனறி தேர்வு அடங்கும்.
  • பொது அறிவு பகுதியில் அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், வரலாறு, இந்திய அரசியல், பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம் ஆகியவற்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
  • அனைத்து வினாக்களும் கொள்குறி வகையில் இருக்கும்.
முக்கியமான பாடங்கள்:

தமிழ் மொழிப்பாட பிரிவில்,10ம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இதில் மாற்றங்கள் இருக்கலாம். தொடர்ந்து 6 முதல் 10ம் வகுப்பு தமிழ் பாட புத்தகங்களிலிருந்தும் கேள்விகள் கேட்கப்படலாம். கூடுதலாக 11 மற்றும் 12 வகுப்பு தமிழ் புத்தகங்களையும் படித்துக் கொள்வது நல்லது. இந்த அடிப்படையில் தேர்வுக்கு தயாரானால் சுமார் 90 முதல் 95 மதிப்பெண்கள் கிட்டும் வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து பொது அறிவு பகுதியில் பெரும்பாலும் 6 முதல் 10 வகுப்பு வரையிலான பள்ளிப் பாடப்புத்தகங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டும்.

தமிழகத்தில் நுழைந்த ஓமைக்ரான் வைரஸ் – முதல் நபருக்கு தொற்று உறுதி! பொதுமக்கள் அச்சம்!

தவிர உலக மற்றும் நாட்டு நடப்புகளையும் தெரிந்து வைத்து கொள்வது நல்லது. நடப்பு நிகழ்வுகளை பொறுத்தவரை தேர்வு அறிவிப்புக்கு முந்தைய கணக்கில் 1 வருடம் வரையில் நடைபெற்ற நிகழ்வுகளை தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். கணித படங்களை பொருத்தளவு 6 முதல் 10 வகுப்பு வரை உள்ள பாடபுத்தகங்களில் உள்ள கணக்குகளை தினமும் 1 முதல் 2 மணி நேரம் வரை பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!