TNPSC Group 4 & VAO தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கவனத்திற்கு ? எளிய வழிமுறைகள் இதோ!

0
TNPSC Group 4 & VAO தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கவனத்திற்கு ? எளிய வழிமுறைகள் இதோ!
TNPSC Group 4 & VAO தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கவனத்திற்கு ? எளிய வழிமுறைகள் இதோ!
TNPSC Group 4 & VAO தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கவனத்திற்கு ? எளிய வழிமுறைகள் இதோ!

தமிழகத்தில் உள்ள அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப TNPSC தேர்வாணையம் போட்டித்தேர்வுகளை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

தேர்வர்கள் கவனத்திற்கு:

தமிழகத்தில் உள்ள அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தகுதியான ஆட்கள் நியமிக்கப்படுகிறார்கள். மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குரூப் 2 தேர்வு வருகிற மே 21ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வு மூலமாக 5529 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதையடுத்து குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வு மூலமாக 7301 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஏப்.30 வரை மீண்டும் முழு ஊரடங்கு – பிரதமரின் முடிவு என்ன?

இதனை தொடர்ந்து இத்தேர்வு ஒரே ஒரு நிலை கொண்ட தேர்வு என்பதாலும் 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் என்பதாலும் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். அத்துடன் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற ஏப்ரல் 28ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.
முதலாவதாக https://www.tnpsc.gov.in/Home.aspx என்ற  அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

இதையடுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

1. முதலில் https://www.tnpsc.gov.in/Home.aspx இணையதளத்திற்கு  சென்று விண்ணப்பிக்க என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

2. இப்போது குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு காண்பிக்கப்படும். இதனை கிளிக் செய்து படித்து பார்த்து கொள்ள வேண்டும்.

3. அடுத்ததாக அப்ளை நவ் என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்போது பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு தங்களின் கணக்கிற்குள் உள் நுழைய வேண்டும்.

4. மேலும் நிரந்தப் பதிவு மேற்கொள்ளாதவர்கள் முகப்பு பக்கத்துக்கு சென்று புதிய பதிவு விழைவோர் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

5. இப்போது முகப்பு பக்கத்துக்கு வந்து தங்களின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளீட்டு குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

6. இதில் விண்ணப்ப விவரங்கள், தகவல்தொடர்பு விவரங்கள், கல்வித் தகுதி விவரங்கள் உள்ளிட்ட 10 படிநிலைகள் கொடுக்கப்பட்டிருக்கும்.

7. இந்த 10 படிநிலைகளை சரியாக பூர்த்தி செய்து விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின் அதை நீங்கள் பதிவிறக்கம் செய்தோ அல்லது பிரிண்ட் அவுட் எடுத்தோ வைத்து கொள்ள வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!