TNPSC குரூப் 4 VAO தேர்வு பாடத்திட்டம், கட் ஆப் மதிப்பெண்கள் – முழு விபரம் இதோ!

0
TNPSC குரூப் 4 VAO தேர்வு பாடத்திட்டம், கட் ஆப் மதிப்பெண்கள் - முழு விபரம் இதோ!
TNPSC குரூப் 4 VAO தேர்வு பாடத்திட்டம், கட் ஆப் மதிப்பெண்கள் - முழு விபரம் இதோ!
TNPSC குரூப் 4 VAO தேர்வு பாடத்திட்டம், கட் ஆப் மதிப்பெண்கள் – முழு விபரம் இதோ!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது குரூப் 4 மற்றும் VAO தேர்வுகளுக்கு பாடத்திட்டம் மற்றும் கட் ஆப் மதிப்பெண்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

குரூப் 4, VAO தேர்வு:

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து அரசுத்தேர்வுகள் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஆலோசனைகளின் முடிவாக பல்வேறு தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் TNPSC தேர்வாணையம் மூலம் VAO, குரூப் I முதல் V வரை பல்வேறு பணிகளுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளில் குரூப் – IV மற்றும் VAO தேர்வுக்கு பெரும்பாலானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.

TNPSC Coaching Center Join Now

இந்த தேர்வின் மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர், வரித்தண்டலர் உள்ளிட்ட பதவிகள் பணி நியமனம் செய்யப்படுகின்றன. குரூப் – IV மற்றும் VAO தேர்வுகள் 10 வகுப்பு தேர்ச்சி அடிப்படையில் நடத்தப்படுகிறது. மேற்கண்ட பதவிகளுக்கு எழுத்துத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. அதனாலேயே இந்த தேர்வு லட்சக்கணக்கான தேர்வர்கள் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்வில் 200 வினாக்கள் கேட்கப்படும் அதில் 100 மொழிப்பாட வினாக்கள், மீதமுள்ள 100 வினாக்கள் பொது அறிவு வினாக்கள் கேட்கப்படும். அதில் 75 பொது அறிவு, 25 திறனறி வினாக்கள் கேட்கப்படும். அதில் பொது அறிவுப்பகுதியில் அறிவியல், நடப்பு நிகழ்வுகள், வரலாறு, புவியியல், இந்திய அரசியல், பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், திறனறி வினாக்கள் உள்ளிட்ட பிரிவுகளில் வினாக்கள் இடம்பெறும். 200 வினாக்களுக்கு 300 மதிப்பெண் ஒரு வினாவிற்கு 1.5 மதிப்பெண் என்ற வகையில் வழங்கப்படும்.

திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – டிசம்பர் மாத உற்சவ விழாக்கள் அறிவிப்பு!

இந்த தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு 90 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி ஆகும். ஆனால் பல்வேறு பிரிவுகள் வாரியாக கட் ஆப் மதிப்பெண் வழங்கப்படுகிறது. இந்த கட் ஆப் மதிப்பெண் பொறுத்தவரை பொதுப்பிரிவினை சேர்ந்த தேர்வர்கள் 160 மதிப்பெண் பெற்றவர்களும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!