TNPSC குரூப் 3 தேர்வர்களே முக்கிய அறிவிப்பு வெளியீடு – உடனே பாருங்க!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த சிவில் சேவைகள் (III) தேர்வினை கடந்த 28.01.2023ம் தேதி நடத்தியது. தற்போது இத்தேர்வின் எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 3:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் III தேர்வுக்கான அறிவிப்பு கடந்த செப்டம்பர் 2022ல் அறிவிக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதற்கான OMR அடிப்படையிலான எழுத்து தேர்வு 28.01.2022 அன்று நடத்தப்பட்டது.
நிலைய தீயணைப்பு அலுவலர், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர், தொழில் கூட்டுறவு சங்கங்களின் உதவி மேற்பார்வையாளர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி (பயிற்சி பிரிவு) துறையில் ஸ்டோர் கீப்பர் மற்றும் ஸ்டோர்-கீப்பர், கிரேடு-II ஆகிய பதவிகளுக்கு குரூப் 3 தேர்வின் மூலம் பணியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தற்போது எழுத்துத்தேர்வின் முடிவுகளை தரவரிசை அடிப்படையில் வெளியிட்டுள்ளது. இதனை தேர்வர்கள் தங்கள் பதிவு எண், பிறந்த தேதி மற்றும் கேப்ட்சா ஆகியவற்றை உள்ளிட்டு அறிந்து கொள்ளலாம்.